Monday, October 15, 2012

தடுப்பதற்கில்லை….!



பனையோலை வேய்ந்த
கூரை வீடு எரிச்சலூட்டுகிறது
நாலாபக்கமும் உயர்ந்த கட்டிடங்களில்
செயற்க்கை செடிகளை அழகுக்காகவும்
பறவைகளின் ஒலிகளை
அழைப்பு மணியோசையாகவும்
வைத்திருப்பவர்களுக்கு
அறியாமலா
உயர்ந்து வளர்ந்த
பல மரங்களை சரிந்திருப்பார்கள்
பூத்துக்குலுங்கிய மஞ்சணத்தி மரங்களை
மாய்ந்திருப்பார்கள்
குருவிகள் இல்லை
கூவும் குயில்கள் இல்லை
காடையும் காணவில்லை
அட மனிதர்கள்கூட
எப்போதாவது தான் புலப்படுகிறார்கள்
உயர்ந்த கட்டிடங்கள் தரும் நிழலில்
அமர்ந்துக் கொண்டிருக்கிறேன்
டிரங் பெட்டியிலிருந்து எடுத்த
பழைய புத்தகத்தின் பக்கங்களில்
பொதிந்திருந்த
மயிலிறகை அதிசியமாகப் பார்க்கிறாள்
எந்தப் பறவையின் இறகையும்
பார்த்திராத என் பேத்தி
உயிர் வலிக்க கேட்கிறேன்
விலைப்பேசிக் கொண்டிருக்கிறார்கள்
கூரை வீட்டையும்
என் மகனிடம்...!




6 comments:

செய்தாலி said...

நாளை
இது மாதிரியான
கோர நிகழ்வுகள் நடக்கலாம் சார்

கவிதை நெகிழ வைத்துவிட்டது சார்

தமிழ் காமெடி உலகம் said...

உண்மை தான்.....இது தான் இப்போ உலகத்துல நடக்கும் உண்மை முறை.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் நிகழ்வுகள்...

நடக்கப் போகும் நிகழ்வுகள்...

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பு நண்பரே தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2012/11/blog-post.html
நன்றி.

Anonymous said...

வணக்கம்
அருமையான கவிதை நண்பரே இந்த கவிதை 1/12/2012 இன்று வலைச்சரம் வலைப்பூவில் பதிவிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி
உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/12/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment