Friday, January 21, 2011

பள்ளியில் பொம்மலாட்டம்


   ஜனவரி பன்னிரெண்டு காலை பத்து மணிக்கு எங்கள் பள்ளியில் நான்கு பெரும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. பொங்கல் விழா, தேசிய இளைஞர் தினம், பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி மற்றும் இலவச சீருடை வழங்கும் விழா என ஒரு மிகப்பெரிய கொண்டாட்டம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.காலை எட்டு மணிக்கே ஆசிரியர்கள் ஒன்று கூடி மூத்த ஆசிரியர்களான ஓம்சக்தி மற்றும் இந்திரா ஆகியோருடன் இணைந்து கோலம் போடத் துவங்கினர். எட்டு முப்பதுக்கு எல்லாம் கோலத்தால் பள்ளி விழாக் கோலம் பூண்டது.


ஒருபுறம் பெண் ஆசிரியர்கள் கோலம் போட்டு அசத்த , நானும் எங்கள் உறவின் முறை சார்ந்த பூசாரி , மற்றும் செயர்குழு உறுப்பினர் செல்வம் இணைந்து பொங்கல் கிண்ட ஆரம்பித்தோம். நானும் இணைந்து கொண்டேன். பொங்கல் கிண்ட எங்களுக்கும் தெரியும் என போட்டோ எடுத்தும் கொண்டேன்.வரலாறு முக்கியம்மில்ல என மாணவர் கமண்டும் தூள் பறத்தியது. பின் ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு மெகா கோலம் போடத்துவங்கினர். மாணவர்கள் ஆசிரியர்கள் தங்களுக்காக பொங்கல் விழா கொண்டாட உழைப்பதைப் பார்த்து , தங்களுக்குரிய பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சிக்கு ஆவலாகத் தயாரானார்கள்.




மணி பத்து ஆனதும் எங்களின் உறவின் முறை துணைத்தலைவர் திரு ரத்தினம் , மற்றும் பள்ளியின் பொருளாளர் திரு பாஸ்கரன் ஆகியோர் வருகை தந்து எங்களை மிகவும் உற்சாகப்படுத்தினர். பள்ளித்தலைவர் திரு எஸ். சொளந்திரப்பாண்டியன் அவர்களும் பள்ளிச் செயலர் திரு பி.சொளந்திரப்பாண்டியன் அவர்களும் கலந்துக் கொண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை சரிப்பார்த்தனர். 




விழா ஆரம்பிக்க அனைத்து மாணவர்களையும் வரிசையாக மைதானத்திற்கு வர செய்தார்கள் ஆசிரியர்கள். பொங்கல் விழாவின் இன்பம் மாணவர்கள் முகத்தில் பொங்கி வழிந்தது. மதுரை தென் சரகத்தின் வட்டாரவள மைய மேற்பார்வையாளர் பொம்மலாட்ட நிகழ்ச்சி துவங்கி வைத்து வாழ்த்து சொல்ல வருகைப்புரிய விழா மேலும் உச்சக்கட்டத்தை அடைந்தது.  எங்களின் சிறப்பு அழைப்பாளர் கீழச்சந்தைப்போட்டை சித்தா மருத்துவர் அம்மா நசுருத்தீன் அவர்களும் வருகைப்புரிய விழா இறைவணக்கத்துடன் ஆரம்பம் ஆனது. 




விழாவிற்கு பள்ளித்தலைவர் திரு எஸ். சொள்ந்திரப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்க, பள்ளிச்செயலர் திரு பி,சொளந்திரப்பாண்டியன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.பின்பு பள்ளியின் பொருளாளர் திரு டேனியல் அவர்கள் குழந்தைகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பொங்கல் இனிப்பு போல ஆசிரியர்களின் கற்பிப்பு முறை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தாய், தந்தை, ஆசிரியர்களுக்குத் தரும் பொங்கல் , நல்ல கல்வி பயிலுதலும், ஒழுக்க நெறியுடன் வாழ்தலும் எனக் கேட்டுக் கொண்டார். ( டேனியல் அவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு என்றும் பாடுபடும் தீவிர நபர். பள்ளி வளாகத் தூய்மை, துப்பரவு பணியாளர்களை மேற்பார்வையிடல், வகுப்பறையில் பல்பு , பேன் , சுவிட்ச், பெஞ்சு ஆகியவை புதிதாக வாங்கி தருதல் என உடனடியாக செய்து தருபவர்)




பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அவர்கள் துவக்கி வைத்தார். மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர்.
மரப்பாச்சி பொம்மைகளை வைத்து விதவிதமாக கதை சொல்ல ஆரம்பித்தனர். மாணவர்களின் பொது சுகாதாரம், காயகறிகளை உண்ண வேண்டும் , பொது இடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று அசத்தினர். பின் திரைக்கு பின்னால் இருந்து பொம்மைகளை வைத்து நீதிக்கதைகள் , நிஜக்கதைகள், பாடக் கதைகள் என நிழல் உருவங்களை வைத்து கதை சொல்லி கலை கட்ட வைத்தனர். நேரம் போனதே தெரியவில்லை.



 நிகழ்ச்சிகளைப்பார்த்தப்பின் பேசிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் இப்பள்ளி செயல் வழிக் கற்றல் செயல்பாடுகளை நன்முறையில் செயல் படுத்துகிறது . இது போல அனைத்துப்பள்ளி செயல் பாடும் அமையுமானால் மதுரை மாவட்டத்தில் தென்சரகம் ஒரு முன்மாதிரியாக செயல் படும் என்று கூறினார். ஆசிரியர்கள் நல்ல முறையில் பயிற்சி அளித்துள்ளனர்.மாணவர்கள் மூத்தோர் சொல் படி கேட்டு நடந்தால் முன்னேறலாம் என்றார். கதைகூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
   அடுத்ததாக மருத்துவர் அம்மா அவர்களால் ஆசிரியர்கள் சார்பில் எடுக்கப்பட்ட சீருடைகள் பொங்கலுக்கு இலவசமாக வழங்கப்பட்டது . பதினாறு மாணவர்கள் பயனடைந்தனர். மருத்துவர் அம்மா பள்ளியின் செயல் பாடுகள் என்னை மாணவ பருவத்திற்கு அழைத்துச் சென்றது . இது மாதிரி பள்ளிகள் தான் சிறந்த குடிமகனை உருவாக்கும் எனக்கூறி பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மதியம் இரண்டு மணிவரை எங்களுடனே இருந்தார்.


       பின்பு என் முறை வரவே தேசிய இளைஞர் தினமான சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் பற்றிய கருத்துக்களை என் சகோதர , சகோதரிகளான மாணவச் செல்வங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.
 விழாமுடிவில் ஆசிரியர் திருமதி ஓம் சக்தி நன்றி கூற விழா இனிதே முடிந்தது. பன்னிரெண்டு ஐம்பது ஆகியது.அனைவருக்கும் பொங்கல் இனிப்பு வழங்கப்பட்டது. பின் மதிய உணவு அருந்த சென்றனர். 

9 comments:

குமரன் (Kumaran) said...

Please send me an email. My email address is in my profile.

Thekkikattan|தெகா said...

கலக்கல் விழா! நல்லாவே பொங்கி இருக்கீங்க பொங்கல :)

பகிர்விற்கு நன்றி!

வருண் said...

நீங்க ஒரு வாத்தியாரா, சார்? :)

முதல் படத்தில் உள்ள கோலம் பெரிய கோலமாயிருக்கு!

settaikkaran said...

இடுகையும் புகைப்படங்களும் சுவாரசியம். குறிப்பாக அந்த கோலமிடுகிற புகைப்படம் - அந்தக் கோலத்தின் கோடுகள் மிகத்துல்லியமாக ஆச்சரியமளிக்கின்றன. நல்ல பகிர்வு!

கத்தார் சீனு said...

மிக்க நன்றி மதுரை சரவணன் !!!
உங்கள் வலைமனை அருமை !!!

R. Gopi said...

படங்கள் நன்று. நடுநடுவே வரும் காமெடி வருணனை சூப்பர்

G.M Balasubramaniam said...

This is my sons laptop.This does not have a Tamil software downloaded.It is a pleasure going through your posts. Needless to say it is good. I take this opportunity to thank you for writing about me in your post. I also carry the moments of pleasure of your company when you were with us for a short period. My wife joins me in wishing you all the best in your life.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

// செயர்குழு//
//சொளந்திரப்பாண்டியன்//
//சொள்ந்திரப்பாண்டியன்//
//மருத்துவர் அம்மா பள்ளியின் செயல் பாடுகள் என்னை மாணவ//
இலக்கணப் பிழையையும் எழுத்துப் பிழையும் தவிர்த்து என்றைக்கு எழுதுகிறீர்களோ அன்றைக்கே எங்களுக்குப் பொங்கல்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - நல்லதொரு நேரடி ஒளிபரப்பு - அருமையாக இருந்தது. நன்று - விழாக்கள் கொண்டாடும் போது எங்களையும் அழையுங்கள் - கலந்து கொண்டு மகிழ்கிறோம். சரியா ... நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment