Wednesday, August 4, 2010

கடவுளும் பிரார்தனையும்

அங்காங்கே
கொலை கொள்ளை ....

குழந்தை பசியாற
பால் வற்றிய
முலைக்  காம்புகள்
காமக் கரங்களில் ....

கண்கள்  மூடி
கைகள் கட்டி
குண்டுகள் துளைக்க மரணம்...

கால்கள் ஊன்ற
வலுவின்றி ....
வற்றிய தோலுடன் வறுமை ...

சொந்த நாட்டிலே
அன்னியனாய்  அவலம்...
உரிமை கோரினால்
உயிருக்கு இல்லை உத்தரவாதம் ....

இரத்தமும் சகதியுமாய்
ஆதிக்க பூமியில்
கையிழந்து காலிழந்து
கண்ணீரும் கதறலுமாய் ....

மனித குரல்கள்
இல்லை இல்லை
ஓலங்கள் ...

ஓ..! மனிதா ... !
நிறுத்த முடிய வில்லை
எல்லா இசங்களினாலும்
எம்மை சமாதனப்படுத்தினாலும் ....
இத்தனை வன்மையையும்
கொடுமையையும்
உன்னால் நிறுத்த முடியவில்லை
தடுக்கவும் முடியவில்லை !

என்னவோ தெரியவில்லை
எது நடந்தாலும்
உடனே அடைக்கலம்
கோவில்களிலும் , மசூதிகளிலும் , சர்ச்சிலும்
எந்த இசம் பேசினாலும் ....
கடவுள் என்ற முகம் தெரியாத
ஒருவனிடத்தில் ...
பாதுகாப்பை உணருகிறோம்...!

எங்கோ உடல் வற்றி
உயிரூட்டி பிரசவிக்கும்
குழந்தையின் அழுகுரலும்
தாயின் ஆனந்த கண்ணீராய்
கடவுளின் சுக்குலத்தில்
கடைசி சொட்டும்
கோடைமழையாய் ....
இத்தனை கவலைகளையும்
கரைக்க ...
ஆனந்தமாய் பாதுகாப்பாய் ...
இதை விட மோசமாய்
வாழ்வு அமையாமல் இருக்க
கடவுளே உன்னை பிராத்திக்கிறேன்....!


தெரிந்த இத்தனை முகங்களை விட
தெரியாத நீ
எனக்கு தைரியத்தையும்
பாதுகாப்பையும்  நிம்மதியையும்
தருவதால் ....
உன்னை பிரார்தனையில்
சரணடைகிறேன்...!

3 comments:

Unknown said...

வலி சொல்லும் வரிகள்

priyamudanprabu said...

நல்லாயிருக்கு

Katz said...

Arumai

Post a Comment