Tuesday, January 11, 2011

இலட்சிய ஆசிரியன்

நீண்ட நாட்களுக்கு பின் என் நண்பர் கல்யான் அவர்களை சந்தித்தேன். அவர் ஆசிரிய பயிற்றுநராக இருந்து தற்போது முது நிலை ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர்.   நான் பெங்களூர் ஆங்கில பயிற்சிக்கு சென்றவிபரம் அறிந்து , அங்கு கொடுத்த எதாவது ஒரு பயனுள்ள மெட்டிரியல் இருந்தால் தரவும் எனக் கேட்டார்.

     ஆசிரிய பயிற்றுநராக இருந்த சமயம் அவர் ஆசிரியர்கள் மிகவும் உழைக்கிறார்கள். ஆனால், மாணவர்கள் தான் அவர்கள் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பதில்லை. தனிப்படிப்பு மூலம் பணம் தந்து கற்றுக் கொண்டு , வகுப்பறையில் கவனிப்பது இல்லை என அடுக்குவார். மேலும் எந்த ஆசிரியரையாவது இப்படி இவர் செயல் படுகிறார் என்றால் கடிந்து கொள்வார் , ஒரு தலைமையாசிரியரான நீங்கள் அவர்களை திருத்த முயற்சி செய்யுங்கள் , இல்லையெனில் அவர்கள் செய்வதை கவனித்து , பின் முடிவெடுங்கள். (அதாவது ஒரு வருடம் கழித்து) . மாணவர்களை படிக்க செய்ய அனைத்து நவீன யுத்திகளையும் பயன்படுத்துவார் , என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவார் , அதானால் ஏற்படும் நல்விளைவுகளை அவரே வந்து மதிப்பீடு செய்வார்.

      அரசு சாதனத்தை இயக்க கல்வி அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி இல்லை , அவர்கள் திறமை வாய்ந்தவர்கள் . ஆனால், அவர்களை அரசு ,தேவையில்லா சர்வே , தகவல் உரிமைகளை பெறுதல் மூலம் வேலைப்பளுவை அதிகமாக்கி , பள்ளிகளை பார்வையிடுதலை தவிர்க்க செய்கிறது. அதிகாரிகள் மதுரை எஸ்.எஸ்.ஏ . முதன்மைக் கல்வி அதிகாரிப்போல எதற்கும் பயப்படாமல் ஆசிரியர்களை முறைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அவர் ஆசிரியர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவும் செய்வதால் , கண்டிப்புடன் அன்பானவர் என்பார் . அவரின் கூற்றுக் கொள்ளப்படவேண்டியது.

          துவக்கப்பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகளை நம் ஆசிரியர்கள் முறைப்படி செயல்படுத்தினால், உயர்கல்வியில் ஆசிரியர்கள் எந்தவித கஷ்டமும் படத்தேவையில்லை.ஆனால் இன்றும் சில ஆசிரியர்கள் ஏ.பி.எல்யை எதிர்ப்பதை பார்க்கும் போது இவர்களை தார் பலைவனத்தில் வேலைபார்க்கசெய்ய வேண்டும என்பார். துவக்கப்பள்ளி மாணவர்கள் தாயைப்பிரிந்து , கால் வயிறு கஞ்சி கூட சாப்பிடாமல் வருகிறார்கள். அவர்களை ஏமாற்றுவது மிகவும் வருத்தத்துக்குரியது என்பதில் என் கருத்திற்கு உடன்பட்டவராவர்.

            தற்போது ஒரு ஆசிரியராய் அவரின் மனநிலையை அறிய ஆவல் கொண்டேன். அவரிடம் நான் கேட்ட கேள்விகள் 1. உங்களின் நவீன உத்திகள் மற்றும் சோதனைகளை செய்ய அனுமதிக்கின்றனரா....?

அனுமதிப்பதில்லை. அதையும் மீறி பயன்படுத்தினால், என்னை ஒரு மனநலம் குன்றியவனைப்போல பார்க்கின்றனர். இருப்பினும் என் நிலையில் இருந்து மாறுவதாய் இல்லை .

2. ஆசிரியராய் இருப்பது என்பது ஆசிரியப்பயிற்றுநராக இருப்பதைவிட கடினமா?

அப்படியில்லை... ஆனால் ஆசிரியப்பயிற்றுநராக இருந்த போது , ஒரு சுதந்திரம் இருந்தது. உங்களைப்போன்ற ஆசிரியர்களிடம் நவீன யுத்திகளை பரிசோதிக்க சொல்லி , அதனை மதிப்பீடு செய்து , அதனை எல்லாப் பள்ளிகளுக்கும் நடைமுறைப்படுத்தசெய்வது எளிதாக இருந்தது. ஆனால்,உயர் கல்வி பொறுத்தவரை மதிபெண் அடிப்படையில் இயங்குவதால், தலைமை ஆசிரியர்களும் நூறு சதவீத தேர்ச்சியை மனதில் கொண்டு இயங்குவதால், புரிந்து , உணர்வுப்புர்வமாக , மனதில் தங்கும்விதமாக கல்வி போதனை அமையாமல், மனப்பாடம் சார்ந்த ஒரு முறையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல் படுகிறது.

3. ஆப்பிரேசன் சக்சஸ் பேசண்டு டைடு என்ற ரீதியிலான கல்வி மட்டுமே , நவீன கொலை , கொள்ளைகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா.? தற்போதாவது என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கு , தலைமை ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்களால் தொல்லையும் தொந்தரவும் உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா....? அவர்களை இப்போ து என்ன செய்யலாம்..?

    நிச்சயமாக , ஆனால், எல்லா ஆசிரியர்களையும் குறைசொல்ல முடியாது. மற்றும் அது போன்ற ஆசிரியர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது ,அது நம் கொள்கையை மாற்றிவிடும். லெட் தம் டு ரியலைஸ். நாம மாத்திக்காட்டுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது. நீங்கள் இதுவரை அவர்களைப்பற்றி கவலைப்பட்டுள்ளீர்கள் , ஆனால் அவர்களுக்காக உங்கள் பணியினைச் செய்யத் தவறியது உண்டா....? அப்படித்தான் நானும் பின்வாங்கமாட்டேன். என்னை லூசு என்பவனை இவ்வளவு நாளாய் ஊரை ஏமாற்றியுள்ள விவரத்தை உணர்த்துவேன். என்னைப்போல இரண்டு ஆசிரியர்களையாவது இந்த வருடத்தில் உருவாக்குவேன்.

  மாணவர்கள் பற்றி உங்கள் கருத்து....

   அவனை முட்டாள் ஆக்குவது ஆசிரியர்கள் தான் , மதிப்பெண் மட்டுமே சாதனைக்கு வழி என எண்ணி , அவனை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக ஆக்கி உள்ளார்கள். இஸ் என்பதைக்கூட வாசிக்க தெரியாதவன் நாலு பக்கம் கட்டுரையை அழகாக பிழையில்லாமல் எழுதுகிறான். அவனின் அறிவை முறைப்படுத்தினால் , அவன் மிகவும் திறமை வாய்ந்த அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானியாவன். பாவம் தொள்ளாயிரம் மதிப்பெண் மட்டும் எடுத்து அவனின் சிந்திக்கும் அறிவை வீணாக்குகிறோம். ஆசிரியர்கள் மட்டுமே மணவனின் எதிர்காலத்தை இறுக்கமானதாக மாற்றுகின்றனர். தனிப்படிப்புக்கு அழைத்து கொடுக்கின்றன்ர். நவீன யுத்திகளை பயன்படுத்து நாம் கற்றுதருவதை மாணவர்கள் ஆர்வமுடன் கவனிக்கின்றனர். அவர்களின் படைப்பாற்றல் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. ஆனால் அவர்கள் நம்மிடம் வந்து இப்படியெல்லாம் எனக்கு பாடம் நடத்தினால், நாங்க முதல் குரூப் எடுத்து இருப்போம் என்கின்றனர். பாவம் ....


     அவரை பிளாக் எழுத அழைத்துள்ளேன் . விரைவில் பொங்கல் முதல் அவர் எழுத துவங்குவார். அவரின் உரையாடல் இப்படியே தொடர்ந்தது. ஆசிரியர்கள் மனம் மாறினால் , மாணவனின் மனம் மாளிகையாக மாறி , சமுகத்திற்கு பயனுள்ள ஒழுக்கமான எதிர்காலம் கிடைக்கும் என நம்புவோம்.

9 comments:

Chitra said...

அவனை முட்டாள் ஆக்குவது ஆசிரியர்கள் தான் , மதிப்பெண் மட்டுமே சாதனைக்கு வழி என எண்ணி , அவனை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக ஆக்கி உள்ளார்கள்.


.... absolutely true.....

உங்கள் நண்பரின் ப்லாக் முகவரி பகிர்ந்து கொள்ள மறக்காதீங்க.....

Anonymous said...

உண்மை சரவணன்.

ம.தி.சுதா said...

ஏணிகள் நல்லாயிருக்கணும்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

முனைவர் இரா.குணசீலன் said...

3. ஆப்பிரேசன் சக்சஸ் பேசண்டு டைடு

முனைவர் இரா.குணசீலன் said...

மதிப்பெண் மட்டுமே சாதனைக்கு வழி என எண்ணி , அவனை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாக ஆக்கி உள்ளார்கள்

G.M Balasubramaniam said...

ஆசிரியப் பணியை ஒரு சேவையாக கருதினால் மட்டுமே, பணி சிற்க்கும்.ஆசிரியப்பணியை பகுதி நேரப்படிப்பு சொல்லித்தருவதன் மூலம் சம்பாதிப்பதில்
காட்டும் அக்கரையை முழுநேரப்பணியில் காட்டவேண்டும்.வாழ்க்கையின் VALUES பற்றி பாடம் சொல்லிக்கொடுக்க பாடதிட்டம் மாறவேண்டும் என்று ஆசிரியர்கள் நினைக்கக்கூடாது.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமையான பகிர்வு சார்.

Victor Suresh said...

உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன். பல பயனுள்ள பதிவுகள். கல்வி, இலக்கியம் என்று எனக்கு விருப்பமான தலைப்புகளில். உங்களைப் பின் தொடர்கிறேன். அடிக்கடி வருவேன்.

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html

Post a Comment