Friday, August 19, 2011

வலசை


   வலசை என்பது பொதுவாக பறவைகள் இடம் பெயர்தலைக் குறிக்கிறது. பறவைகள் மட்டுமா இடம் பெயருகின்றன? என எண்ணத் தோன்றிய போது , மனிதர்களின் நினைத்த நிமிடத்திற்கு தன் எண்ண ஓட்டங்களில் வலசை போகும் குணங்களை எண்ணி வியப்படைந்தேன்.
    பறவைகள் வலசை போதல் உறைப்பனியினைத் தவிர்ப்பதற்காக என்ற தவறான கருத்து மாறி, நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் , பறவைகள் தன் வாழ்வாதரமான உணவினைத் தேடித் தான் செல்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேப்போல மனிதர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்பதனை விட , தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே தன் எண்ண ஓட்டங்களில் இருந்து மாறுபட்டு வலசை சென்று தன்னை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறான். இதில் வயது, தொழில், பால் பாகுபாடு , தெரிந்தவன், தெரியாதவன் , நெருங்கிப் பழகியவன்  பழகாதவன், உடன் பிறந்தவன், பிறக்காதவன், உறவினன், உறவினன் அல்லாதவன் என்ற போதமில்லாமல், நொடியில் இடம்பெயர்ந்து பேசுவதை காணும் போது இந்த குணம் பறவைகளில் இருந்து வந்திருக்குமோ? அல்லது பறவைகளை பார்த்து விமானம் படைத்தான் என்பது போல பார்த்து உருவாகி இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
     உலகிலேயே அதிக தூரம் பறந்து வலசை செல்லும் பறவை ஆர்டிக் கடல் ஆலா என படித்த ஞாபகம். மேலும் அப்பறவை கடற்கரை ஓரமாகவே பறந்து  சுமார் 12,000 மைல்களை கடக்க வல்லவை என்பதை நினைக்கும் போது வியக்க வைக்கிறது. இருப்பினும் ஒரே நொடியில் உற்ற நண்பனையும் கவுத்த வலசை செல்லும் நண்பனை என்ன சொல்வது?
இப்படி தான் என் நண்பனிடம் (இலக்கிய திமிங்கலம்) உங்களுக்கு எதாவது உதவி செய்திருக்கலாம் ? ஏன் தலைவா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்க கூடாதா? ( அவர் என் அம்மா வீட்டிற்கு அருகில் புத்தகம் பைண்டிங் செய்திருப்பதால், நானே அவரை அழைத்து பேசியதாலும், எதார்த்தமாக போர்டர் வேலையாவது , இராமனுக்கு அணில் போல உதவி யிருக்கலாமே என்ற எண்ணத்தில் வினவ). மனிதன் வலசை செல்வதில் கடல் ஆலாவை விட உயர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் வகையில் ,”தல, ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்கள, நீங்க ஒரு சாதாரண பிளாக்கர், இது இலக்கியம் …. நீங்க பிரண்சிப்பையும் , இலக்கியத்தையும் போட்டுக் குழப்பிக் கிறீங்க … ”என நான் சொல்ல வந்ததற்கும் மாறுபட்டு இடம் பெயர்ந்து , தன்னை ஒரு பெரிய திமிங்கலம் என்று காட்டிக் கொண்டாரே பார்க்கலாம். அப்போது எனக்கு பறவைகளின் இடம் பெயர்தல் தான் நினைவுக்கு வந்தது. 
   ஏன் இந்த மனிதர்கள் நண்பன் என்ற தொனியில் சக மனதை புண்படுத்துகிறார்கள்? அல்லது என் நண்பன் ஸ்ரீ சொல்வது போல வளர்ந்துவரும் கலைஞனுக்கு இது போல  முட்டுக்கட்டைகள் பல தோன்றும் ,மேலும் நீங்கள் எளிதில் அனைவருடனும் உங்கள் நிலையிலிருந்து இறங்கி பழகுவதாலும் , நிதானமில்லாமல் நினைத்ததை எழுதுவதாலும்  ஏற்படும் இன்னல்கள் இவைகள், எனவே இவற்றை சட்டையில் ஓட்டிய பூச்சியை தட்டி விடுவது போல தட்டி விட்டு செல்லுங்கள் “ என்பார். என்னால் முடியவில்லை.  நண்பர்களுக்குள் என்ன ஈகோ. ஸ்ரீயை போல இடித்தும் , அதே சமயம் குறைகளை சுட்டிக் காட்டியும் , அதனை களைவதற்கு ஆலோசனைகளை வழங்கவும் பலரால் இயலவில்லை ஏன்?
   
   நம் வழக்கு மொழியில் கல் பொறுக்கி என அழைக்கப்படும் கோல்டன் ப்ளோவர் என்ற பறவை தான் உலகிலேயே அதிக மைல்கள் (சுமார் 4,800 கிலோ மீட்டர்கள்) ஓரே மூச்சில் நிற்காமல் பறந்து செல்பவை. இதற்கு கல் பொறுக்கி என்ற பெயர் எப்படி  வந்தது ? என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். இந்த பறவை கடற்கரையில் உள்ள சிறு கற்களை தள்ளி அதற்கு அடியில் வாழும் புழுக்களை பிடித்து உண்பதால் தான். மனிதர்களில் பல சமயம் நாமும் பலரை தள்ளி , அவர்களின் நிழலில் வாழும் நபர்களை பார்க்கும் போது கல் பொறுக்கியின் நினைவு வந்து போவதில் தவறு எதுவும் இல்லை. பொதுவாக இந்த கல் பொறுக்கிகளை நாம் நவம்பர் , டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் காணலாம்.
  பறவைகளின் வலசை பற்றிய  தகவல் அறிவதற்கு அவற்றின் கால்களில் காப்பிடப்படுகின்றன. நைலான் காப்பு கட்டிய காலம் மாறி, இன்று பறவைகளின் உடல்களில் மிக நுண்ணிய மின் அலை பரப்பியை பொருத்தி , அதிலிருந்து எழும் அலைகளை செயற்கை கோள் வழியாக மின் அலை வாங்கிகளில் பெற்று பறவைகளீன் வலசை பற்றிய  தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன . மனிதர்களுக்கும் இம்மாதிரியான காப்பு இருப்பின் நாமும் பாதுகாப்பாக இருக்கலாம். பறவைகளின் மின் அலை பற்றி பேசும் போது ஜெமோவின் அறிவியல் புனைக்கதையான வலசை நினைவில் வருவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.மனிதன் எப்படி இயற்கையை மாற்ற நினைத்தாலும் , இயற்கை தன் வசதிக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதை பொட்டில் அறைந்தது போல சொல்லி யிருப்பார்.  

   வலசையை பற்றி எத்தனையோ தகவல்களை கொடுத்திருந்தாலும் , என் நண்பன் கார்த்திகைப் பாண்டியன் கொண்டு வந்துள்ள புதிய காலாண்டிதழை சொல்லாமல் கட்டுரையை முடித்தால், நண்பன் என்ற நிலையில் இருந்து நான் வலசை சென்றவனாகி விடுவேன். முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு இலக்கிய இதழாக சிறப்பாக கொண்டு வந்துள்ளார். அவரின் அயராத இலக்கிய தாகத்திற்கு விருந்து . அவர் இதழ் ஆசிரியராக தன்னை அறிமுகப் படுத்தாமல் தன்னை முதல் வாசகனாக அறிமுகப் படுத்தி இருப்பதனாலே சிறப்பாக இருக்கும் என தைரியமாக வாங்கலாம். அவரின் இந்த முயற்சி வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு வரபிரசாதம் ஆகும். ச. முருகபூபதி, அசதா, ஜ்யோவ்ராம் சுந்தர், ஜெ. சாந்தாராம் போன்ற மூத்த இலக்கிய எழுத்தாளர்களின் மொழிப் பெயர்ப்புகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ யின் சாத்தானுடன் உரையாடல் கவிதை என்னை உங்களுடன் வலசை போகச் செய்திருக்கிறது . ”உன் நண்பனின் ஆலோசனை வேண்டுமா? நீயும் உன் அதிகப்பிரசிங்கித்தனமான எழுத்தையும் உடனே நிறுத்தி விடு “ என சாத்தான் எனக்கு கட்டளை இடுவதாகவே படுவதால், என் கட்டுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
வலசை காலாண்டு இதழ்  -விலை:100/- இதழ் வேண்டுபவர்கள் தொடர்புக்கு கார்த்திகைப் பாண்டியன்- 98421 71138.  

7 comments:

பாலா said...

இதுக்கு கார்த்திகை பாண்டியன் மட்டும் ஆசிரியர் இல்லைங்க . மெயின் பொட்டன்சியலே "நேசமித்ரன்" ... . . சாமி இதையும் கொஞ்சம் உங்க பதிவுல சேர்த்துக்குங்க நன்றி :-))

கோகுல் said...

இது வரை அறியாத தவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலசை வாசிச்சிருவோம்.

shanmugavel said...

வலசை- பறவை,மனிதன் என்று நல்ல பதிவு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//நீங்க ஒரு சாதாரண பிளாக்கர், இது இலக்கியம் ….//
இது அப்பட்டமான பொய்.வடிகட்டின பொய்.புரட்டு. கார்த்தியிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை வருவதற்கு வாய்ப்பில்லை.அவர் இன்னமும் ப்ளாக்கர்தான்.அவர் உங்களிடம் என்ன சொன்னார் என்பது எனக்குத் தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.உங்களுக்கு ஒருவரின் மேல் கோபம் என்பதனால் நீங்கள் சொல்வது,செய்வது அத்தனையும் சரி என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.சரவணன் நீங்கள் செய்து கொண்டிருப்பது Cheap Publicity.உங்களுக்குப் புகழ் தேவை என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்,அதே சமயம் அந்தப் புகழுக்காக உங்கள் நண்பர்களை (அப்படி என்று நீங்கள் கார்த்தியை இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பதால்) இவ்வாறு காயப்படுத்துவதை என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு வேளை கார்த்தியும் நேசனும் எனக்கு வாய்ப்பு தந்ததால் இப்படிப் பேசுகிறேன் என்று நீங்கள் நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள்.இம்முறை நீங்கள் செய்திருப்பது அதிகப் பிரசங்கித்தனம்.சென்ற முறை நீங்கள் சூர்ப்பணங்கு நாடக விமர்சனத்தில் தாக்கி எழுதியபோதே இந்த வார்த்தைகளை நான் பிரயோகித்திருக்க வேண்டும்,தவறு என் பேரில்தான்.உங்களிடமிருந்து ஒருவர் ஒரு உதவியைப் பெற்றுக் கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.அதிலெல்லாம் நீங்கள் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.அவ்ர் அவ்வுதவியை என்னிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை.எனக்கு அதில் வருத்தமோ கோபமோ இல்லையே! உங்களுக்கு மட்டும் ஏன் வருகிறது என்று சற்று யோசித்துப் பார்ப்பது உங்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன்.ஒருவர் முன்னேறும்போது முட்டுக்கட்டைகள் வரும் என்று நான் சொல்லியிருக்கிறேன்தான்.ஆனால் அது கார்த்தியைக் குறித்தா என்று யோசியுங்கள்.இனி இன்னொரு முறை இப்படி எழுதாதீர்கள்.உடனே நீங்கள் இந்தப் பதிவிலிருந்து கார்த்தியைக் குறித்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள்.என்னுடைய இந்த மறுமொழியை மட்டும் நீங்கள் நீக்கினால் (ஏற்கெனவே செய்ததைப் போல)நான் இதைப் பதிவிடவும் தயங்க மாட்டேன்.

மதுரை சரவணன் said...

வாய்ப்புக்காக தான் இதை செய்துள்ளீர்கள் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை, அதை உங்கள் மனசாட்சி தான் சொல்ல வேண்டும். புகழ் வேண்டும் என்று சொல்லியுள்ளேன். அதற்காக நீங்கள் சொல்லும் மட்டமான எந்த யோசனையும் நான் கேட்டதுமில்லை, அதை நான் விரும்பியதும் இல்லை. என் மனதிற்கு பட்டதை நடந்த உண்மைகளை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதற்காக உங்களுக்கும் யாருக்கும் பயப்பட மாட்டேன். இதை நீக்கக் கூடாது என்ற மிரட்டலே , நீங்கள் எப்படி பட்ட உறவில் பழகுகிறீர்கள் என்பதனை சுட்டிக் காட்டுகிறது. நான் சூர்பணங்கு விமர்சனம் எழுத போகிறேன் என்ற போது மிக பெரிய பிரபலம் எழுதவுள்ளார் என சொல்லி என்னை எழுதக்கூடாது என்று மறைமுகமாக சொல்லியதால் தான் நாடக விமர்சனத்தில் முகமூடியை விலக்கினேன். இப்போதும் சொல்கிறேன். நானே அவரை அழைத்து பேசினேன். இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் நீங்கள் எப்படி சாட்சியாக முடியும் ? இதை நான் தெரிவித்து இன்று இதற்கு ஒரு போஸ்ட் போடுகிறேன் என்று சொல்லியும் உள்ளேன். கார்த்தி நண்பர் தான் அதற்காக ஒரு இலக்கியவாதியை விமர்சிக்க உரிமையுண்டு என்பதால் இதனை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பிளாக்கில் எனக்கு பட்ட உண்மைகளை எழுதுவதில் எந்த தயக்கமும் இல்லை. சில காலமாக நான் எழுதாமல் நிறுத்தியதற்கும் உங்களுக்கு காரணம் தெரியும். ஸ்ரீ தங்கள் இருவருக்கும் நண்பர் . இருப்பினும் நியாயத்தின் பக்கம் இருப்பது நட்புக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என நினைக்கிறேன். இதை இவ்வளவு சீரியசாக எடுக்க வேண்டியதில்லை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//அதற்காக நீங்கள் சொல்லும் மட்டமான எந்த யோசனையும் நான் கேட்டதுமில்லை, அதை நான் விரும்பியதும் இல்லை.//
நான் கொடுப்பது மட்டமான யோசனைகள் என்றால் நீங்கள் என்னிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு முறையோடு என் தொடர்பைத் துண்டித்துக் கொண்டிருக்கலாமே?
//இதை நீக்கக் கூடாது என்ற மிரட்டலே//
மிரட்டலா!!! நல்ல காமெடி.பின்னூட்டத்தின் வரிகளை மறுபடி படியுங்கள்.
இனி இன்னொரு முறை இப்படி எழுதாதீர்கள்.உடனே நீங்கள் இந்தப் பதிவிலிருந்து கார்த்தியைக் குறித்த வார்த்தைகளை நீக்கி விடுங்கள்.
என்று கேட்பது உங்களுக்கு மிரட்டலாகப் பட்டதென்றால் நான் என்ன செய்ய?
சரி!உங்கள் ப்ளாக் உங்கள் விருப்பத்துக்கு உங்கள் வன்மத்தைக் காட்ட உங்களுக்கு உரிமை உண்டுதான்.இதில் நான் என்ன சொல்ல.ஆனால் தயவு செய்து என் பெயரை இது போன்ற இடுகைகளில் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது. நீங்கள் சொல்கிறார்போல் நான் இருவருக்கும் நண்பன் .என்னை ந்யூட்ரலாகவே இருக்க விட்டால் சந்தோஷம்.

Post a Comment