என் நண்பரும், என்னை மெருகேற்றியவர்களில் ஒருவருமான மதிப்பிற்குரிய திரு. வே. சுரேந்திரன் (எ) பாபு அவர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தேன். எங்களின் பல நினைவுகளை வெளி கொண்டு வந்தது அந்த சந்திப்பு. அப்போது பேச்சுவாக்கில் தன் மகளுக்கு கல்லூரி போட்டிகளில் எழுதி கொடுத்த கவிதையை மீண்டும் நினைவு கூறி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அக் கவிதைகளை உங்கள் பார்வைக்கு இங்கு வைக்கிறேன்…தங்களின் கருத்துக்கள் அவருக்கு மேலும் உற்சாகம் ஊட்டி அவரை பிளாக் எழுத தூண்டலாம்.
பெண்கள்
பெண்கள்
நாட்டின் கண்கள்….
வீட்டின் விடி வெள்ளி
சம்பந்தமில்லா ஆ(ண்)ணை சம்பந்தம் பேசி
வாழ்க்கையை தொலைத்தவர்கள்…
பாரதி கண்ட பெண்கள் நிறைய உண்டு…!
அதில் குறைவில்லை..!
விழிப்புணர்வு தத்துவத்தை அறியா மடமைகள்
மாமியாரும் பெண் தான் என உணரா புதுமை விரும்பிகள்…!
வெறும் பேச்சுகளை பேசும்.. விட்டில் பூச்சிகள்
பத்து விரல் மோதிரம் போட நினைப்பவர்கள்
20 விரல்களில் ஓங்காரத்தை உணரா பதுமைகள்
பட்டிமன்ற பேச்சை வீட்டில் மறந்தவர்கள்..!
5நபர்கள் கூடி 6வது நபரை புரம் கூறுபவர்கள்
கழுத்துக்கு சங்கிலியை உணர்ந்தவர்கள்
சங்கிலித் தொடர் வாழ்க்கையை உணராதவர்கள்..!
அண்ணன்களை நினைத்து …
வானத்தில் சந்திரனை எட்ட நினைப்பவர்கள்
கட்டியவனை நினைத்தால்…
கொடுமையென
பாலை தயிராக்கியவர்கள்!
சகோதரன் சொன்னால் சரி
அதை சந்ததியை உருவாக்கிய
கணவன் சொன்னால் தப்பு என்பார்கள் …!
பாரதியின் கண்ணம்மா போல் சிலர் உண்டு
திருவள்ளுவனின் வாசுகியைப் போல் நமக்கு வேண்டும்..
நைட்டிங்கேல் அம்மையாரை போல பெண்கள் கிடைப்பது
அரிது
அரிது… அரிது…
பெண்ணே நீ வாழ் மற்றவரையும் வாழ
நினை…!
ஆதிவாசி
சுவாசத்தை அறியா நிம்மதி சுவாச காற்றுகள்
உடை
அணியா.. நம் முன்னோர்கள்
எதிர்கால
சிந்தனையில்லா மடையர்கள்…
ஆனால்
உண்மை தத்துவங்கள் ..!
நடந்தே
பொழுதை கடத்தியவர்கள்
மிருகத்தின்
கொடுமையை வென்றவர்கள்
மனித
மிருகத்தை அறியா பச்சிலங் குழந்தைகள்..!
உலகின்
அடிப்படை வேர்கள்
காலத்தின்
அடிச்சுவடுகள்..
இன்றை
படித்த அறிவாளிகளுக்கு
ஆராய்ச்சி
பொக்கிசங்கள்..!
மண்
ஆசை , பெண் ஆசை அறியா
தாமரை
இலை தண்ணீர்கள்….!
கடமை
தெரியாது
கண்டதே
கோலம் என வாழ்ந்தவர்கள்
மறக்க முடியாத
மன்னிக்க
முடியாத
ஆனால்
மனிதர்கள்..!