Thursday, March 12, 2015

நயன் தாராவுடன் ஒரு டூயிட் !


அப்போது நான் அவனுடன் இருந்தேன். இப்போது நான் எங்கு என்பது தான் தெரியவில்லை. என்ன நடந்தது ? யோசிக்கின்றேன்.
பாண்டி சேரி டூ சென்னை . வேகமாக காரை இயக்கி கொண்டிருந்தான் மாதவன்.
போர் அடிக்குதுடா. பாட்டு எதாவது போட முடியுமா? என கேட்டேன்.
பாட்டு என்ன கேட்கிறது ! இந்த ஹெட் போனை கழுத்தில் மாட்டிக்கொள். நீ இந்த பாடலுக்கு யாரை ஆட வைக்க நினைக்கிறாயோ அவரே வந்து ஆடுவார்.
அது எப்படிடா..? நயன்தாராவை நினைச்சா.. அவுங்க எப்படிடா வருவாங்க.. என்ன தான் நீ விஞ்ஞானி என்றாலும் நம்பும் படியா சொல்லு.. என்றேன்.
அதேப்போல் நடிகரும் வருவார். நீ நினைத்தால் பாடலை இடையில் நிறுத்தி அவர்களின் நடன அசைவுகளை மாற்றி விடலாம் என்றான்.
ஏன் , நானே கூட ஆடலாம் அப்படி தானே ? இது எல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு ! என வியப்புடன் கேட்டேன்.
ஹெட்போனை தலையில் மாட்டிக்கொள் என்றான். தயங்கியப்படி மாட்டினேன்.
காரிலுள்ள டிவிடி ஸ்கிரினை பார்க்க சொன்னான். அதில் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என அத்தனை மொழியிலும் நடிக்கும் திரை நட்சத்திரங்கள் பெயர் பட்டியல் , அவர்களின் புகைப்படங்களுடன் ஒளிர்ந்தது.
ஆம் நீங்கள் நினைத்தது போல் அந்த நடிகையையே தேர்வு செய்தேன். டச் ஸ்கிரின். தொடு என்றான் . தொடு திரையில் அவளை தொட்டேன். அவ்வளவு தான். அவள் எனது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தாள்.
இப்போது பாடலை தேர்வு செய்தேன். அடுத்து லோகேசன் என ஸ்கிரீனில் கேட்டது. சுவிட்சர் லேண்ட் என டைப் செய்தேன். .
இப்போது அந்த திரை நட்சத்திரமும் நானும் சுவிட்சர் லேண்டில். என் காதில் ஒரு மைக் பொருத்தி இருந்தது. என்ன நடிகரை தேர்வு செய்யவில்லையா? என மைக்கில் கேட்டான் மாதவன்.
நான் என்ன மடையனா? நானே ஆடுகின்றேன் என்றேன். அவன் சிரித்தான். இப்போது பாடல் ஒலித்தது. அவள் என்னை முத்தமிட்டவாரு... அவளாகவே ஆட தொடங்கினாள்.
டேய்.. என்னடா.. ஆல் ரெடி புரோகிராம் பண்ணி வச்ச மாதிரி பாடல் கேட்டவுடன் ஆடுகிறாளே..! என்றேன்.
சிரித்தான். நீயும் ஆடு... இல்லை நீ சொல்லும் படி ஆடுவாள். நீ சொல்ற எல்லாத்தையும் செய்வாள் என்றான்.
நிஜமாகவா என்றேன். சந்தேகம் வேண்டாம் என்ஜாய் என போனை கட் செய்தான்.
இப்போது அவள் என் சொல் படி நடக்க தொடங்கினாள்.
அட நீங்க வேறமாதிரி யோசிக்காதீங்க. அவன் ஆல்ரெடி புரோகிராம் பண்ணி வச்ச மாதிரி .. அங்க காமிரா மேன்.. துணை நடிகர்கள், நடிகைகள், இணை இயக்குநர் என எல்லோரும் இருக்கின்றார்கள்.
கட் கட்.. ஒன் மோர் டேக் சார் என ஒருவன் ஓடி வந்தான்.
தாகமாக இருந்தது. ஆப்பிள் சூஸ் தந்தார்கள். சரி நான் எனது நண்பனை பார்த்து விட்டு வருகின்றேன் என்றேன்.
ஹாலோ மாதவா என அழைத்தேன். என்னடா.. ஜாலியா இருக்கீய்யா என்றான்.
இப்போது எல்லோரும் பேக்கப் ஆகி கொண்டு இருந்தார்கள்.
டேய்.. ஹிந்தி நடிகை மல்லிகா ....
உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன். நீ ஒரு தடவை தான் நடிகைகளை செலக்ட் பண்ண முடியும் என்றான்.
இப்போது என் அருகில் யாரும் இல்லை. டேய் எல்லோரும் எங்கு போயிருக்காங்க..!
“உன்ன மாதிரி நம்ம மகேஸ் ... புதுமுகம் யாரையோ வச்சு படம் பண்ணனும் என்றான்..இப்ப தான் அனுப்பி வச்சேன். உன் கூட இருந்த ஆர்டிஸ்ட் எல்லாம் ...அவனோட படம் பண்ண போயிட்டாங்கன்னு நினைக்கின்றேன்”
“இல்லடா எனக்கு போர் அடிக்குது.. போதும் நான் வெளியே வந்துடுறேன்...”
“சாரிடா..உள்ளே சென்றவர்கள் வெளியேறி வருகின்ற ஆராய்ச்சியில் வெற்றி பெற முடியவில்லை. இப்ப கூட எல்லோரையும் அனுப்பி விட்டு உன்னை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்தேன். நீயும் மற்றவர்களைப்போல் பாதி தூரம் வந்தாய்..முழுவதும் வெளியேற இயலவில்லை. இப்போது நீ எங்கு இருக்கின்றாய் என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும் ”
”இப்ப நான் எங்க இருக்கேன்.. உனக்கே தெரியலைய்யா...? “
“ இந்த கனவு உலகத்தில் அவுங்கள தேடி கண்டு பிடிச்சு அவுங்க கூட வேலை பாரு.. வெளியேறும் வழியை கண்டுபிடிச்சதும். நானே வந்து அழைச்சுட்டு போறேன்”.
“ இப்ப நான் எங்க இருக்கேன்... எனக்கே தெரியலைய்யே..! போர் அடிக்குதே..”
“போர் அடிக்குதுன்னு சொன்னதால தானே இந்த நிலமை..இப்ப திரும்பவும் போர் அடிக்குதுன்னா என்ன செய்ய”
என பேசியப்படி காது மைக்கில் மாதவன் சிரிக்கின்றான்.
மதுரை சரவணன்.

2 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

மாதவா...! எங்கேயோ போயிட்டீங்க...!

Post a Comment