Tuesday, August 23, 2011

கவிதை வரவில்லை பொறுத்துக்கொள்ளுங்கள்



ஞாயிறு வந்த பின் எழும் நாள்
எச்சில் ஒழுக
தலையனையைக் கட்டிப் பிடித்து
உலகமே மறந்து உறங்கும் நாள்
குட்மார்னிங் சார்…
அந்த வகுப்பு டீச்சர் வரலை…!
பஸ் ரிப்பேர்..?!
சார் அடிக்கிறார்…!
என புகார்களுக்கு இடமளிக்காத
ஞாயிறு
என்னை சுற்றி புத்தகங்கள் வட்டமிட்டு
என்னை விழிக்கச் செய்கின்றன
எழும்ப மறுக்கிறேன்…
மாணவர்களை பார்க்காத
கற்பித்தல் பணி நடக்காத
இந்தநாளும் ஒரு நாளா
இன்றைக்கு
நான் ஏமாற்றப் பட்ட நாள்
மன்னிக்கவும்
கவிதை வரவில்லை
பொறுத்துக் கொள்ளுங்கள்.  

9 comments:

Anonymous said...

ரசிக்கவைத்தது... உங்கள் கவிதை!

தமிழ்வாசி பிரகாஷ் said...

தலைவரே... கவிதை பின்னிட்டிங்க போங்க...!!!

Chitra said...

உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடிகிறதே. அது போதுமே. வாழ்த்துக்கள்!

Philosophy Prabhakaran said...

என்னத்த கவிதை வரலை அப்படி இப்படின்னு ஃபீல் பண்ணிக்கிட்டு... வார்த்தைகளை ஒன்றன் கீழ் ஒன்றாக போட்டால் அதுதான் கவிதை... சரிதானே தல...

Rathnavel Natarajan said...

மாணவர்களை பார்க்காத
கற்பித்தல் பணி நடக்காத
இந்தநாளும் ஒரு நாளா

வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

கே. பி. ஜனா... said...

இதைவிட ஒரு கவிதையில் என்ன இருந்து விட முடியும்? மிக அழகிய கவிதை!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

அழகிய கவிதை!

கோவி said...

நல்லா இருக்குதுங்க.. இன்னும் எழுதுங்க..

ரிஷபன் said...

but U also need a break..

Post a Comment