Friday, August 26, 2011

கல்வியின் உண்மை நிலை



தூரிகைகள்
நிரப்பிக் கொண்டிருந்தன
முடிக்கப்படாத ஓவியத்தின்
அறியப்படாத உருவங்களை
பொருந்தாத வண்ணங்களால்….!

அடிப்படை நிறங்கள்
வலுக்கட்டாயமாக
நிறமாற்றம் செய்யப்பட்டன
எரிச்சலுட்டும் வண்ணக் கலவை
பொருந்தாமல் …
ஓவியத்தின் தன்மையை
மெல்ல மெல்ல
அழித்துக் கொண்டிருந்தது…

திறக்கப்பட்ட
பள்ளியின் கதவுகள்
இன்னும் கருமையாகவே…

கோடுகள் நிரம்பிய
ஓவியங்கள்
இன்னும் பழைய தூரிகைகளால்
தீண்டப்படுவதால்…
வாழ்வின் பக்கங்கள்
இன்னும் கருமையாய் …!

24 comments:

Chitra said...

கோடுகள் நிரம்பிய
ஓவியங்கள்
இன்னும் பழைய தூரிகைகளால்
தீண்டப்படுவதால்…
வாழ்வின் பக்கங்கள்
இன்னும் கருமையாய் …!


... நல்லா எழுதி இருக்கீங்க. கவிதை எழுதுவதில் மெருகேறி வருவது தெரிகிறது.

கடம்பவன குயில் said...

//அடிப்படை நிறங்கள்
வலுக்கட்டாயமாக
நிறமாற்றம் செய்யப்பட்டன
எரிச்சலுட்டும் வண்ணக் கலவை
பொருந்தாமல் …
ஓவியத்தின் தன்மையை
மெல்ல மெல்ல
அழித்துக் கொண்டிருந்தது //

அதத்தான் நானும் சொல்றேன். கொஞ்சம் மாற்றங்களுடன். அரசாங்க பள்ளிகளுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள், தேவையான கட்டிடங்கள் ஆசிரியர் காலியிடங்களை நிரப்பாமல் அரசு ஏதோ அவங்கவுங்க சொந்த கதை சோகக்கதையை புக் முழுதும் பிரிண்ட்பண்ணி வச்சுருக்காங்கப்பா... என்னைப் பொருத்தவரை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு விளையாட எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை. அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி அனைவரும் விரும்பி வந்து சேரும்படி செய்தாலே போதும். பத்தாம் வகுப்பு புத்தகத்தை நானும்தான் பார்த்தேன். அழுதுட்டேன்.

எப்படியோ ஆசிரியரே நீங்க காலமேகப்புலவர் போலவே கலக்கலா இரண்டு அர்த்தமும் வருகிறமாதிரி கவிதை எழுதறதில் கலக்கறீங்க. வாழ்த்துக்கள்.

வேலன். said...

2-in-1 கவிதையா...அட்டகாசம் போங்க..கவிதையாக முதலில் படித்தேன்.சமச்சீர் கல்வியை மனதில் வைத்து இரண்டாம முறை படித்தேன். இரண்டும் ்அருமை...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Riyas said...

கவிதை அழகு சார்

Unknown said...

கலக்கல் கவித மாப்ள!

கோகுல் said...

திறக்கப்பட்ட
பள்ளியின் கதவுகள்
இன்னும் கருமையாகவே…

விரைவில் தீபமேற்றி
ஒளியேற்றுவோம்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடடா சூப்பர்ப் மக்கா.....!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு...

முனைவர் இரா.குணசீலன் said...

வாழ்வின் பக்கங்கள்
இன்னும் கருமையாய் …

நன்றாகவுள்ளது நண்பா.

M.R said...

நல்ல கருத்துள்ள கவிதை

பகிர்வுக்கு நன்றி நண்பரே

M.R said...

தமிழ் மணம் எட்டு

Anonymous said...

கவிதை அருமை.

-சே.குமார்.

முரளிகண்ணன் said...

அருமை. நிதர்சனம்

G.M Balasubramaniam said...

பழைய தூரிகைகளை தூர எறிந்துவிட்டு , புது தூரிகைகளால் அழகான ஓவியம் தீட்டுவதில் சிரமமா.?

தனிமரம் said...

அழகான கவிதை புதிய பாடத்திட்டப்புத்தகம் இன்னும் வழிகாட்டவில்லை!

kobiraj said...

super lyrics keep it up

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

good

அம்பாளடியாள் said...

கதை கதையா வந்து இப்போ கவிதையா வழிந்தோடும்
இந்தத் துன்பம் என்று தணியுமோ !!!.....அருமையான
உணர்ச்சி வெள்ளம் .வாழ்த்துக்குகள் சகோ .நன்றி
பகிர்வுக்கு .......

shanmugavel said...

//திறக்கப்பட்ட
பள்ளியின் கதவுகள்
இன்னும் கருமையாகவே//

உண்மையை உரக்கச்சொல்லும் கவிதை நன்று.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

தெய்வசுகந்தி said...

அழகா சொல்லியிருக்கீங்க!!

ரிஷபன் said...

கோடுகள் நிரம்பியஓவியங்கள்இன்னும் பழைய தூரிகைகளால்தீண்டப்படுவதால்… வாழ்வின் பக்கங்கள் இன்னும் கருமையாய் …!

யதார்த்த படப்பிடிப்பு

Unknown said...

கல்வியின் நிலையை-நல்
கவிதையாய் வலையில்
சொல்லினீர் இன்றே-இரு
சுவைபட நன்றே
புலவர் சா இராமாநுசம்

Post a Comment