Wednesday, June 30, 2010

எல்லாம் ஆசிரியர்கையில் ...

        இன்று என்னுடைய நண்பர் மற்றும் தலைமை ஆசிரியரான திரு அருணாச்சலம் என்கிற அருணாவை பார்த்தேன் . அருணா சிறந்த முற்போக்கு வாதி மற்றும் சீர்திருத்த வாதியும் ஆவார்.

       அவர் சொந்த பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பதால் கல்வி சம்பந்தமான புதுமைகளை புகுத்துவதில் அக்கறை அதிகம் கொண்டவர் மற்றும் மாணவர் நலனுக்காக உடனடி நடவடிக்கைகளை செய்து முடிப்பவர். அதனால் தான் அவரின் நடுநிலைப்பள்ளியில்  ,இன்று உள்ள சூழ்நிலையில் எந்தவிதமான வாகன உதவியும் இன்றி , முப்பதற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை பார்கிறார்கள். இது அவருக்கு சாரும் பெருமை. மற்றும் அவரின் தாயார் அதே பள்ளியில் தமிழக அரசின் நல்லாசிரியராக விருது பெற்று  ஓய்வு பெற்றவர்.


      காலை நான் புதிதாக உருவாக்கி உள்ள குரல் பதிவு செய்யப்பட்ட குறுந்தகட்டை  கொண்டு சென்று கொடுத்தேன். தமிழ் மீதும் சமச்சீர் கல்வி மீதும் பேச்சு சென்றது.
அப்போது அவர் எழுப்பிய கேள்விகள்.இதோ உங்கள் முன் .....
m
1. சமச்சீர் கல்வி என்று சொல்லுவதே தவறு. இது எப்படி இருக்கிறது என்றால் மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றுவதாகவே உள்ளது .  நானும் உங்களை போல எப்படி..? இன்று அனைவருக்கும் சமமான சீரான கல்வியை அரசு தர முன் வந்துள்ளது என்பது இதுவரை  அரசு சமமில்லாத சீரற்ற கல்வியை தமிழகத்தில் தந்துள்ளதாக ஒத்துக் கொள்வது. அது மட்டுமல்ல இது ஆசிரியர்கள், கல்வி சிந்தனையாளர்கள் இதுவரை அனைவருக்குக் தரமில்லாத கல்வி முறையினை தத்துள்ளதாக ஒப்புக்கொள்வதாகும். ஆசிரியர்களான நம்மால் ஏன் தமிழ் வழிக் கல்வி முறையில்  தரமான கல்வியை தரமுடியாது...?அல்லது தரவில்லையா..?.நாம் உருவாக்கியவர்கள் தான் இன்று வரை     நம்மை தெளிவாக ஆட்சி  செய்துள்ளனர். செய்கின்றனர். அப்துல் கலாம் என்று சுட்டி காட்டவில்லை. என் பள்ளியில் படித்த மாணவன் என் ஆசிரியர். அதுவும் திறமை மிக்க ஆசிரியர். என்னுடன் தமிழ் வழிக்கல்வியில் படித்தவன் மாநகராட்சி பணியாளர், என் கல்லூரி நண்பன் தமிழ் வழியில் படித்தவன் மாவட்ட நிர்வாகி.எப்படி எல்லாத் துறைகளிலும் வந்துள்ளான். ஆகவே வகுக்கும் திட்டத்தில் இல்லை, அத்திட்டத்திற்க்கான வார்த்தைகளில் இல்லை . படிப்பு கல்வியை பொறுத்தவரை அது ஆசிரியரை பொருத்தது  மட்டுமே சிறப்பும் , சிறப்பர்றதும் சாரும். யாரை நம்ப வைக்க ...
சமச்சீர் வார்த்தை தவறா ..?.சரியா....?




2.    தமிழில் அனைத்தும் படிப்பது  என்பது சாத்திய மில்லாதது. மற்றும் எல்லா இடங்களிலும் தமிழ் பயன்படுத்த வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை .ஆனால் இன்று  நிலைமை  சாதாரண சந்திப்பில் கூட  தமிழில் கூச்சபட்டு பேச தயங்குகிறோம் , இடையிடையே தம்மை அடையாளம்  காட்ட நாம் ஆங்கிலத்தில் பேசுகிறோம். பின் எப்படி தமிழ் மலரும்...? 
  
        இன்று இஞ்சினியரிங் படிப்புகள் தமிழ் வழியில் வந்துள்ளதாக தகவல் . ஆனால் இது மகா முட்டாள் தனம். என்ன அண்ணா இப்படி சொல்லுறீங்க ..? ஆமாம் , சரவணன். தமிழ் எம்மொழியாக இருக்கலாம். அனைத்தும் தமிழில் இருந்தால் , அவன் எப்படி தொழிலுக்கு தமிழை மட்டும்  எடுத்து செல்ல முடியும் . வேலை வாய்ப்பை பொறுத்த வரை தமிழ் மட்டும் என்பது அவனுக்கு சோறு போடாது. ஏனெனில் , தமிழ் வழிக்கல்வி அதிகமான வேலைவாய்ப்பை தமிழ் நாட்டில் ஏற்படுத்தினாலும் பிழைப்புக்கு பிற மாநிலங்களையும், பிற நாட்டையும் சார்ந்துள்ளதால், இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே நாம் படிப்பது உத்தமம்  . ஆந்திராவில் தமிழ் மட்டும் கற்ற ஒருவரால் எப்படி  வேலை பார்க்க முடியும். அமெரிக்காவில் சென்று பணிபுரிய முடியும். தமிழ் கல்விமுறை அனைத்தையும் பெற்று தருமா...?




3.  கல்வி கட்டணம் முறை படுத்துதல் என்பது வரவேற்க தக்கது , இருப்பினும் இதை எந்த ஆங்கில வழிக் கல்விச்சலைகள் அமல் படுத்தும். இது மறைமுகமாக பில் இல்லாமல் பெற்றோரை வதைக்க வழி வகுக்கும் . சட்டப்படி ஒரு கட்டணம் பில் கொடுத்தும் ,அது , இது இன்று மேலும் கட்டணத்தை வசூலிக்க வகை செய்யும். எந்த பெற்றோர் தன் மகனின் படிப்பை கெடுத்து , எதிர்காலத்தை  பாழாக்குவார்கள்    ,புகார் கொடுக்க முன் வருவார்கள். 
இன்று தன் மகனின் படிப்பை பாழாக்கி யாரும் பள்ளியை எதிர்க்க தாயாரா...? பள்ளிக்கு தகுந்த மாதிரி தரம் ...தரத்திற்கு தகுந்த மாதிரி காசு...காசக் கொடு தரத்தை பெறு . 




4. இன்று சமச்சீர் கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சுமைகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தகத்திற்கு பின்னால் உள்ளவைகள் ஆசிரியர்கள் உண்மையாக மாணவனுக்கு கொண்டு சென்றால் மட்டுமே , பயனடைய முடியும் . இதுவும் மறைமுகமாக வெளி சந்தைகளான நோட்ஸ் பெருக்க வழி வகை செய்கிறது. 
மெட்ட்ரிக்  பள்ளிகள் அதே சிலபஸ் மட்டும் பயன் படுத்தும் ஆனா,பட புத்தகம் வேறு . இதுவும் மறைமுக வியாபார உத்தியாகவே உள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற புத்தகத்தினை நாம் பயன் படுத்த வேண்டும். இதிலும் தனியார் ஆதிக்கம் அதிகம் . எது எப்படியோ , கல்வி மாணவனுக்கு தரமானதாக சென்றால் சரி . ஆசிரியர்கள் தான் எல்லா  விடியலுக்கும் காரணம் என்பதை உணர்ந்து செய்யலார்ற வேண்டும்.எதிலும் சமம் இல்லை , syllabus  தவிர மற்றவை எல்லாம் சமாமில்லை . பின் எப்படி.....?  


   அய்யா , அவரும் நானும் உரையாடிய நிகழ்வுகளில் அவரிடம் சிக்கி தவித்தேன் இதில் மாற்று கருத்து உண்டு என்பவர்கள் மறு மொழி இடலாம். என்னால் அவருடன் போட்டி போட்டு பேச முடியவில்லை. ஏனெனில் ,நான் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ளவன். அதற்காக அவர் சமச்சீர் கல்வி முறைக்கு எதிரானவர் அல்ல . நாம் எதை நோக்கி செல்கிறோம் என்பது தான் அவரின் கனிவான எண்ணப் பதிவு.


    ஆசிரியர் நினைத்தல் எது வேண்டுமானாலும் நடக்கும். மண்ணாகவும் , பொன்னாகவும் நாம் மாறுவது ஆசிரியர் கையில் தான். நான் பொன்னானதும் என் ஆசிரியர்களால் தான். முதல் வகுப்பு முதல் இன்று வரை நான் சந்திக்கும் அனைத்து ஆசிரியர்களும் என்னை மெருகேற்றி பொலிவடைய செய்பவர்கள் தான். கல்வி முறைகளில் மாற்றம் தேவை இது மறுக்க முடியாத உண்மை. ஆனாலும் கல்வி முழுமையாக சென்று அடையா ஆசிரியர்களாகிய நாம் முழுமையாக அற்பணிக்க வேண்டும். எல்லாம் ஆசிரியர்கையில் ...



 
    
  



Tuesday, June 29, 2010

மதம் சரியா..? தப்பா..?

   கடவுள் தோன்றுவார் என்பது உண்மை . கடவுள் கடவுளாக தோன்றமாட்டார் , மனிதனாக தான் தோன்றுவார் என்பதும் மறுக்கப்படாத உண்மை. ஆகவே தான் கடவுள் மனித உருவில்  யேசுவாகவும் , நபிகளாகவும் ஓளவையுடன் பேசும் முருகனாகவும் நமக்கு காட்சி தந்துள்ளார்.


      மதங்கள் போதிப்பது மனித நேயம் மட்டுமே என்பதுடன் இருந்து விட முடியாது , அவை அந்த நாட்டின் கலாச்சார பிரதிலபளிப்பாகவே இருந்து வந்துள்ளது. ஆகவே தான் அவைகள் உலகமனைத்திற்கும் பொதுவானதாகவும் இருந்ததில்லை.
      தருமி அய்யா சொல்வது போல் நம் ஊர் முருகன் பிற ஊர்களுக்கு பரவாமல் இருந்ததும் காரணமாகும்.
     காலப் போக்கில் தமிழன் தன் தேவைகளுக்காக குடி பெயரும் போது ,தன் காலாச்சார பிரதிபலிப்பாக தன் அடையாளங்களுக்காக தன் மதத்தையும் எடுத்து சென்றுள்ளான். அதன் வெளிப்பாடே சிங்கப்பூர் முருகன் கோவில் .இது போன்று தற்போது பல .

 பிற நாட்டவர்கள் காலனி ஆதிக்கத்தினை விரிவு செய்ய , பொருளாதார சந்தைகளை பெருக்க ,அதிகாரத்துடன் , தன் கலாச்சாரத்தை பரப்பும் மதத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள்.  
      மதம் ஒரு பலமான ஆயுதம் . தன் காலனி ஆதிக்கத்தினை  அதிகாரத்தால் மட்டும் பலப்படுத்த முடியாது என்பதால் , மதத்தை பரப்பி பாமர மக்களின் ஆதரவினை நாடினான். ஒவ்வொரு படையெடுப்பிலும் இனம், மொழி , கலாச்சார வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் எந்த நாட்டுடன் போர் தொடுத்தாலும் கோவில்களை தான் அழித்தார்கள்.முஸ்லிம் படையெடுப்பில் சோமநாதபுரம் கோவில் பலமுறை தாக்கப்பட்டுள்ளது.

    எந்த புரச்சிக்கும்  ஆரம்பபுள்ளி மதத்தின் பின் புலத்தில் தான் உதயமாகும். மனிதனை பக்குவபடுத்துவது மதமும் ,மதம் சார்ந்த உணர்வும் ஆகும்.மதம்  தாண்டிய சிந்தனை தான் நாத்திகத்தின் அடிப்படை என்பது பொய்யான கருத்து. மதத்தின் ஆழமான அறிவு தான் கடவுள் இல்லாமை.  தானே கடவுளாக உணரப்படுவதால்  வந்த உண்மை. நாத்திகம் பேசுபவர்கள் ஏதாவது ஒரு உருவில் வந்திருந்தாலோ, அவர்களும் இதுவும் ஒரு மதம் என்று சொல்லிருந்தாலோ அவர்கள் கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதும் மறுக்கப்படாத உண்மை.


     புத்தன் ஞானமடைந்ததால், புத்தமதம் தோன்றியது. பெரியாரும் ஞானமடைந்ததால்
நாத்திகம் தோன்றியதாகவே என் சிற்றறிவிற்க்குப் படுகிறது. பகுத்து பார்க்கும் தன்மை மதத்திற்கான அடையாளம். எந்த மதமானாலும் நல்லது , தீயது என பிரித்துப் பார்க்கும் தன்மை உண்டு. ஒவ்வொரு செயலும் ஒரு மதக்கருத்தை வலியுறுத்தும். அச்செயலின் விளைவையும் எடுத்துச் சொல்லும் . அதற்கு பாவம் , புண்ணியம் என்று பெயரிட்டு அழைக்கும். நாத்திகம் அதனை எல்லாம் மனித செயலின் விளைவால் நிகழ்பவை , இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என எடுத்து இயம்பும். எதுவாகினும் செயலின் விளைவே நம் உலகத்தினை ஆட்டிப் படைக்கின்றன.


        மரத்தின் மேலிருந்து விழுந்த பழம் தான் நியூட்டனின் புவியிர்ப்பு விசையினை கண்டுபிடிக்க உதவியது. ஆகவே, விஞ்ஞான ரீதியாக பார்த்தால் ஒவ்வோரு செயலுக்கும் காரணக்காரியங்கள் உண்டு.அதுபோல் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்பது போல் , மதம் அதனை பாவம் , புண்ணியம் என்பதைக் கொண்டு பிரித்து, சாரி பகுத்துப் பார்க்கிறது.

      அது சரி , செய்வினை, பாவம் நிவர்த்தி செய்ய பரிகாரம் என்பதெல்லாம் உங்கள் அறிவியல் விளக்குமா என்றால் அதையும் விளக்கும். ஒரு பொருளை நகர்த்த நாம் நெம்புகோல் பயன் படுத்துகிறோம் . அதுவே , பொருள் உயரத்தில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், என்னத்தான் கடப்பாறை கொண்டு நகர்த்தி வாந்தாலும், பொருளை கீழே கொண்டு வர நான்கு பேர் தேவை.அது தான் கஷ்டகாலம் . மதம் இந்த தருணத்தை தான் உனக்கு கிரகம் பிடித்துஇருக்கிறது, பரிகாரம் தேவை என்கிறது.

    அறிவியலில் இதற்கு பரிகாரம் , சாய்தள அமைப்பு பொருளை மேலே எளிதாக ஏற்றவும், இறக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது. அது போலத் தான் பரிகாரம் உருவாக்கப்பட்டது. நம் ஆன்மா துன்பத்திலிருந்து விடுபட , கஷ்டத்தைப் போக்க சில நியதிகளை உருவாக்கி கொண்டுள்ளது.


      அதுபோல் மதங்கள் தம்மை பிற மண்ணில் பரப்பினாலும் அவை அந்த மண்ணின் அடையாளங்களையும் தம்முள் உள் வாங்கி கொண்டுள்ளன. இன்று மாதக்கோவில் சப்பிரம் வலம் வருவதும் , கிறிஸ்துமஸ் மாத இரவுகளில் கேரல் என்பதும் நம் நாட்டின் தேரோட்டம் , பஜனை போல் உருவானது தான், முஸ்லிம்களின் சந்தனக்கூடு திருவிழாவும் நம் தேரோட்டத்தையே நினைவுபடுத்துகின்றன.  

      மதம் எவ்வாறு பரிமாணம் பெற்றுள்ளதோ அதேப்போன்று நத்திகமும் உருமாறி திராவிடத்தின் வெளிபாட்டில் , கட்சிகளாக அடையாளம் காணப்பட்டு , நாட்டை ஆளுகின்றன. இன்றும் நாட்டை ஆளுகின்றன். ஆக மதம் என்றும் நாட்டை ஆளும் தன்மையை இழக்கவில்லை. மதம் மண்ணின் தன்மைக்கு எற்ப உருமாறிக் கொண்டே உள்ளது.அது இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், புத்தம் என்று மாறியது போல் , நாத்திகமாகவும் உள்ளது.

     என்ன அப்படி பார்க்கிறீர்கள்...! இன்று காலை தருமி அய்யாவை சந்தித்ததன் விளைவு
என்று நம்புகிறேன். என் கருத்தில் எனக்கு மட்டும் உடன்பாடு உண்டு. மறுப்பு இருப்பின் வெளிபடுத்தலாம் ஆனால் புண்படும் படியாக இல்லாமல் இருந்தால் நலமாக இருக்கும்.
அதுசரி மதம் சரியா..? தப்பா..?கடவுள் என்பவர் உண்டா ..? இல்லையா...? கடவுள் தோன்றூவாரா...? மீண்டும் தலைப்பிலிருந்து வாசிக்கவும். உண்மை ஒருவேளை புலப்படும் .

 

    
    

Monday, June 28, 2010

கலைஞருக்கு நன்றி ...! நன்றி ...!

   என்னைப் போன்று கோடானக் கோடித் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் பால் வார்த்த கலைஞர் அய்யா அவர்களுக்கு நன்றி..!

   தமிழுக்கு முதல் மரியாதை செலுத்திய கலைஞருக்கு நன்றி...!

  செம்மொழி மாநாடு பிடித்தாலும் , பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை கடைசி நாள் அறிவிப்பு என்னை போன்றவர்களின் , குறிப்பாக பிளாக்கர்களுக்கு பிடித்த விசயத்தை வழிமொழிந்த கலைஞருக்கு நன்றி...! தமிழனாய் மீண்டும ஒரு முறை நன்றி..!



     ”தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டியதற்காகவா...?”

   இப்படி கோள்வி கணைகளால் துளைக்கும் முன் என்னுடைய ஜீன் ஆறு ( என்ன முறைக்கிறீங்க எங்க கலைஞர் அய்யா கற்றுக்கொடுத்தது தான்)அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ..?பதிவை நினைவுபடுத்த விரும்புகிறேன்.


     என்னைப்போன்ற பதிவர்களின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுத்தக் கலைஞருக்கு மீண்டும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...!தமிழ் படித்தவர்களுக்குத்தான் இனி முன்னுரிமை (முதலிடம் வேலைவாய்ப்பில் ...)  இது நிச்சயம் தமிழின் மீது இனி ஈடுபாட்டை எற்படுத்தும் .

    எப்படி சாத்தியம் ...?என்று என்னிடம் அப்போதே வினா எழுப்பியவர்களுக்கு இன்று சாத்தியமாக்கிய கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில் எந்த அச்சமும் இல்லை
கலைஞர் அவர்கள் கல்வியை அரசுடைமைப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் தொடக்கக்கல்வியையாவது அரசுடைமையாக்க வேண்டும் . இலவசமாக எதை எதையோ தருவதர்க்கு தயாராக இருக்கும் கலைஞர் அய்யா அவர்கள் கல்வியை எழை மக்கள் முழுமையாகப் பெறுவதற்க்கு இலவசக் கல்வித் திட்டத்தை அறிவிக்க வேண்டும. கல்வி சாலைகளை அரசே எடுத்து நடத்த வேண்டும்.
    


     இந்த கோரிக்கை கலைஞர் காதுகளில் விழத் தமிழன் எங்கிருந்தாலும் தயவு செய்து நாளை முதல் இலவசப் படுத்துக கல்வியை என்று தந்தி கொடுப்போம்...ஆதரவு தாரீர்...!
     

Sunday, June 27, 2010

செல்லும் சொல்லும்

செல் , சொல்
இரண்டும் அவசியம்
ஒட்டியே திரிவதால் ..!
இரண்டும் நவீனமாகி
போனது ...
பணம் மட்டும் குறியாய் ...!

செல்லும் சொல்லும்
மாறிக்கொண்டே இருக்கும்
மனிதனின் தேவைகளை
பூர்த்தி செய்வதால் ...!


செல்லும் சொல்லும்
நிறம் மாறும்
தன்னை அடியாளம் காட்டவே..!

செல்லும் சொல்லும்
சமாநியனிடம்
அறியாமையினால் ...
பயன்பாடுத் தெரியாமல் ..!

செல்லும் சொல்லும்
பலரிடம்  அந்நியமாய்
பயன் அறிந்து ...!

செல்லும் சொல்லும்
பயமறியாது
பெண்மையை பொய்யாய்
ஏமாற்றுகிறது ...!

ஆகவே
பெண்மையை ஏமாற்றும்
செல்லையும்  சொல்லையும்
புதைப்போம் ....
இந்த உண்மையை
நாடெங்கும் விதைப்போம்..!


 

Saturday, June 26, 2010

ராவணன் விமர்சனம்

    மணிரத்தினம் திரைகதை , இயக்கத்தில் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் எடுக்கப்பட்ட படம் . அனைவர் எதிர்பார்ப்பை வீணடித்த  உணர்வு ஏற்படுத்தினாலும் (நூறு ரூபாய் பணம் கொடுத்து பார்க்கும் சாமானிய ரசிகன் ) , இராமாயணக் கதையை புது வடிவம் கொடுத்து எடுத்த மணிரத்தினத்தை பாராட்டியே ஆகவேண்டும். (இன்னும் ஜனங்க அவரை நம்புறாங்க என்று ).

    இந்த முறை காதை தீட்ட வேண்டியது இல்லை . வசனம் நன்றாக இருக்கிறது. விக்ரம் , பிரிதிவி ராஜ் ,ஐஸ்வரிய ராய், பிரபு என அனைவரிடமும் நல்ல நடிப்பை பெற்றுள்ளது மணிரத்தினத்தின் சிறப்பு. இருந்தாலும் இந்த டண்ட நக்கா .... மேனரிசம் சரியாக வரவில்லை என்றே படுகிறது. சுஹாசினியின் வசனம் பரவாயில்லை .

    உசிரே போகுது பாடல் தவிர பிற எடுபடவில்லை. இதுவே படத்தை ஓட வைத்து விடும். நான் சென்றதும் இப்பாடலின் இசையினை கேட்டுத்தான்.

     தேடப்படும்    குற்றவாளியான   ராவணன் ,ராமனாகிய பிரிதிவிராஜின் மனிவியை தூக்கி   கொண்டு ஓடுகிறான், ராமன் சீதையை மீட்டானா ,அல்லது  ராவணன் தனதாக்கி கொண்டானா என்பது தான் கதை .

   கமிரா கடைசி பாலத்தின் மீது நடைபெறும் சண்டையில் அசத்துகிறது. காட்சி அமைப்பு நம் கண்களுக்கு விருந்து. கார்த்திக் ஏன் வீனடிக்கப்பட்டுள்ளார்  ?    நட்புக்கு ஏற்ற கதாப்பத்திரமோ ...?

    கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை முன்பே எதிர்பார்க்கச்  செய்கிறது. இருந்தாலும் நன்றாக வந்துள்ளது.


    தற்போது வந்துள்ள படங்களுக்கு ராவணன் ஒருமுறை பார்க்கலாம். மணிரத்தினத்திற்கு இந்த படம் அவர் பாணியில் டண்ட நக்கா டணக்கு நக்கா  




(இது என் முதல் திரை விமர்சனம் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். ) 

Thursday, June 24, 2010

பெற்றோர்களே உஷார்...

     காதல் வார்த்தைகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில் தான் காதல் அன்பை உணர்த்தி, அவைகளை நம்பிக்கை அச்சில் வார்த்து , வாழ்தலில் இனிமை கூட்டி   ,வாழ்க்கை உண்மை உணர்த்தி வாழ்க்கையை இனிக்கச் செய்யும் .

ஒருவரை    பிடித்த   மாத்திரத்தில் , காதல் உருவாகிறது என்றால் இது நிரந்தரமானது அல்ல .இனக்கவர்ச்சி காதலாகி , அதுவே வாழ்க்கை என்று வாழும்போது , நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு , தற்கொலையில் முடிகிறது.

   இன்று மதுரையில் பல இடங்களில் மாணவர்கள் இந்த  இனக் கவர்ச்சியில் வாழ்வதை, பேருந்து நிறுத்தம் ,பார்க் , சாலையோர மர நிழல் , மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் என பல இடங்களில் நாம் பர்ர்க்க முடிகிறது வருத்தமளிக்கிறது.

       பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது பாசம் கட்டுவதை உணர்த்த வேண்டும் , தம் கஷ்டத்தை எடுத்து சொல்லவேண்டும். தம் குடும்ப சுழலை காரணம் காட்டி நாம் நம் குழந்தைகளை தண்டிக்க கூடாது .அதை உணர்த்துவதன்  மூலம் குழந்தைகளை நம் கட்டுபாட்டில் வளர்க்கலாம்.

    அதுவம் பெண் குழந்தைகள் இன்று , பாசம் மற்றும் ஒருவிதமான கவர்ச்சி வார்த்தைகளில் ஏமாந்து, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களாக அவன்(காதலன்) சொல்லுகிற இடங்களுக்கெல்லாம் போவதை  பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டப்பட வைக்கிறது .

  பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு இனக் கவர்ச்சியை பற்றி பேசவேண்டும் . பாலியல் விசயங்களை இருபாலரிடமும் பேசி அவர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்தை உணரவைக்க வேண்டும்.


  குடும்ப வறுமை போக்க நல்ல படிப்பு மட்டுமே உதவும் என்பதை அன்பால் எடுத்து  சொல்லுங்கள் , அதுதான் உண்மையான காதல் வார்த்தை . காதல் அன்பால் மட்டுமே உணரப்படும்.    அன்பு தவறுதலாக உணரப்படுவதை சுட்டிக்காட்டுங்கள். பிறரிடம் இருந்து கிடக்கும் காதல் என்ற பொய்யான அன்பு உடல் இச்சையை நோக்கி உள்ளதை உணர்த்துங்கள் .


        நல்ல படிப்பு ,நல்ல பண்பு, நல்ல நட்பு இவை அமைய பெற்றோர்கள் உதவ வேண்டும். கட்டுப்பாடு என்று , மாணவர்களை ஒரு வட்டத்துக்குள் கட்டுபடுத்தி அடிமை படுத்துவது,  எந்த உறவையும் உதறி தள்ளி புது உறவை தேடச் செய்து , அவனது வாழ்வை திசை திருப்ப ஒரு திருப்பு முனையாகும். அவனது குடும்ப சூழல் மட்டுமே மாணவனை நல்வழி படுத்த உதவும்.. பெற்றோர்களே அலச்சியம் , உங்கள் குழந்தைகளின் லட்சியம் தேய காரணமாகி விடும்.

        மாணவன் திசைமாறி மாய வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு, காதல் என்று வார்த்தை ஜலத்தை நம்பி , வாழ்வை துறக்க செய்வது ,குடும்பத்தின் மீது நம்பிக்கை இழப்பே ஆகும் . ஆகவே  , பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது தம் கோபத்தையோ , இயலாமையையோ காட்டாமல் ,உண்மை உணர்த்தி , வளர்த்தால் , குழந்தை பாதை தவறி , காதல் மாயையில் விழுவதை தடுக்க முடியும்.   

Thursday, June 17, 2010

அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை ...

  
அவள் தேவதை
வார்த்தைகள் தருவது அழகில்லை ...
அவள் உலக அழகி
பார்வையில் காண்பது அழகில்லை...
அவள் ரதி
ரசிப்பில் அழகில்லை .....
அவள் ஒன்றும் அத்தனை அழகில்லை
இருந்தாலும் மனசுக்கு  பிடிக்கிறது....
உள்ளத் தூய்மையில் இருக்கிறது அழகு .
இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
ஒன்றாக பொருந்தும் ...!
அழகு யாரிடம் இருந்தாலும்
தன்னம்பிக்கை தானாக பிரசுவிக்கும்
தன்முனைப்பு தானாக மறையும்
தடுமாற்றம் தலைதெறிக்க ஓடும்...
தரம் தன்னகத்தே கூடும்...
அழகு அழகு சேர்க்கும்
அன்பு ஊற்றெடுத்து பாயும்   
அறிவை பெருக்கும்
அழிவை தடுக்கும்

அழகுக்கு அழிவில்லை
அறிவுக்கு அளவில்லை
அழகும் அறிவும்
சேர்ந்து இருத்தல் தெயவிகமே ...!

Wednesday, June 16, 2010

வார்த்தைகளின் அருமை ...

வார்த்தைகளின் வலிமை
பிரிவில் புரியும் ...
வார்த்தைகளின் அருமை
நட்பில் புரியும் ...
வார்த்தைகளின் கடுமை
வெறுப்பில் தான்  புரியும்
வார்த்தைகளின் மகிழ்ச்சி
பகிர்வில்   புரியும் ...
வார்த்தைகளின் சோகம்
வறுமையில் புரியும் ...
வார்த்தைகளின்    ஆறுதல்
வாடும் போது புரியும் ...
வார்த்தைகளின்    வெறுப்பு
மறுப்பில் புரியும் ...
வார்த்தைகளின்  நட்பு
கூடும் போது புரியும்...
வார்த்தைகளின் பிரிவு
மௌனத்தில் புரியும் ...
வார்த்தைகளின் மௌனம்
காதலில் புரியும்
வார்த்தைகளின் காதல்
தனிமையில் புரியும்
வார்த்தைகளின் தனிமை
பைத்தியமாய் இருப்பவரிடம் புரியும்
வார்த்தைகளின் இனிமை
வாழ்வை ரசிப்பதில் புரியும்
வார்த்தைகளின் ரசிப்பு
கவிதையில் புரியும்

வார்த்தைகளின் கவிதை
உங்கள் வாக்கில் புரியும் ....!    
வார்த்தைகளின் உண்மை
செயலில் புரியும்...
வார்த்தைகளின் பக்குவம்
அனுபவத்தில்  புரியும் ...
வார்த்தைகளின் பொய்மை
ஏமாற்றத்தில் புரியும் ...
வார்த்தைகளின் அவசியம்
மொழியின் வளர்ச்சில் புரியும் ...!

Tuesday, June 15, 2010

தமிழக கல்வித்துறை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது ...

   இன்று 15 .06 .2010 உலக முதியவர்கள் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் . தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் இன்று கீழ் கண்ட உறுதி மொழி எடுத்தனர்.

   "Today is world Elder Abuse Awareness day.  Older people have contributed much to our nation . I.hereby pledge that i will respect , love and take care of my parents , grand parents and all senior citizens of our country . I will neither abuse nor permit others to abuse the  senior citizens and shall strive towards changing India a nation free of elder abuse ."


        இன்று முதியவர்களை மதித்தல் என்பது மிகவும் குறைந்துள்ளது என்ற காரணத்தால் , முதியோர் இல்லங்கள் நிரம்பி வழியும் காலமாக உருவெடுத்துள்ளது. 
நம்மை தாலாட்டி , சீராட்டி வளர்த்த அன்பு நெஞ்சங்களை  , முட்கள் பொருத்திய காலணிகளை அணிந்த கால்களால் உதைத்து விடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வலியும், வேதனையும் கொண்டு தன் இளமையை நமக்காக செலவழித்து , தம் உதிரத்தை சிந்தி நம்மை பாசத்தால் வளர்க்கும் பெற்றோர்கள் நம் இல்லங்களை தவிர்த்து , முதியோர் இல்லங்களை நிரப்புகின்றனர் என்றால் நாம் என்று நம் தவற்றை திருத்திக் கொள்வது ?
      
          அரசு இது போன்ற உறுதி மொழி மூலமாக இளமையில் மாணவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த விளைவது பாராட்டுக்குரியது. இளமையில் கல்வி முதுமையில் வளமை. அதுபோல் இளமையில் ஒழுக்கம் , முதுமையில் இளமை மற்றும் மகிழ்ச்சி. தான் மட்டும் அல்ல , நம்மை சார்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும்.

          நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி தூக்கி விட்ட நம்  பெற்றோர்களுக்கு நாம் காட்டும் மரியாதை இது தானா...? என்று கேட்கும் முன் மாறுபட்ட என் கேள்வி ,


1. பெற்றோர்களை எதிரியாக்கியது எது ? பெற்றோர்களை மறக்கச் செய்தது எது?
2.இந்த குறை வளர்ப்பு முறையில் உருவானதா...?அல்லது சூழல் உருவாக்கியதா...?


       இரண்டிற்கும் என்னை பொறுத்தவரை முதன்மை குற்றவாளிகளாக ஆசிரியர்களை கருத நேரிடுகிறது. அதற்கு ஒரே காரணம் நாம் மதிப்பெண்  மட்டும் சார்ந்த கல்வியை அதாவது புள்ளி விபரங்களையும் கருத்துக்களையும் புகுத்திவிட்டு , பண்பு நெறிகளை , ஒழுக்க நெறிகளை கற்று கொடுக்க தவறி விடுகிறோம். அதுவே அவனை கருத்துக்களை மட்டும் தன் மூளையில் ஏற்றி , பாசம் , பண்பு , அன்பு ஆகிய நெறிகளை தவிர்த்து ,காசை மட்டும் கடவுளாக பார்த்து பெற்றோர்களை நடுரோட்டில் நிற்க வைக்கிறது.

     சமச்சீர் கல்வி முறையில் இப்பண்பு நெறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. (இது சம்பந்தமாக தனி பதிவு விரைவில் வெளியிடப்படும்) 

       இன்று என் ஆசிரிய நண்பர் கல்யாணம் வீட்டில் நடந்த நிகழ்வு.  அவர் மனைவியும் ஆசிரியர்.
         இருவரும் தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி ,காலை மிகவும் பிசியான நேரத்திலும் தம் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்து , வயதான காலத்தில் அவர்கள் வியாதிக்கு மருந்து , உணவு எடுத்து கொடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருவது வழக்கம்.

         இன்று வேலை பளு ஆதிக்கம் ஆகிவிட்டக் காரணத்தால் , தம் பெற்றோர்களுக்கு மருந்து கொடுத்து , உணவு மற்றும் எடுத்து வைத்து விட்டு , சாப்பிட்டு விடுங்கள் .மதியம் உணவு குக்கரில் இருக்கு , எடுத்து எப்போதும் போல் போட்டு சாப்பிட்டு விடுங்கள் என சொல்லி விட்டு இருவரும் பணிக்கு வந்து விட்டனர்.

      மதியம் அவரின் மகனிடம் இருந்து போன் ,"அப்பா, பாட்டி வீட்டில் பெட்ட்ச்சு முச்சு அற்று கிடப்பதாக தாத்த வந்து என் பள்ளியில் சொல்கிறார், உடனே விரைவில் வாருங்கள் ...நான் பள்ளியில் இருந்து தாத்தாவுடன் வீட்டிற்கு செல்கிறேன் .வாருங்கள். "

என் நண்பர் அவரது தங்கைக்கு (அருகில் இருப்பதால், இவரை விட விரைவில் அவர் விட்டாய் அடைந்து விடுவார் என்பதால்) போன் செய்து உடனே அருகில் உள்ள மருத்துவரை அழைத்து செல்ல சமயோசிதமாக செயல் பட்டார். அவர் தங்கையும் மருத்துவரை அழைத்து சென்று பார்த்து உடலில் இரத்த அழுத்தம் குறைந்து , உடல் குளிர்ந்து , நாக்கு வறண்டு கிடந்தவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு,  மருத்து ஊசி மூலம்  செலுத்தப்பட்டு உடல் நிலை சரிசெய்யப்பட்டது.

      இருப்பினும் அவர் கண் முழிக்க வில்லை. என் நண்பரும் விரைந்து சென்று , விசாரித்து , அவர்களின் எப்போதும் பார்க்கும் மருத்துவரை தொடர்பு கொண்டு விஷயம் சொன்னபோது அவர் கேட்ட முதல் கேள்வி ,காலை உணவு உட்கொண்டாரா  ...?"

விசாரித்தபோது , சுகர் மாத்திரை கொடுத்து சாப்பிட சொன்னவுடன் , அவர்கள் சாப்பிடாமல் இருக்க அசதி ஏற்பட்டு உணவு அருந்தாமல், சற்று  சேரம் ஆகட்டும் என தாமதிக்க , அதுவே  லோ சுகர் உருவாக்கி உடலை சில் என ஆக்கி , இரத்த அழுத்தத்தை குறைத்து உள்ளது .இன்னும் சற்று நேரம் பார்க்காவிடில் அவரை பார்த்திருக்க முடியாது என்றாராம் மருத்துவர். அவருடன் கணவர் இருந்ததால் , அவர் உடனே அருகில் உள்ள பேரன் பள்ளியில் சென்று தகவல் தந்துள்ளார். தனி நபராக இருப்பின் ,நினைத்து பாருங்கள் .
    
         பின்பு மதுரையின் பிரபல மருத்துவமனைக்கு அழைத்து சென்று சரிசெய்து வீட்டிற்கு இரவு அழைத்து  வந்தனர் என்பது ஒருவிசயமாக இருந்தாலும் நல்ல முறையில் பார்க்கு ஆள் உள்ள பெற்றோர்களே இப்படி திணறும் போது பிறரை நினைத்து பாருங்கள்.
   ௦

       ஆசிரியர்கள் தம் கடமை அறிவை திணிப்பது என்பதுடன் இருந்து விடாமல் , சமுக நலனை கருத்தில் கொண்டு நல்ல எண்ணங்களை மனதில் விதையிங்கள் , நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண் தானாக வந்துவிடும். ஒழுக்கம் எல்லா மதிப்புக்களையும் தானாக தேடி தந்து விடும்.

         நாம் மாணவனை நல்ல பண்பு நலத்துடன் ஒழுக்க சீலர்களாக வளர்த்தால் போதும் அவர்களுக்கு மதிப்பு கூடி , தேர்வில் மதிப்பெண் தானாக வந்து சேரும்.அடிப்படையில் பற்று , பாசம் , அன்பு ஆகியவைகளை போதித்தால் மாணவன் என்றும் மாறாமல் தன் பெற்றோர்களையும் மறக்காமல் மதிப்பாய் வைத்திருப்பான்.
 
        சமுக வளர்ச்சிக்கு ஆசிரியர்களாகிய நாம் பொறுப்புகளை உணர்த்து செயல்பட்டால் ,நம் நாடு சமுக புரட்சி  நோக்கி வளர்ச்சியடைந்து , உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழும். 

  நம் அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நம் தேசத்தின் முதியவர்களை நாம் அவமதிப்பு செய்ய கூடாது என்றும் , அவர்களை மதிக்கவேண்டும் என்றும்  , அவர்களை பாதுகாக்க வேண்டும் ,அவர்கள் மீது அன்பு செலுத்தி கவனிக்க வேண்டும் என்றும் சொல்லி உறுதி மொழி எடுக்க செய்திருப்பது , நம் தமிழக கல்வித்துறை வளர்ச்சி பாதை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

    நாமும் உறுதி எடுப்போம் அரசு கூறுவது போல் , முதியவர்களை அன்பு செலுத்தி கவனிப்போம், நாம் பெரியவர்களுக்கு அவமதிப்பு செய்ய மாட்டோம் என்பது மட்டுமல்லாது அவவமதிப்பு செய்வதையும் தட்டி கேட்போம் , இந்தியாவை பெரியவர்களை  மதிக்கும் நாடாக மாற்றுவோம்.  

Monday, June 14, 2010

இது உசார் பதிவு...

       அய்யா இது உசார் பதிவு. பிள்ளையார் சுழி போடும் போது சரியா போட்டா எல்லாம் நல்லா தான் முடியும் . இல்லன்னா எல்லாம் சிரிப்புல முடியும். வாழ்க்கையும் சிரிப்பா போகும். ஆங்கிலத்தில் WELL BEGUN IS HALF DONE  என்பார்கள்.

       சென்ற வருடம் சேர்க்கையின் போது மாணவர்களை பள்ளியில் சேர்க்க என் பள்ளியில் கூட்டம் அதிகாமாக இருந்தது .அப்போது சேர்க்கையின் போது இருந்த ஆசிரியர்கள், அனைத்து  பெற்றோர்களிடம் மாணவர்களை பற்றிய விபரங்களை கேட்டு பூர்த்தி செய்து அவர்களிடம் கையொப்பம் பெற்றனர். இந்த வருடமும் அதே போன்று கூட்டம் இருந்தது. நான் இம்முறை சென்றவருடம் படித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு சேர்க்கை படிவம் பூர்த்தி செய்ய  , என்னிடம் அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொண்டேன்.

       உஷார் நேரம் வருகிறது . கொஞ்சம் நகைச்சுவை தவிர்த்து இதிலுள்ள அவசியத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்.
 
       சேர்க்கை படிவத்தில் மாணவரின் பெயர், மாணவரின் தந்தை பெயர், பிறந்த தேதி , சாதி, மதம், இதற்கு முன் படித்த விபரம்,சேர்க்கும் வகுப்பு, பெற்றோர் கையொப்பம், தலைமை ஆசிரியர் கையொப்பம் ஆகியவை அவசியம் இருக்கும்.

      என்னிடம் வந்துள்ள பெற்றோரின் மூத்த மகன் இங்கு படிப்பதால், அவனின் பழைய சேர்க்கை படிவத்தில் உள்ளப்படி அவனின் தந்தை பெயரை எழுதினேன். பின்பு அவரிடம் இது உங்க வீட்டுக் காரர் பெயர் தானே என்றேன். ஆம் , என தலையாட்டினார். பின்பு மாணவனை பார்த்து முனியாண்டி மவனே உங்க தாத்த பேரு என்னன்னு கேட்டேன். அந்த அம்மா ,"சார், முனியாண்டி என் வீட்டு காரர் பேரு , ஆனா இவங்க அப்பா பெயரு மாரி என்று மாற்றி சொன்னவுடன்  எனக்கு பகீர் என்றது .

 
       அம்மா கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்க என்றேன். ஒருவேளை இது தற்போது கணவன் என்றும், மூத்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்றும் நினைத்து என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியரை அழைத்து இவர்கள் சொல்லுவது புரிய வில்லை ...விபரமாக கேட்டு , பின் என்னிடம் அழைத்து வாருங்கள் என்றேன். வந்த பெற்றோரும் என்னை பார்த்து விபரம் புரியாமல் , ''இதுக்கு எதுக்கு இந்த மனுஷன் இப்படி பதறி போய் பொம்பள டீச்சரை என்னிடம் பேச சொல்லுகிறான்'' என்பது போல் பார்த்தார்.


       அவரும்  விசாரித்து விபரம் புரியாமல் ,"சார் நீங்க சொல்லுற மாதிரிதான் கேட்டேன்  அவரு வீட்டு காரராம், இவரு இந்த பயனின் அப்பாவாம் "என்றார். என் சந்தேகத்தை கெட்ட சொன்னேன். "சார் , இதை எப்படி சார், நான் கேட்பது , என்னை வம்பில் மாட்டி விடாதிங்க ...நீங்களே கேளுங்க நான் அருகில் இருக்கேன் " என்று கிரேட் எஸ்கேப் .


     சரி ,என்னைக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை கேட்டு விடுவது என்று , மெல்ல ஆரம்பித்தேன் ," சென்ற வருடம் மூத்த பயனை சேர்க்கும் போது வீட்டு காரர் பெயர் முனியாண்டின்னு கொடுத்து இருக்கீங்க , ஆனா இந்த வருடம் இவனுக்கு அப்ப பெயரு மாரின்னு சொல்லுறீங்க ...கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா ..?"
                
    "கவுண்ட மணி செந்தில் கதையா சொன்னதையே இரண்டு பேரும் கேட்கிறீங்க ."
கிராமத்து உருவம் ,முகபாவம் சற்று கோபமாக ஆவதை கண்டு , அருகில் உள்ள ஆசிரியர் "சார், அதான் திரும்ப திரும்ப அதையே சொல்லுறாங்கள ... கையழுத்து வாங்கி அனுப்புங்க சார் " என்றார் பயந்து.


     இருப்பினும் இதை கேட்டு விட வேண்டும் என்று முடிவெடுத்து தைரியமாக ," அம்மா, இந்த முனியாண்டி எப்படி வீட்டு காரர்....?"
"சார், போன வருடம் கீழயிருந்த டீச்சர் ...."உங்க வீட்டு காரர் பேரு கேட்டாங்க அப்பவே நான் கேட்டேன் எங்க வீட்டு காரர் பேரு எதுக்கு கேட்கிறீங்க ன்னு ...அப்பறம் வீட்டுக்கார பேரு போடாம யாரு  பேரு போடுறதுன்னு எழுதி வாங்கிட்டாங்க ..இப்ப நீங்களும் இந்த டீச்சரும் வந்து ஏதோ தப்பா  கொடுத்த மாதிரி அப்பா பேரு என்ன , வீட்டு காரர் பேரு என்னே பாடி மாத்தி கேட்கிறீங்க .....நான் இதை சொல்ல...."


எனக்கு சற்று விபரம் புரிந்தது. கிராமத்து பெண் , புதிதாக பட்டணம் வந்து பிள்ளையை சேர்க்கும் போது ஒரு குழப்பம் வந்து விட்டது .வீட்டு  காரர் முனியாண்டி இவனுக்கு என்ன வேணும் .?என்று நான் கேட்ட போது புதிர் ஓடைந்தது . " சார் , அவரு எங்க வீட்டு காரர்  (ஹவுஸ் ஓனர் ),அவங்க வீட்டில தான் நாங்க குடி இருக்கோம்..மாரி இவன் அப்பா பெயர் ..." என்றார்.
  
     இது மாதிரி தான் நாம் தகவல்களை மாற்றி அவசரத்தில் கொடுத்து விடுவோம். படிவம் எழுதும் நபர்களும் தகவல் கிடைத்தது என்பதற்காக கையொப்பம் பெற்று பணியை முடித்து விடுவர். சற்று  சிந்தித்து பாருங்கள் , அவனின் பிற்கால வாழ்க்கை எவ்வளவு கேள்வி குறியாகி விட்டிருக்கும்..இதே இது அவரின் கணவர் வந்து இத் தவறை சுட்டி காட்டினால் வீடு இரண்டாகி இருக்காதா....?ஆகவே , நாம் கல்வி கொடுக்க பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் , கொடுக்கும் தகவல்கள் முறைப்படி கொடுக்க வேண்டுமல்லவா...?

      
    பிறந்த தேதி , தந்தை பெயர், மாணவனின் பெயர் , சாதி மதம் போன்றவை முறையாக எழுத பட்டுள்ளனவா என பார்த்து படித்து கையொப்பம் இட வேண்டும். சேர்க்கையின் போது அவசியம் பிறந்த சான்றிதழ் கொடுத்து மட்டுமே சேர்க்கவும்.
    
    அரசு எத்தனை முறை நமக்கு சுட்டி காட்டினாலும் பிறப்பு, இறப்பு சான்றிதல்களை நாம் பதிவது இல்லை. சிலர் பதிந்தாலும் முறையாக அதை பெறுவது இலை. பெயர் கொடுத்து விட்டது , இனி எல்லாம் தானாக நடந்து விடும் என சோம்பேறி தனமாக இருந்து விட்டு , முறையான விலாசம் தராததால் அதை முறை படி பெற தவறுகிறார்கள்.

        எம் ஆசிரிய பெருமக்கள் வீடு வீடாக சென்செஸ் எடுக்க வருகை புரிகிறார்கள். தயவு செய்து அரசு கொடுத்துள்ள புள்ளி விபரங்களை முன்பே எடுத்து வைத்து, நீங்கள் கொடுக்கும் விபரம் முறையாக கொடுத்துள்ள தகவல் படி பதிகிறார்களா என சரி பார்த்து கையொப்பம் இடவும். ஒரு படிவம் எழுத குறைந்தது அரை மணி நேரம் ஆகிறது என்பதால் இப்பதிவை படிக்கும் அனைத்து இந்தியரும், அவர்களுக்கு உதவி புரிவதற்காக ,அரசு விளம்பரத்தில் கண்ட விபரங்களை முன்பே எடுத்து வைத்து மக்கள் குடி கணக்கு வெற்றிகரமாக முடிக்க உதவவும்.  தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை தெரிவித்து உதவி செய்யவும்.

      


        

Sunday, June 13, 2010

இரவினில் கனவில் ....

காலை பனித்துளிப் போல்
என் மனதில் புதிதாய்
பூத்தவளே .....
பெற்றோரின் சூரிய பார்வையில்
அன்றே மறைந்தவளே..

இரவினில் கனவின்
கருவாய்  பூக்கிறாய்
பகலினில் உதிர்கிறாய்
உதிரமாய் இருந்து
உயிரை உருட்டுகிறாய்....

காதலை சொல்லிவிடு
கனவினை வென்றுவிடு ...
மெல்ல என்னை கொன்று விடு
உன் வார்த்தையில் வதட்டி எடு ...

உன் சிரிப்பில்
சொர்க்கம் கண்டேன் ...
சொக்கி கொண்டேன் ...

உன் உதட்டினில் சாயம்
என் உதட்டினில் வரும் மாயம்
எப்போது என்றே...

இரவினில் கனவில் ....

என் இதயம்
ஜில் ஜில் என துடிக்கிறது
உன்  காலடி தடம்
என் இதயத்தில் பதித்ததனால்  
உன் கொலுசு ஒலியில்  துடிக்கிறது

உன் சிரிப்பினில் மகிழ்ந்தேன்
உன் பார்வையில் கவிழ்ந்தேன்
காதலை சொல்லிவிடு
என்னை அள்ளிஎடு ....

இரவினில் கனவில் ....


(திடீர்னு  சினிமாவில் பாட்டு எழுத கூப்பிட்ட மாதிரி கனவு ...நல்ல வேலை தப்பிச்சீங்க ...நிஜம் இல்லை )

Saturday, June 12, 2010

எல்லாம் ஆசிரியர்கள் கையில் .

     இன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் .. ...மத்திய  அரசு ஐந்து முதல் பதினான்கு வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கொடுக்க சட்டம் ஏற்படுத்தயுள்ள இத் தருணத்தில் மதுரையில் மட்டும் சுமார் எட்டாயிரம் இடை நிற்றல் மாணவர்கள் உள்ளதாக அரசு 'தகவல் கொடுக்கிறது.

     புதிய கோணத்தில் ஒரு அலசல் தேவைப்படுகிறது. குழந்தைகள் கல்வியை வெறுத்து ஒதுக்கி செல்கின்றனரா...? குடும்ப பிரச்சனை காரணமாக செல்கின்றனரா...?

      இரண்டிற்கும் ஒரே பதில் அன்பு இல்லாமை அல்லது அன்பு குறைவாய் இருப்பது .

  அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தேடி கண்டிபிடித்து ,வேலை செய்யும் குழந்தைகளை விசாரித்ததில் அனேகமாக அனைத்து குழந்தைகளும் சொல்லுவது ,அம்மாவும் , அப்பாவும் சண்டை போடுகிறார்கள் ,என்னை கவனிப்பதே இல்லை.

    நிறுத்தவும் , இதில் பெற்றோர்களை மட்டும் குறை கூறுவது தவறாகும். அனைத்து ஆசிரியர்களும் இத் தவறுக்கு உடந்தை. அதாவது குழந்தை பருவம் அதுவம் வீட்டை விட்டு புதிதாக ஒரு லோகத்தில் பயணித்து , அதில் நம்பிக்கை கொண்டு உலவும் அவனுக்கு நாம் அதாவது ஆசிரியர்களாகிய நாம் அன்பு செலுத்தி இருந்தால், எவ்வளவு குடும்ப பிரச்சனை வந்தாலும் , அதை மறந்து பள்ளி வந்து நம் காலை சுத்தி வந்திருப்பான்.

  
    இன்று தெருவில் , பெரியார் பஸ் நிலையம் அருகில் , கடை கடைக்கு தண்ணீர் ஊற்றி ,
தினக்க் கூலியாக முப்பது பெற்று , அதை வீட்டிலும் கொடுக்காமல் , என்ன செய்கிறானோ  என்று தெரியாமல் ஒரு வித மாய உலகில் வாழும் பத்து வயது சிறுவனை கெஞ்சி கூத்தாடி பள்ளியில் சேர்க்க சென்றால்,'' நீங்க எஸ். எஸ்.எ .விழ இருந்து வருகிறீங்களா என ஏளனமாய் கேட்பதும், அதுக தொல்லை தங்கலன்னு தான் இப்படி பிழைச்சு வாழுறேன் , இதுவும் உங்களுக்கு பிடிக்கலையா....அடுத்த மாசம் வாங்க யோசிச்சு வைக்கிறேன் ..." என்கிறான் .இது மதுரை தெற்கு ஆசிரிய பயிற்ருனரின் புலம்பல்.  அதை விட கொடுமை , இம்மாத முடிவில் அவனை தேடி சென்றால் , சென்னைக்கு சென்று சினிமாவில் நடிக்க சென்றுள்ளதாகவும். ஏற்கனவே அவன் மதுரையில் எடுத்துள்ள கோரிபாளையம்  படத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்.  

         மாணவன் இடை நின்று விட்டால், அவனை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது என்பது மிகவும் கஷ்டம். அதற்காக அரசு கோடி கோடியாக செலவழிக்க தயாராக இருந்தாலும் ,ம் ,தும்பை  விட்டு வலை  பிடித்த கதை தான் . ஆரம்பத்திலே அவனுக்கு அன்பு செலுத்தி இருந்தால் அவன் திசை மாறி சென்று இருக்க மாட்டான்.

      ஆசிரியர்கள் இனி வரும் காலத்திலாவது பாட புத்தக கருத்தினை மட்டும் மனதில் கொண்டு செயல் படாமல் , அவனின் ஒழுக்கம் சார்ந்த விசயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒழுக்கம் என்று உங்களுக்கு நான் சொல்லவது  ,அவன் தனிப்பட்ட வாழ்வு முறை ஆராய்வதன் நோக்கம் ஆகும் . குடும்பத்தில் அவன் நிலைமை, குடும்ப நிலைமை, கண்டு , அவனது தேவைகளை எடை போட்டு (கல்வி சார்ந்த ), அவனுக்கு  தாய் போல் அன்பு , பரிவு, இரக்கம் , பாசம் , நேசம் , உறவு காட்டி , நற்பண்புகளை ஊட்டினால் என்றும் அப்பள்ளியை விட்டும், அந்த ஆசிரியரை விட்டும் மாற மாட்டான்.

    
      "குழந்தைகளின் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் ",  "ஒழிப்போம் , ஒழிப்போம் குழந்தை தொழிலாளர் முறைமையை ஒழிப்போம் " ,  "இளமையில் கல்வி, முதுமையில் வளமை " என குழந்தைகளை கொண்டு ஊர்வலங்கள் நடத்தி விழிப்புணர்வு தெரு தெருவாக ஏற்படுத்துவதை விட,  நாம் குழந்தைகளின் மீது அன்பு செலுத்த கற்று கொண்டால் , என்றும் குழந்தை தொழிலாளர்கள் உருவாக மாட்டார்கள்.

  அன்பு கொண்டு கல்வி செலுத்தினால் , நம் நாடு இன்னும் ஓராண்டில் வல்லரசாகும் . அப்துல் காலாம் சொல்லுவது போல் உடனே நல்லரசு ஆகும்.நல்லரசும் வல்லரசும்  ஆசிரியர்கள் கையில் . என் உணர்வுகள் , என் ஆக்கங்கள், என் வளர்ச்சிகள் அத்தனையும் என் முதல்  வகுப்பு ஆசிரியரிலிருந்து இன்று வரை எனக்கு கற்று தந்த ஆசிரியர்களாலே தான் என்பது முற்றிலும் உண்மை. ஆகவே மாணவனின் மனவெழுச்சி ஆசிரியர்களின் அன்பு மட்டுமே அடக்கி நல்வழி படுத்தும். நல்லவனாவதும் , தீயவனாவதும் ஆசிரியர்களாகிய நம் வளர்ப்பினிலே. ஆகவே அன்பு கொண்டு கல்வி கொடுப்போம். நல்வழி படுத்துவோம்.

Friday, June 11, 2010

.கொண்டாடுவோம் தலையில் தூக்கி தமிழை தமிழாய் .

    தமிழை தமிழாக உச்சரிக்க நடவடிக்கை எடுப்போம் .
 "என்னப்பா ...எடுத்தவுடன் சூடா ஏதோ சொல்ல வருகிறியே  ...."

   "அட போங்க ....ஹாட் நியூஸ் எதுவும் இல்லைன்னு சொன்னா ...ஏம்பா நீயாவது சுத்த தமிழில் பேசி எழுதக்   கூடாதா  ...? என நக்கல் அடிக்கிறீங்க .."
  
"தமிழனின் தனி சிறப்பே ...டமிலை டமிழாக உச்சரிப்பது இல்லை என்பது தான்....ஆனா நீ மட்டும் தமிழை தமிழா உச்சரிக்கணும் "

"ஹலோ ..இது  தமிழனின் ஸ்பெசல் குவாலிட்டி...என்பது தெரியாதா....அது  மட்டும் என்ன எனக்கு ஓரவஞ்சனை ..."

"நீங்க என்ன எங்களை பற்றி பேசுறீங்க  ...திஸ் இஸ் டூ மச் ....'தமிழன் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு ...' சோ நாங்க பொதுஜனம் எப்படியும் பேசுவோம் ...."

"அட உங்க ஊத்துக்கு  ...என் மேல சவாரி செய்றீங்களே  ...இது கொஞ்சம் ஓவரா தெரியல ....என் மம்மி மேல பிராமிசா ...இனி தமிழ் பற்றி பேச மாட்டேன்...."

"ஹலோ ...செம் மொழி மாநாடு பற்றி எல்லா சமச்சீர் புத்தகபின் பக்க அட்டையில் கொடுத்துள்ளனர் ...என பீத்தின...அப்ப நீ மட்டும் டமில பேசணும் இல்ல....?''

"இப்ப விசயத்துக்கு வாங்க ...ஆமா செம்மொழி  மாநாட்டுக்கு செல்லும் முன் தமிழ் மொழியில் இனி பிறக்க போகும் குழந்தைகளுக்காவது தமிழில் பெயர் இடுவோம் , பெயர் பலகைகளுக்கு தமிழில் பெயரிடுவதோடு விட்டு விடாமல் , நாம் பேசும் வார்த்தையில் பிற மொழி சொற்களை தவிர்ப்போம். ...ஆ ங்கிலம் இன்றி உரையாட முற்படுவோம்..."


'போதும் இதுக்கு மேல பேசினா ,,,,போதை இறங்கிடும் அப்பறம் ... நம்ம ஓயப் தேடும் ..சாரி ஸ்டெடியா இருக்கேன் ..என் ஓயப் தேடும் ...ஓ .க்கே . ...நீ உன் பாணியில எழுது...பி குட் நைட் .."

                தமிழ் நாட்டில் தமிழ் முதலிடம் பெற வேண்டுமானால் , தமிழில் சிந்தனை வளர வேண்டும் . தாய் மொழி சிந்தனை மட்டுமே வளமான அறிவின் வெளிப்பாடாக இருக்கும். ஆகவே, நாம் பிற மொழி கற்றாலும் , நம் தமிழாகிய தாய் மொழி சிந்தனை மறந்து , அந்நிய மொழியில் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும் . அதற்கு நாம் பிற மொழி சொற்களுடன் பேசுவதை தவிர்க்க வேண்டும். சாதாரணமா நாம் ஆமாம் என்று சொல்லுவதைக் கூட எஸ்.என்று சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் நம் சிந்தையில் வெருண்டி இருக்கிறது . இதுவே நம் தமிழன் அறிவு நிரம்பி இருந்தும் சாதிக்காமல் , பின் தங்குவதற்கு காரணமாகும்.


    நாம் யாருடன் புதிய சந்திப்பை ஏற்படுத்தினாலும் ...ஹெலோ , சார்,என சர்வசாதரணமாக வேற்று மொழி சொற்களை உபயோகிக்கிறோம்.  தமிழ் என்று தெரியாமலே பல சொற்கள் தமிழ் தான் என்று அச்சு பிசகாமல் பயன்படுத்துகிறோம். சாதம் , அதிரசம், குழம்பு ... என்பன தமிழ்தான் என்று பயன்படுத்துகிறோம்.


      இச் செம்மொழி மாநாட்டிலாவது குறைந்த பட்சம் தமிழ் நாட்டில் பயிலும் அனைவரும் தமிழ் மொழி வாயிலாக தான் பாடங்களை கற்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும். எந்த போர்ட் கல்வி முறையாகட்டும் தமிழ் வழியாக தான் தமிழன் பாடம் கற்க  வேண்டும் என சட்டம் வேண்டும். அப்போது தான் தமிழ் மொழி வளமையும், மொழி வாயிலான சிந்தனையும் , அறிவியல் பூர்வமான சிந்தனையும் வெளிப்பாடும். ஆ

       தாய் மொழி சிந்தனை தான் , உண்மையான தனி மனித வளர்ச்சிக்கு பயன்படும் . தமிழ் நாட்டில் தமிழ் தேர்வில் முதல் மதிப்பெண் எடுப்பவனுக்கு , மருத்துவம் , பொறியியல் படிப்புக்கு சேர்க்க அரசு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

      கோயில்களில்  தமிழில் அர்ச்சனை ஏற்படுத்திய நம் அரசு , ஏன் தமிழ் மொழியில் தயாரிக்கப்பட்ட  பாட புத்தகங்களை அடிப்படையாக கொண்டு ,தமிழ் நாட்டில்  படிக்கும் அனைத்து மாணவரும் ,தமிழ் மொழி வாயிலா\க தான் அனைவரும் பாடம் படிக்க வேண்டும் சாட்டம் கொண்டு வரமுடியாது..?


     மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் சொள்ராஷ்டிரா மொழி பேசுபவர்கள் அதிகம். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்தால் , அவர்கள் தாய் மொழியான சௌராஷ்டிராவில்  தான் பேசுவார்கள். அதுவும் அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை என்று கேள்வி பட்டுள்ளேன்,ஆனால் செம்மொழி சிறப்பு வாய்ந்த நாம் தமிழில் பேசுவது அசிங்கம் என கருதி , ஆங்கிலத்தில் தான் பேசுகிறோம். அதுவும் படித்தவர்கள் தான் , யாரையாவது சந்திக்க நேர்ந்தால் ஆங்கிலத்தில் பேசுவது தமக்கு கொள்ரவம் என நினைக்கிறார்கள். 

 இம் மாநாடு , தமிழன் தமிழனோடு தமிழில் பேசுவதற்கு ஒரு விதையை போட்டால் போதும் .

       கூடுவோம் கோவையில்....கொண்டாடுவோம் தலையில் தூக்கி தமிழை தமிழாய் . 

Thursday, June 10, 2010

பள்ளியில் ஆபாச சி .டி . ..

     பள்ளியில்  ஆபாச  சி .டி . ..தென் மாவட்ட பள்ளிகளில் கொடுத்துள்ள சி.டி.திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை...சர்வ சிக்ஷா அபியான் இயக்குனர்  திரு வெங்கடேசன் அவர்களுக்கு உடனே தகவல்...அதிரடி நடவடிக்கை தவறுக்கான காரணம் என்ன...?
மதுரையில் ஒரு நிறுவனத்தில் காப்பி எடுக்க கொடுத்ததில் தவறு நடந்துள்ளதா ...?
என பரபரப்பை ஏற்படுத்தும் செய்தியாக இருந்துள்ள சிவகங்கை பள்ளி சம்பவம் இன்றைய தமிழகத்தை மட்டுமல்ல அனைத்து கல்வியாளர்களையும் சிந்திக்கச் செய்யும் செய்தியாக அமைந்துள்ளது.

          1.அந்த ஒரு சி.டி .யில் மட்டும் இருந்துள்ளதா...?அல்லது காப்பி செய்துள்ள அனைத்து சி.டி.யிலும் இருந்துள்ளதா...?


         2.  அந்த சி.டி. அரசு துறையால் வழங்க பட்டதா....?அல்லது அரசு கொடுத்த சி.டி. கணினியில் காப்பி செய்யப்பட்டு , தனியார் கணினி வாயிலாக நகல் எடுக்கும் போது தஆபாச  பைல் சேர்ந்து காப்பி செய்யபட்டதா....?

         3. ஆங்கிலம் என்றால் அது ஆபாசம் கலந்தது என்று சேர்த்தே கொடுக்க பட்டதா...?

          4.   அரசு கொடுக்கும் எதையும் சர்வ சிக்ஷா அபியான் மூலம் பெறுவதில்லை என்ற எண்ணம் கொண்டவர்கள் அல்லது இத் திட்டத்தை எதிர்க்கும்   யாரும் செய்த சதியா...?

               தனியார் தொலைகாட்சியில் காட்டப்பட்ட ஆபாச காட்சி குழந்தைகளை பாதிக்காத...? என்று வாரி கட்டி வரிந்து வந்தவர்களுக்கான மேலும் இது ஒரு டானிக் செய்திதான் ...நேரடியாக அதுவும் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்  பார்த்திருக்குமானால் மனது எப்படி பாழ் பட்டிருக்கும் ...?
        
           உங்கள் ஆதங்கம் புரிகிறது ...அப்படி எதுவும் நடந்திருக்காது...ஆசிரியர்கள் எப்போதும் எந்த ஒரு சி. டி. யையும் தனியாக பார்த்து ,கொடுக்கப்பட்ட சி.டி. நமக்கு உரியது தானா என சரிசெய்த பின்பு தான் போட்டிருப்பார்கள்..எனவே , பாழ் படும் என வாதிடும் முன் நான் அங்கு இது மாதிரி தான் நடந்து இருக்கும்,தனியாக பார்த்துதான் ஆசிரியர் இத் தவற்றை கண்டுபிடித்து , அரசுக்கு ,அதாவது அதிகாரிகளுக்கு சுட்டி காட்டியிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் சபாஷ் .

  
         அறிவியல் வளர்ச்சி கல்வியில் புதுமையை ஏற்படுத்தி , மொழி வளமையை ஏற்படுத்தி உள்ளது என்று மார்தட்டி கொள்ளும் முன் , அதிலுள்ள சிக்கல்களை நாம் களைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  அனைத்து ஆசிரிய பெருமக்களும் அதிகாரிகளும் இது போன்று தவறு இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க , நாம் கீழ்   கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

       1.மாணவர்களுக்கு வழங்கப்படும் சி.டி.க்கள் முதலில் அதை வழங்கும் அலுவலரால் பார்க்கப்பட்டு , அதிலுள்ள தகவல்கள் உண்மையில் மாணவர்களுக்கு வடிவமைக்கப் பட்டது தானா.? என சரி பார்க்க பட வேண்டும்.

      2. சி. டி. தானே மாஸ்டர் சரி பார்த்து விட்டோமே என பிரதிகளை சரி பார்க்காமல் , அப்படியே பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

      3. அரசால் வழங்கப் படும் சி.டி க்களை பெற்று கொண்ட ஆசிரியர்கள் அல்லது ஆசிரிய பயிற்றுனர்கள் தமக்கு கொடுக்க பட்ட சி.டி. நம் மாணவர்களுக்கு உரிய பாடத்திற்கு சம்பந்தம் உண்டா என சரி பார்த்து , வீட்டிலோ, அளிவலகத்திலோ தனியாக பார்த்த பின்பு , மாணவர்களுக்கு கொண்டு செல்லுதல் நல்லது.

     4.   அரசு தனியார் நிறுவனத்தி சி.டி.க்களை காப்பி செய்யும் போது சி. டி. தானே என கவனிக்காமல் விட்டு விடக்கூடாது, பாட புத்தகம் அச்சில் ஏற்ற எப்படி நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறதோ அதே போன்று நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
குறைந்த பட்சம் காப்பி செய்யும் போது ஒரு அதிகாரியோ அதற்கென பணியமர்த்த பட்டவரோ உடன் இருக்க வேண்டும்.

         ------------------------------

     இன்று அதே போன்று தன் மகனை பெயில் ஆக்கி விட்டதாக ஒரு கேஸ் .அதற்கு தீர்ப்பும் வந்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது. நம் மத்திய அரசு கொள்கை படி ஒன்று முதல் எட்டு வரை அனைவரயும் பெயில் ஆக்க கூடாது .
 
      பொதுவாக ஒன்று முதல் எட்டுவரை யாரையும் பெயில் ஆக்குவது கிடையாது.அதே போல் ஒன்பது படிப்பில் பெயில் ஆகிவிட்டால் , அதாவது குறைந்த பட்ட்ச்காம் மூன்று பாடத்தில் மட்டும் தேர்ச்சி அடையாதவர்கள், அத்தேர்வு வெளியிட்ட பின் , ஒருவார களத்தில் மீண்டும் அந்த மூன்று பாடத்தில் மீண்டும் தேர்வு எழுதி பாஸ் செய்து, பத்தாம்வகுப்பில் சேர்வதற்கு நடவடிக்கை உண்டு.

     இது போன்றே பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தவறிய மாணவர்களுக்கு உடனடி தேர்வு வைத்து , அக் கல்வி ஆண்டிலேயே அம மாணவன் கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

முக்கியமான சமாச்சாரம் , அனைவரையும் பாஸ் செய்வதன் நோக்கம் , கல்வி இடை நிற்றல் இன்றி தொடர வேண்டும் என்பற்காக மட்டும் அல்லாது,மாணவன் மனநிலையும் பாதிக்க கூடாது என்பதற்காகவும் தான்.
------------------------------------------------------------------------------------------------------------

      இப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ....நகைச்சுவையாக எடுத்து கொண்டாலும் சசீரியசும்  இது தான்.

      ஆங்கில பாடத்தை சி.டியில் காப்பி செய்ய சொல்லி கொடுத்து விட்டு சென்று இருப்பார்கள். நான்கு அல்லது ஐந்து நாள் கழித்து வர சொல்லி இருப்பார்கள் . நம்மவர்களும் குறிப்பிட்ட தேதி மறந்து இருக்க கூடும் . பின்பு அவசரமாக மதுரையில் உள்ள யாரையோ வைத்து வாங்கி வந்திருப்பார். எண்lணிக்கையில் குறைந்து இருக்கும்.
ஓனரிடம் ,"அய்யா ஒரு ஆயிரம் சி.டி. காணாம்....தயவு செய்து உடனே காப்பி செய்து தரவும் ..." என போன் மூலம் பேசி இருப்பார்கள்.

    அவரும் இவர்கள் தொந்தரவு தாங்காமல் ,கடைக்கு போன் செய்து ." டேய், ஒரே தொல்லையா போச்சுடா...அந்த இங்கிலீஷ் மேட்டரை ஒட்டி விடுடா என்று சொல்லி இருப்பார். .."

"சரிங்க .....எந்த சி. டி...யில்ல  காப்பி ..."

"நீ வேற உயிரை எடுக்காத ....அதன் லேபில்   ஒட்டி வச்சுருக்குள்ள....மேட்டர் புது கம்ப்யூட்டரில்  இருக்கு ....வேகமா ஓட்டி ...சொல்லு ...ஆள அனுப்பி வங்கிக்க சொல்லுறேன் .."

அவனும் அவனுக்கு தெரிந்த வழக்கமான ஆங்கில மேட்டரை ஓட்டி தந்திருப்பான்.

நிஜம் அல்ல இது கற்பனை ...ரெம்ப சீரியஸா விஷயம் பேசி சீரியசாக்காமல் நகைக்க மட்டும் ..இதற்கும் சிந்தித்தி விடாதீர்கள்.

Wednesday, June 9, 2010

அவசியமான பதிவு இது. ...

         பள்ளி திறந்தாகி விட்டது. இனி அவசர அவசரமாக வீட்டு வேலை செய்து , சமைத்து , குழந்தைகளை குளிப்பாட்டி, அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொடுத்து, சரியாக பஸ் ஸ்டாப்பில் கொண்டுசென்று நிறுத்தி, பின்பு வீடு சென்று "அப்பாடி..."  என மூச்சு வாங்கி , அடுத்த வேலை செய்யும் மம்மிகளுக்கும் , இவர்களை விட , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிய பின் , தான் பணிக்கு செல்ல ,அவசரமாக கிளம்பி வேலைக்கு செல்லும் அனைத்து தாய்மார்களும் கவனிக்க வேண்டிய  அவசியமான பதிவு இது.

    ஏன் இதை பதிவிட வேண்டியுள்ளது என்றால் , என் தோழி போன்று நீங்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல நோக்கம் மட்டுமல்ல , காலாவதி பற்றி தெரிந்திருந்தும் நாம் மிகவும் சோம்பி இருப்பதனாலும் ,நம் அறியாமையை போக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் ஆகும்.


       இன்று பள்ளி செல்ல பிள்ளைகளை கிளப்பி விடுவதில் உள்ள ஆர்வம் , நாம் அவர்களுக்கு உணவு தயாரித்து கொடுப்பதில் கிடையாது. அவசரமான உலகத்தில் எல்லாம் உடனடியாக நடக்க வேண்டிய கட்டாயம் , ரெடி மிக்ஸ் வாயிலாக நாம் நம் குழந்தைகளின் உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு இருக்கிறோம்.  

       தினமலரில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையான உணவு தயாரித்து வழங்குவது சம்மந்தமாக கட்டுரை வெளிவருகிறது . படித்து பார்த்து , பிடித்தால் சமைத்து பார்த்து,அது போன்று உணவு சமைத்து  வழங்கி நம் குழந்தைகளின் உடல் நலம் பேணலாம்.


       என் இந்த விளம்பர இடைவேளை என்று கேட்பது புரிகிறது....!
 
    என் தோழியும் உங்களை போன்று தம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்து , பள்ளிக்கு வரும் தாய் தான். வேலைப் பளு காரணமாக ,அன்று உடனடி புளியோதரை மிக்ஸ் வாங்கி , புளியோதரை சமைத்து காலை உணவாக அதையே அனைவரும் சாப்பிட்டு , தனக்கும் ,தன் குழந்தைகளுக்கும் மதிய உணவாக அதையே டிபனில் அடைத்து கொடுத்துள்ளார்.

      இது என்ன பிரமாதம் , இது தான் அனைத்து வீட்டிலும் நடப்பது தானே என்று சற்று குறைவாக இச்செயலை  மதிப்பிட வேண்டாம் . இல்லை என்றால் நீங்களும் இது போன்று அவஸ்த்தைக்கு ஆளாக நேரிடும்.

      மிகவும் முக்கியமான ஒன்று, இந்த மாதிரி ரெடி மிக்ஸ் சாப்பிடுவதால், உடம்புக்கு செரிமான தன்மை குறைவு , நெஞ்சு எரிச்சல், குடல் புண் , அல்சர் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் உண்ணாவிடில் , இதனால் உணவு ஒவ்வாமை அதாவது புட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு அதிகம் . பின்பு அவதி அதிகம்.

     அன்று என் தோழி பள்ளி மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதால், மதிய உணவு நேரத்திலும் அவரால் எழுந்து வர முடிய வில்லை. நானும் பள்ளி மாணவர் சேர்க்கை என்பதால் , அவர் உணவு உண்ண செய்ய மாற்று ஆள் அனுப்ப வில்லை. நானும் உணவு மறந்து போனேன்,ஆகவே பிறர் உணவு விஷயம் மனதை தொட வில்லை. மதியம் மணி மூன்று நெருங்கியதும் எனக்கு பசி எடுக்கவே, பெற்றோர் யாரையும் என் அறைக்கு அனுப்ப வேண்டாம் என சொல்ல அவரிடம் சென்ற போது  தான் ,அவர் உணவு அருந்தாத விஷயம் எனக்கு தெரிந்து அவரை வலு கட்டாயமாக உணவு அருந்த சொன்னேன். (சத்தியமாக அவர் ரெடி மிக்ஸ் புளியோதரை செய்து வந்திருப்பது எனக்கு தெரியாது.)
மாற்று ஆசிரியரை அனுப்பி வைத்தேன்.

       அவரும் என் தொல்லை தாளாமல் கஷ்டப்பட்டு உணவு அருந்தி விட்டார். வீட்டிற்கும் சென்று மாலை காபி,குழந்தைகளுக்கு இரவு தோசை செய்து கொடுத்து , இரவு ஒன்பது மணிக்கு படுக்கைக்கு சென்று விட்டார். மதியம் மூன்று மனைக்கு மேல்தான் உணவு உட்கொண்டதால் இரவு உணவு அருந்தவில்லை,ஒருமணி போல் மதியம் உட்கொண்ட உணவு இரவு அதன் வேலையை செய்துள்ளது. தொடர்ந்து வயிற்று போக்கு , அதனுடன் தலை சுற்றல் ஏற்படுத்தி பாடாய் படுத்தி உள்ளது.

       இரவோடு இரவாக பருகில் உள்ளல தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவர்கள் அவருக்கு முதலுதவி செய்து , காலை ஆறு மணிக்கு தான் மருத்துவர் பரிசோதித்து , இது உணவு ஒவாமையால் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளார். அன்று மாட்டும் ஆறு பாட்டில் சலைன் ஏற்றப்பட்டுள்ளது.
மறு நாளும் அவருக்கு இது போன்று சிகிச்சை . அனைவருக்கும் மன உளைச்சல். உடனடியாக மருத்துவ உதவி கிடைத்ததால் உயிர் பிழைத்துள்ளார். இதுவே குழந்தைகள் நிலைமை என்றால் என்ன வாக்கும் நினைத்து பாருங்கள்.

     அவர் பயன்படுத்திய ரெடி மிக்ஸ் தேதி ஏப்ரல் என்று இருந்தது. ஆகவே காலாவதி மருந்து போன்று ,உணவிலும் காலாவதி தேதி பார்க்க வேண்டும் . உணவின் கெட்டு போகும் தன்மை அறிந்து , அதற்குள் உணவு உண்ண வேண்டும்.

   என் ஆசிரிய பணியில் பல மாணவர்கள் ,முதல் நாள் மீன் , கோழி ,கறி குழம்பு மதியம் உணவிற்கு கொண்டு வந்து , வயிற்று போக்கு எடுத்துள்ளதை கண்டுள்ளேன்.  பெற்றோர்களே நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியது முக்கியம் தான், அதை விட முக்கியம் உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.பாக்கெட் சமாச்சாரங்களை தயவு செய்து தேதி பார்த்து உபயோகபடுத்தவும். காலாவதி என்றால் உடனே அழித்தது விடவும்.

    அரசு எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்தாலும் நாம் திருந்த போவதில்லை எனில் காலவதியும் மாற போவதில்லை. மதுரையில் ஒரு பள்ளி மாணவன் உணவு ஒவ்வாமையால் இறந்த பின் , ஹோட்டல் தோறும் உணவு தரம் சரிபார்க்கப்பட்டு , அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டதை இந்நேரத்தில் நினைவு படுத்த கடமைபட்டுள்ளேன்.





  

Tuesday, June 8, 2010

உசிரே ..போகுதே உசிரே ...போகுதே

     இந்த பூமியில எப்பவந்து நீ பிறந்த...
மனிச புத்திக்குள்ள தீப்பொறிய   நீ விதைச்ச
அடி பச்ச  பூமி பெருசுதான் சின்ன நெகிழி அளவு  சிறுசுதான்  ...(௨)
நெகிழி ஒரு தீக்குச்சி போல விழுந்து பிடிக்குதடி  பசுமை பூமியும் வெப்பமாகி வெடிக்குதடி ..
.   உசிரே ..போகுதே  உசிரே ...போகுதே  
    நெகிழிய நீ கொஞ்சம் பயன்படுத்தயில...

உன்  மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்கிறேன்
மனச மாத்திக்கடி  என் மணிக்குயிலே
பூமி  மேல அக்கறை உனக்கிருந்தும் 
அஞ்சாம நீயும் நெகிழி பயன்படுத்திரியே 
அக்கினி உருவாக்கும் இதுன்னு தெரிஞ்சுருந்தும்
அடிக்கடி பயன்படுத்த  துடிக்கிறடி  

பிளாஸ்டிக் பூமிக்கு   தூரம்  தூரம்
ஓட்டநினைக்க ஆகல
மனசுசொல்லும் நல்ல சொல்ல...
  மாய பிளாஸ்டிக் உலகத்த அழிக்கும்ன்னு கேட்கலை

தவியோ  தவிச்சு சொல்லுது மனசும்
தள்ளி நின்னு வேத்து கிரகம் சிரிக்குதடி
கேளு நீயும்.....
 இந்த பிளாஸ்டிக் கிறுக்கு மாறுமா
மந்திருச்சு விட்ட கோழி மாறுமா
உன் மயக்கத்த தீர்த்து வச்சு மன்னிச்சுடுமா....

சந்திரனும் சூரியனும்
தள்ளி நின்னு சுத்துது
நெகிழி தந்து நீயும்
சுடாக்குவியோன்னு    
..
சந்திரனும் சூரியனும் இப்ப தலைசுத்தி
கிடக்குது உன் செய்யலக்கண்டு
(உசிரே....துடிக் கிறடி )

இந்த உலகத்திள்ள இது ஒன்ணும புதுசில்ல
ஒன்ணு இரண்டு என்ன மாதிரி தப்பிபிறந்து
உசிர எடுக்கும் ....நெகிழி பயன்படுத்தாதன்னு ...
விதி வழி சொல்லி போகும் விதி விளக்கில்லா விதியில்ல

எட்ட நின்னு சூரியனும்  பூமி பார்த்து
   சிரிக்குதாடி ....
உன்னை பார்த்து கைகொட்டுதடி
மாமா நீயிருந்தும்
மாமா இருந்தும் நெச்சு பயம் வந்து போகல 

என் கட்டையும் ஒருநாள் சாகலாம்
நெகிழி உன்னையும் அழிக்கலாம்  
உன்  மயக்கத்தா  தீத்து வச்சு 
மாமன் நானும் மாறல
மாறுவியோ  மாமன்போல 
நீயும் ...

Monday, June 7, 2010

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம்

     சமச்சீர் கல்வி தொடங்கி வகுப்புக்கள் ஆரம்பித்து விட்டன , ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தை அதுவும் தமிழ் புத்தகத்தை எடுத்து என்ன இருக்கிறது என்று நான்கு தினங்களுக்கு முன் பார்க்கும் போதே  அதுபற்றி ஒரு பதிவு இடவேண்டும் என்று எண்ணம் தோன்றியது .
    
      புத்தகம் மிகவும் நேர்த்தியாக மாணவர்களின் சிந்தனையை  தூண்டும் வகையில் அனைவரும் எதிர்பார்த்த விதத்தில் அமைந்துள்ளது. தமிழக அரசின் செம்மொழி கொள்கைகளை பின்பற்றி , திருவள்ளுவர் படம் அனைத்து பாட புத்தகத்திலும் அட்டைபக்கத்தின் பின் புறம் பொறிக்கப்பட்டு அதில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010 என்று அச்சிடப்பட்டுள்ளது. சூன் 23-27 என் தேதி குறிப்பிடப்பட்டு மாணவர் அனைவரையும் மாநாடு பற்றி அறிய செய்துள்ளது சிறப்பு ஆகும்.


      ஆசிரியர்களுக்கு ,"தயவு செய்து மாணவர்களுக்கு செம்மொழி பற்றி எடுத்து சொல்லி , மாநாட்டின் அவசியத்தை கூறவும் ". எனக்கு தெரிந்து திருவள்ளுவர் சிலை கன்னியாகுமாரியில் பார்த்ததில்லை அதுதாண்டா இது என படத்தை பார்த்து , அதில் உள்ள வரிகள் வாசிக்காமல் , பதில் கூறும்   முட்டாள்களையும் (பொறுமையாக பதில் சொல்லத்தெரியாத ஆசிரியர்கள் )இது நாள் வரை பார்த்து இருக்கிறேன். ஆசிரியராய் இருந்து இதை சொல்வதில் வெட்கப்படுகிறேன்.

       ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகம் பாடவாரியாக ஒவ்வொரு பாடத்திலும் செய்யுள், அடுத்து உரைநடை , அதற்கடுத்தது துணைப்பாடம் , பின்பு மொழித்திறன் வளர்க்கும் இலக்கணம் என இடம்பெற்று , ஒவ்வொரு பாடமுடிவிலும் வகுப்பறை திறன், மற்றும் வாழ்க்கை திறன் சம்மந்தமான கேள்விகள் இடம் பெறுள்ளன.. மொத்தம் ஒன்பது பாடம் , 130 பக்கங்கள் வண்ண மயமாக தமிழ்நாட்டுப்  பாடநூல் கலக்கம் சார்பாக 80  ஜி.எஸ் .எம் . தாளில் அச்சிடப்பட்டுள்ளது.

 
 
 வாழ்த்து ,திருக்குறள் ,நாலடியார்,நான்மணிக்கடிகை,பழமொழி நாணூறு ,புறநானுறு என்று இருந்துவிடாமல் பாரதி,பாரதிதாசன் , பாட்டுகொட்டை, இராமச்சந்திர க்கவிராயர் ,உடுமலை நாராயணக் கவி என தொடர்ந்து கவிகோ அப்துல் ரகுமான் புதுக்கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. உ.வே.சா. மட்டுமல்லாது தேவரும், பெரியாரும் , சுவாமி விவேகனந்தரும் இடம்பெற்றுள்ளனர். அறிவியல் விசயங்களுக்கு பறவைகள், பாம்புகள் மற்றும் மேரிக்குயுரி இடம் பெற்றுள்ளனர். மகள் இந்திராவுக்கு நேரு இழுத்திய கடிதமும் இடம் பெற்றுள்ளது.

    சித்தர் பாடல் ,தனிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பழக்கவழக்கங்கள் பற்றியும் பாடம் எழுதப்பட்டு மிகவும் சிறப்பாக தமிழ் நூல் வந்துள்ளது.

தயவு செய்து அனைவரும் சமச்சீர் கல்வி முறைக்கு ஆதரவு திரட்டி , இலவச கல்விக்கு, கல்வி கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க பாடுபடுவோம் , ஒன்று திரள்வோம்.       

  

Sunday, June 6, 2010

அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

   தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமுலுக்கு வந்து , பிற பட புத்தகங்களை அடுத்த கல்வி ஆண்டில் கொண்டுவர முழு மூச்சில் வேலை நடந்து வரும் இவ்வேளையில் , பள்ளிகள் தோறும் பெறோர்கள் , கல்வி கட்டணம் கூடுதலாக வசூலிப்பதாக புகாரும் , சாலை மறியலும் நடத்தி வரும் இவ்வேலையில் ஒரு கேள்வி மட்டும் என் மனதில்.....

1.         தமிழக அரசு எல்லா  திட்டங்களையும் மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் பொது , கல்வியை மட்டும் குறைந்த பட்ச கட்டணம் நிர்ணயித்து தந்தது  ஏன்..?

2.       இலவச டி.வி கொடுக்காவிட்டால் , சாலை மறியல் மட்டுமல்ல அதிகாரிகளை சிறை பிடித்து , தங்கள் கவனத்தை அரசின் பக்கம் திருத்தும் மக்கள், இதுவரை தம் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க அரசிடம் கல்வியை இலவசமாக கேட்காதது ஏன் ?

3.      அரசு பள்ளிகளில் படித்தால் தமிழக வேலை வாய்ப்பில் முன்னுரிமை  என்றால் மெட்ரிக் பள்ளியின் மோகம் குறைய வாய்ப்பு இருக்கும்.

4.     கல்வியை தொழிலாக தரவில்லை , தரமாக தருவதற்குத்தான்  காசு வாங்குகிறோம் என கூறும் கல்வி தந்தைகளே ,அப்படியே அரசு எடுத்து நடத்த தாயாராக இருக்குமானால் ,தங்கள் நிறுவனத்தை  அரசுடமையாக்க தயாரா...?..

.5.     பெற்றோர்களே அனைவரும் ஒன்று திரண்டு அனைத்து விதமான கல்வியையும்
இலவசமாக பெறுவதற்கு போராட்டம் நடத்த தயாரா...?

.        எது எப்படியோ அனைவருக்கும் கல்வி முறையாக போய் சேர வேண்டும். அதற்கு பொது  மக்கள் பங்கு அவசியம் தேவை. தங்கள் தெருவில் , தங்களுக்கு தெரிந்த குழந்தைகள் ஐந்து வயது பூர்த்தி அடைந்து இருக்குமானால் , அவசியம் அருகில் உள்ள    பள்ளியில் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறதா...?என பார்த்து , செல்ல வில்லை எனில் உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும்.அருகில் உள்ள பள்ளிக்கு தகவல் கொடுத்தாலோ, அல்லது கல்வி அதிகாரிகளுக்கு தகவில் தந்தாலோ உடனே அக்குழந்தையை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.


  அதே போல் , பள்ளிக்கு செல்லாமல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தை வேலைக்கு செல்லுமானாலும் , இது போன்று தகவல் தந்தால் , உடனே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படும்.

Saturday, June 5, 2010

டீல் ,நோ டீல்

உப்பு காற்றில்
உரைக்கும் வெய்யிலில்
நடுங்க வைக்கும் குளிரில்
உழைப்பது
எல்லாம்  உனக்காக ...

கை கட்டி
கூனி குறுகி
நீ ஆசை பட்டதெல்லாம்
வாங்க
அடிமைப்பட்டு...
அடங்கி இருப்பது   
சம்பாதிக்க அல்ல
உன்னை சந்தோசமாக வைக்க

உன்னிடம்
டீல் ,நோ டீல்
வைப்பது இல்லை ...
ஏனென்றால் ....
என் வார்த்தைகள் எல்லாம்
உன்னை ஓ ஹோ  என்று வாழ வைக்க மட்டுமே ...
நான் மட்டுமல்ல
எந்த தகப்பனும் அப்படி தான் ...!

Friday, June 4, 2010

உயிரே உயிரே போகுதடி

கண்ணாலே மின்சாரம்
பாய்ச்சும் நீயும்
தமிழ்நாடு ஈ பி யும்
ஒன்று ...
பவர் கட்
நிரந்தரம் என்பதை விட
எப்போது ...
எவ்வளவு நேரம் ...
காதல் மூட்டி
காணாமல் போவாய் ....
என்று ...!
-------------------------------------------------------------------------------

நீ சிரித்தாய்
நான் மலர்ந்தேன்
நீ பார்த்தாய்
நான் பருகினேன்
ஆனாலும் ...
நீ பேசினாய்
நான் உமையானேன்
நான் பாசமானேன்
நீ நெருங்கினாய்
நான் நொறுங்கினேன்
நீயும் நானும் ஒன்றானோம்
வார்த்தைகளில்...
நீயும் நானும் ஒன்றானோம்
சிந்தனையில்
நீயம் நானும் ஒன்றானோம்
அடுத்தவர்கள் பார்வையில்
அனைவர் வாயில் ...
காம சாயம் பூசி
காதல் சட்டை உடுத்தி ...
நம் நட்பும்
அடுத்தவர் வாயில்
அனைவர் வாயிலும்  ...
காம சாயம் பூசப்பட்ட
விரல் நகங்களால்
மனதை காயப்படுத்தி ...
உயிரே உயிரே போகுதடி
கோணல் பார்வையால்
யோனி பற்றியே சிந்திக்கும்
சீர்கெட்ட சமுதாயாத்தை
எண்ணி எண்ணி ....
உயிரே உயிரே போகுதடி
பிறப்புறுப்பை அறுத்து
தருகிறோம் ...
காம கண்கள் அகற்றி
ஆண் பெண் நட்பில்
புனிதம் காண்
அறுவை சிகிச்சைக்கு தயாரா...?

எங்கள் உறவு
தாஜ்மஹால் போல்
புதைக்கப்பட்டு கல்லறையாக
இருக்காது ...
ஆனால்
தாஜ்மஹால் போல்
அனைவருக்கும் அதிசயமாய்
ஆச்சரியமாய் பார்க்கும் விதம் அமையும் ...!
எங்கள் நட்பு
சொல்லியும் சொல்லாமலும்
புரிந்தும் புரியாமலும்
உண்மை உணர்த்தும்
உங்களுக்கும் ...
இரத்தத்தில் புரையோடி
புற்றாய் இருக்குமானால்
ஆண் பெண் நட்பு
பாம்பு நஞ்சாய்  மாறி
குணப்படுத்தும்
காமம் அகற்றி
பெண்ணை போதை பொருளாய்
பார்க்கும் பார்வை அகற்றி
அறுவை சகிச்சை செய்யும் ...!  

மாறிவிடுங்கள்
மரிக்கும் முன்னாவது ...!

Tuesday, June 1, 2010

தகப்பன் அந்தஸ்தில் ....

      பள்ளிக் கூடம் திறந்தாயிற்று ...கல்வி கட்டணமும் வாங்கி ஆயிற்று . சாரி கட்டியாயிற்று.
    
   பள்ளியில் சேர்ந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கும் அனைத்து மாணவர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள் . இந்த கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய கல்வி உத்தியையும் ,  புதிய கல்வி சிந்தனையையும் உருவாக்கட்டும் .இக்கல்வி ஆண்டு முழுவதும் சரஸ்வதி தேவி எம் ஆசிரிய பெருமக்களுக்கு நன்மையையும்  , சொல் வன்மையையும் தரட்டும்.

  "எவன் ஒருவன் மிக அதிகமாக ஏங்குகிறானோ ... அவன் நீண்ட காலம் வாழ்கிறான்...!"
என்ற கலீல் ஜிப்ரான் வரிகளின் படி "நானும் ஏங்குகிறேன் ...நம்  கல்வி புத்துயிர் பெற வேண்டும் என்ற  கல்வி சிந்தனையுடன் நீண்ட நாள் வாழவே ..."


என்  முதல் நாள் பணியில் மிகவும் சிந்திக்க செய்த முதல் வகுப்பு சேர்க்கை ....ஒரு தகப்பனாக வருந்துகிறேன் ." பதினோரு வயது உடைய மனநலம் குன்றிய பெண் , வாய் பேச வராது , சாதாரண உச்சா விஷயத்தை கூட சைகையில் தான் சொல்ல முடியும் , இருப்பினும் இதுவரை எந்த வகுப்பிலும் பள்ளியிலும் சேர்க்க மனமில்லை ,தற்போது உங்கள் பள்ளியின் நோட்டீஸ் பார்த்து வந்தேன் என்ற தகப்பனின் மன வருத்தத்தை கண்டு மனம் வருந்திகிறேன்.

   பள்ளிக்கு அதுவும் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற மன உந்துதலை விட மகள் பெரியவளாக வளர வளர  தந்தையின் வேதனையை தகப்பன் அந்தஸ்தில் புரிந்து கொள்ள முடிகிறது.  தன்னை உணர வைக்க இந்த கல்வி உதவாதா என்ற ஏக்கம் என்னை பதறச்   செய்தது . அவருக்கு மனநலம் மன்னிக்கவும் மாற்று திறன் பெற்றவர்கள் பள்ளியில் சேர்க்க வழிகாட்டி நம் சமூக அவலத்தை ,ஏற்ற தாழ்வுகளை நினைத்து வருந்துகிறேன்.

         உண்மையில்
         எந்த மனிதனுக்கும்
         நீ கடன்பட்டவனில்லை!
         நீ எல்லா மனிதர்க்கும்
         எல்லாவற்றையும்
         கடன்பட்டிருக்கிறாய் !
என்ற கலீல் ஜிப்ரான் வரிகளுடன் உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்....!