Monday, March 14, 2011

தேடல்

மெய் ஞானம் பெற 
பரவிக்கிடக்கும்
புத்தகக் குவியல்களில் 
தேடினேன் ...
இருளின் இருப்பிடம் விட்டு 
வெளிச்சத்தை நோக்கி 
ஊர்ந்தது கரப்பான் பூச்சி 
அருவெறுப்பு தட்டவே 
தூக்கி எறிந்தேன் 
கொன்றது 
புத்தனின் போதனைகள் 
அடங்கியப் புத்தகம்
    



14 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை அருமை.... உங்கள் சிந்தனை எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு தலைவரே....

எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், நாம் ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மையறியாமல் என்ன செய்து விடுகிறோம் என்பதற்கு இக் கவிதை ஒரு சான்றாதாரம். இருளின் இருப்பிடத்திலிருந்து மீள வெளிச்சத்தைத் தேடும் நாங்கள் ஒரு பூச்சியை இருளுக்குள் தள்ளி விட்டோம் என்பதனை அழகாகச் சுட்டியுள்ளீர்கள்.

ஹேமா said...

சில இயல்பான எங்கள் பழக்கவழக்கங்கள் இப்படித்தான் அடுத்தவர்களைச் சிலநேரங்களில் புண்படுத்துமோ !

தடம் மாறிய யாத்ரீகன் said...

அகிம்சை கூட சில நேரங்களில் ஆயுதம் தூக்க நேரிடுகிறது போலும்

Anonymous said...

முடிவில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்கிறது படிப்பவரின் இதழ்களில்

வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா said...

நெருடல் தான் சகோதரம்... ரொம்ப அருமைங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

நேசமித்ரன் said...

நல்லாருக்கு :)

பாச மலர் / Paasa Malar said...

இன்னுமொரு மதுரைப்பதிவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி...

சில தன்னிச்சைச் செயல்கள் இப்படிமுடிகின்றன..தன்னிச்சையானால் பரவாயில்லை...தெரிந்தேதானே செய்கிறோம்...சற்றே வித்தியாசமான படைப்பு...நன்று..

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமையான சிந்தனை - இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிச் செல்லும் பூச்சியினைக் கொன்றது புத்தனின் போதனைகள் அடங்கிய புத்தகம். என்ன செய்வது.

கவிதை நடை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

erodethangadurai said...

மிக அருமையான கவிதை. கொஞ்சம் பெண்களை பற்றியும் எழுதுங்க பாஸ்....!

http://erodethangadurai.blogspot.com/

இன்றைய கவிதை said...

அருமை சரவணனண் தன்னிச்சையாக செயல்படும் சமயம் இது மாதிரி நேருவதுண்டு

நன்றி

ஜேகே

ஆயிஷா said...

நல்லாருக்கு.வாழ்த்துக்கள்!

Unknown said...

கவிதையின் வரிகள் மிக குறைவானவை என்றாலும், வரிகள் யோசிக்க வைத்த விஷயம் ஏராளமாய் நீள்கிறது. அருமை..

simariba said...

தேடல் அருமை! வாழ்த்துக்கள்! பாரத்...பாரதி சொன்னது தான் எனக்கும் தோன்றுகிறது.

Post a Comment