Sunday, July 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ


         300 ஆண்டுகளாக கிளார்க்குகளை உருவாக்கிய கல்விமுறையில் மாற்றம் எதிர்பார்த்த கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையால் மாற்றம் நிகழும் என்பது மறுக்கப்படாத உண்மை.

    மாணவனின் முழுமையான திறனை இம்மதிப்பீட்டு முறையால் வெளிக் கொணரலாம்  2009 கட்டாய இலவச கல்விச் சட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் முழுமையான திறன் வெளிப்படும் வகையில் மதிப்பீடு அமைய அனைத்து ஆசிரியர்களும் மாணவனை தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் மதிப்பிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து பல சுற்றறிக்கைகள் மற்றும் ஜி.ஓ.க்கள் வெளியிடுவது வரவேற்க்கத்தக்கது.

     நான் படிக்கும் காலத்தில் தமிழாசிரியர் அறம் செய்ய விரும்பு. ஆறுவது சினம் . இயல்பது கறவேல் என சொல்லி கொடுத்தார். இன்றும் அப்படித்தான். ஆனால் அதற்கான அர்த்தம் கேட்டால், அதற்கான உரையை எடுத்து படித்து , அதன் பின் அர்த்தம் சொல்லுவார்கள். நானும் அதை புரியாமலே மனப்பாடம் செய்து கற்று வந்து, அதன் பின் அதனை அனுபவ ரீதியில் அர்த்தம் பெற்றுள்ளேன். அதாவது புரியாமல் அதனை மனப்பாடம் செய்து விடுவது. அர்த்தம் பற்றி பயம் கொள்வது இல்லை. வருத்தப்படுவதில்லை. ஏனெனில் அதனை அடிப்பிறலாமல் எழுதினால் மதிப்பெண். ஆனால், பள்ளிப்படிப்பை முடித்தப்பின் தான் அதற்கான முழுமையான அர்த்தத்தைப் பெற்று , கற்றதன் பயனை அனுபவிக்க முடிந்தது.

      ஆனால், இந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் புரிந்து செயல் படுதல் மட்டுமே சாத்தியம். அனுபவ ரீதியாக ஒரு உண்மையை தெரிந்த பின் அல்லது ஒரு கருத்தினை கற்றுத்தரும்போது அதன் உண்மை தன்மை உணரும் படி கற்றுத்தந்தால் மட்டுமே அவனை முழுமையாக மதிப்பிட முடியும். அனுபவ ரீதியாக தெரிந்த பின் கற்றல் மனதில் அழுத்தமான கருத்து  உருவாகிவிடும். 300 ஆண்டுகளாக மனப்பாடம் செய்து தேர்வில் புரிதல் இன்றி கக்கும் முறை அடியோடு ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது.

     0 முதல் 100 வரை 101 முறையில் மாணவர்களை மதிப்பெண் சார்ந்து தரம் பிரித்த முறை மாற்றப்பட்டு, 9 வகையான ஸ்கேல் கொண்டு நாம் மாணவனை வரிசைப் படுத்தப் போகிறோம். இதனால் மதிப்பெண் ரீதியில் மாணவனுக்கு அழுத்தம் இல்லை. பெற்றோர்கள் 100 க்கு 100 என்ற மன அழுத்தத்தை மாணவனிடம் ஏற்படுத்தும் சாத்தியம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் 2 ஸ்கேல் முறை மட்டுமே உள்ளதையும் அறிய வேண்டும்.     

      நமக்கல் மாவட்டதில் நடைப்பெறும் பள்ளிப் பண்ணைகளின் மவுசு இனி குறையும். மனப்பாடம் செய்து அதன் மூலம் இஞ்னியரிங்க் மற்றும் மருத்துவம் செல்லும் நிலை முற்றிலும் மாற்றப்படும். புரிதல், நன்கு அறிதல், தெரிந்த கருத்தினை பயமின்றி எடுத்துரைத்தல், எடுத்துரைப்பது மட்டுமின்றி அக்கருத்தினை நடைமுறைப்படுத்த தெரிந்திருத்தல் போன்ற பண்புகளை பெற்றவனாக மாணவன் இருக்க வாய்ப்பு இப்புதிய மதிப்பீட்டு முறையால் சாத்தியம். அதற்கு முன்பு அப்படி அல்ல.

       பள்ளிப்பண்ணைகளால் ஒரு +1 மாணவனை இருதய அறுவை சிகிச்சை எப்படி செய்ய வேண்டும் என்பதை எந்த வித திக்கு திணறல் இன்றி பிழையும் இன்றி மனப்பாடம் செய்து அதனை எழுத சொல்லிக் கொடுக்க முடியும். இருதய அறுவை சிகிச்சைக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் எப்படி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மனப்பாடம் செய்த ஒருவனிடம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? யாரும் முன் வருவீர்களா? முடியாது . இனி இப்படிப்பட்ட மொட்ட மனப்பாடம் சாத்தியம் இல்லை.

     அரசு நல்ல திட்டத்தை கொண்டு வந்தாலும் அதனை அமுல் படுத்த ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மனம் வைத்தால் தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். பெற்றோர்களும் அதற்கு ஒத்துழைப்பு தந்து , அனைத்து பள்ளிகளிலும் இந்த புதிய மதிப்பீட்டு முறை சி.சி.இ நடைபெற முயற்சி எடுப்பதுடன் அதனை 100 சதவீதம் வெற்றியடைய செய்ய வேண்டும்.    

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

என்னதான் படித்தாலும் அனுபவங்கள்தான் நமக்கு ஆசான்கள் இல்லையா....!!!

விச்சு said...

ஆசிரியர்களும் இந்த முறையை சரியாகப்பயன்படுத்தினால் மாணவர்களின் திறன்கூடும். சிபிஎஸ்சி பள்ளிகள் இந்த முறையில்தான் மதிப்பிடுகின்றன.

MARI The Great said...

நல்ல தகவல் அறிய தந்தமைக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தகவல்... மக்களின் வரவேற்பைப் பொறுத்து அமையும்.பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

சித்திரவீதிக்காரன் said...

நல்ல விசயம் மக்களிடம் பரவட்டும். பகிர்விற்கு நன்றி.

ananthu said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_11.html

Rasan said...

நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

u r right

Post a Comment