Friday, October 9, 2015

இதை படித்தால் உங்களுக்கும் மனநோய் இருப்பதை உணர்வீர்கள்.

எல்லோரும் இங்கு பைத்தியம் தான்...!
*
ரைட்டில் இண்டிகேட்டர் போட்டு லெப்ட் சைட்டில் திரும்பிய ஆட்டோக்காரனால் , அவன் பின்னால் மனைவியுடன் வந்த பைக்காரர் கீழே விழுகின்றார். பின்னால் வந்தவன் மோதி கீழே விழுந்தவன் பற்றி கவலை கொள்ளாமல் வேடிக்கை பார்த்தவண்ணம் சென்றுவிடுகின்றான். ஆட்டோக்காரன். பொண்டாட்டியோடு வர்றோமே கொஞ்சம் பார்த்து வரக்கூடாதா? என்றபடி கடக்கிறார்கள், பாதாசாரிகள்.
என் முதுக்கு பின்னால் அமர்ந்திருக்கும் மனைவி.. என்ன வண்டி ஓட்டுற.. ஸ்கூலுக்கு நேரமாச்சு.. உன் ஓட்டை வண்டி இதுக்கு மேலே போகாதா..? வேடிக்கை என்ன வேண்டி கிடக்கின்றது என முறுக்குகிறாள்.. ஆக்ஸ்சிலேட்டர் வயர் அறுந்துவிடும் அளவுக்கு வேகமெடுக்கின்றது வண்டி. பேருந்தில் இருந்தப்படியே காறி துப்புகின்றாள் ஒரு யுவுதி. நல்லவேளை, எச்சில் என் பின்னால் வந்து கொண்டிருந்த வெள்ளைச்சட்டை அணிந்தவர் மீது படுகின்றது. சிரித்தப்படி புட்போர்டில் இதை வேடிக்கை பார்த்தப்படி பயணிக்கின்றார்கள், கல்லூரி மாணவர்கள்.
சிக்னல் விழுகின்றது. சிவப்பு விளக்கு எரிகின்றது. எங்கிருந்தோ வந்த டூவிலர் காரன் எதிர்வரும் வாகனங்களின் ஊடே பறக்கின்றான். என் அருகில் நின்றிருந்த ஸ்கூட்டிக்கரான் பின்னால் அமர்ந்திருந்த பெண் “நீயும் தான் வண்டி ஓட்டுற ..இப்படி சீறி பாய்ந்து ஓட்ட தெரிகின்றதா..சிக்னலில் நின்று என் மானத்தை வாங்கிற..” என கூறுகின்றாள். சிவப்பு பச்சையாகின்றது..வாகனங்களின் பின்னால் அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் வேகமா போ.. என்கின்றனர்.
ஆட்டோக்காரன் சிக்னல் விழுந்தும் அப்படியே நின்றப்படி சவாரி ஏற்றிகொண்டு இருந்தான். ஹரன் ஒலி காதை பிளந்தது. அருகில் மருத்துவமனை போர்டு இருந்தது. யார் செத்தால் என்ன? பிழைத்தால் என்ன? அவரவர் வேலை அவரவர்க்கு... யாரையும் கண்டு கொள்ளாமல் எதையும் பற்றி யோசிக்காமல் வாகனத்தை தம் இஷ்டத்திற்கு முடுக்கி கொண்டிருந்தார்கள். இவர்கள் மீது அரசு பேருந்து அளவுக்கு அதிகமான புகையை கக்கி கொண்டு ஓட்டை உடைச்சலுடன் ஓடியது.
எல்லோரும் நின்ற்கின்றனர். ஹாரன் ஹெல்மெட்டை மீறி காதை பிளந்து கொண்டிருந்தது. நடு ரோட்டில் அரசு பேருந்து மக்கர் செய்யவே ..எல்லோரும் தள்ளிக்கொண்டிருந்தனர்.
இன்னும் நாம் தள்ளி கொண்டு செல்ல வேண்டிய தூரம் அதிகம் தான்...! என்ன மனநிலையில் இவர்கள் இயங்குகிறார்கள். வீதியில் சென்று வருவதற்குள் மனநிலை மாறி விடுகின்றது. என்ன மனுசங்கப்பா..?
ஒருவழியாக மனைவியை .. எல்லா தொந்தரவுகளையும் தாண்டி மனைவியுடன் சண்டை போட்டு கொண்டும் பள்ளிக்கு அனுப்பி விட்டு கொஞ்சம் ஆசுவாசமடைந்து செய்திதாளை புரட்டுகின்றேன் . இன்று உலக மனநல தினமாம். அட பாவமே..!
மனிதனின் ஆரோக்கியம் மற்றும் நல்லெண்ணத்திற்காக உலக மன நல தினம் கொண்டாடப்படுகின்றதாம். மேலே சொன்னா எல்லாவற்றையும் ஒரு மனநோயாகவே பார்க்கின்றேன். நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய நாள் தான்..!
மதுரை சரவணன்.

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

தில்லி போன்ற பெரு நகரங்களில் இத்தொல்லை இன்னும் அதிகம்... இன்று காலை பார்த்த சாலைக் காட்சி - பொதுவாக Free left என எழுதி இருக்கும் இடத்தில் யாரும் நிற்பதில்லை. சில இடங்களில் இடப்பக்கம் திரும்பக்கூட சிக்னல் உண்டு. இன்று அப்படி ஒரு சிக்னலில் இடப்பக்கம் திரும்ப வேண்டிய ஒரு வாகனம் நிற்க, பின் வண்டியை ஓட்டிய பெண்மணி தொடர்ந்து ஒலிப்பானை ஒலித்துக் கொண்டிருந்தார். முதல் வண்டிக்காரர் இறங்கி வெளியே வந்து அந்தப் பெண்மணியிடம் சிக்னல் அருகில் இருந்த தகவல் பலகையைக் காண்பித்து இடப்பக்கம் Free signal இல்லை என்று சொல்லி புரியவைக்க, அப்பெண்மணி ஒலிப்பானில் இருந்து கை எடுத்தார்! பொறுமை என்பதே சிறிதும் இருப்பதில்லை....

உலக மன நல தினம் கொண்டாட வேண்டியது தான்....

Post a Comment