Friday, January 13, 2012

விடியல்



சேவல் கூவி அழைக்க
சூரியன் தன் கைகளை
மெல்ல விரித்து
இருளின் முகத்தை துடைக்க….
வீட்டு மேற்கூரை வழியாக
ஊடுருவி வெளிச்சம் ….
வெளிச்சமாக்குகிறது
இருளின் உச்சத்தில்
நீண்ட புணர்தலுக்கு பின்
கவ்வி பிடித்து தூங்குபவர்களின்
நிர்வாணத்தை …
அழுகையும் சிரிப்புமாய் இருக்கும்
கனவுலகின் கதவுகளை உடைத்து
குழந்தைகளுக்கு நிஜத்தினை…
வீடுகளற்று
மூத்திர வீதிகளின் முடுக்குளில்
நடுங்கும் பனியில்
பயந்துறங்கும் பிச்சைக்காரியின்
முலையினை….
தெருநாயின் அதிகாலை புணர்தலை
விரைத்தகுறியுடன் ஏக்கமாய்
பார்க்கும் தெருவோர அனாதைகளை…
இப்படியாக எங்கும் பரவிய வெளிச்சம்
தன்  
அகண்ட கைகளைக் கொண்டு
அனைவரையும் தட்டி எழுப்புகிறது…
உறங்கிக் கொண்டிருந்த அனைத்தும்
விழிக்கின்றன..
விழித்துக் கொண்டிருந்த அனைத்தும்
உறங்கிப் போகின்றன…
உண்மையும் பொய்யாய்
பொய்யும் உண்மையாய்
கைகள் முழுவதும் விரிந்த நிலையில்
எல்லாம் நிகழ்கிறது…
சேவல் மீண்டும் கூவுகிறது…
மெல்ல கைகளை சுருக்கி
வீட்டின் மையப்பகுதியிலிருந்து ….
புறக்கடை வழியாக வெளியேறி
வீதிகளின் தெரித்து ஓடி
இருளுக்கு வழிவிடுகிறது
சேவலின் கூவல் நின்றபாடில்லை…!

3 comments:

vimalanperali said...

வணக்கம் மதுரை சரவணன் சார்,நலம்தானே.ந்ல்ல கவிதை.விழித்துக்கொண்ட அனைத்தும் தூங்கிவிட தூங்கி விட்ட அனைத்தும் விழித்துக்கொள்ள கண்பட்ட காட்சிகளின் பதிவுகளை மறக்க முடியாமல் மனம் த்விக்கிற பாடு இருக்கிறதே/அது ஒரு தனிகதை /

அன்புடன் நான் said...

வணக்கம் ஆசிரியரே....
உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

MaduraiGovindaraj said...

வணக்கம் மதுரை சரவணன் சார்
உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Post a Comment