Thursday, December 2, 2010

செல்போன் உரையாடல் ...!

  நீண்ட நாட்கள் பின்பு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. என் மச்சினன் கல்யாணமாதலால் என்னால்  இடுகை இட முடியவில்லை. தற்சமயம்  காலமாதலால் என் பள்ளியின் பேருந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டு என்னை காலை ஆறு மணிக்கு மாணவர்கள் செல்லிடை தொலை பேசியில் அழைத்து , "சார்,இன்று பஸ் வருமா..? சாரி... டிவியில போடுறாங்க லீவுன்னு .." என்பது போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு என்னை நிம்மதி இழக்கச் செய்தாலும் , நான் பேருந்து அனுப்பியும் மழையினால் பள்ளி வராத மாணவர்கள் அதிகம் .

நிம்மதி இழப்பு என்று ஏன் சொல்லுகிறேன் என்றால் , பள்ளி பேருந்து சென்றாலும்  , பெற்றோர்கள் மீண்டும் என்னை அழைத்து தொல்லைபடுத்திய விதம் தான் தனி ....  

        காலை முதலே என்னை அழைத்ததால் ... அந்த செல்போன்  எண்ணில் என் எண் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . பள்ளி துவங்கிய சிறுது நேரத்தில் கீழே சொல்லுவது போல சம்பவங்கள் என்னை அவதிப் பட வைத்துள்ளது.     

           "டேய் ,சரவணா .... எங்கட இருக்கே...உன்னை கலவை போட வர சொன்னேனே... என்னத்த புடுங்குற.... "
"ஹலோ யாருங்க .... "
"விளக்கெண்ணை... என்ன தெரியல...."
"ஹலோ .... உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ..."
" டேய் ... போதும்டா... சீக்கிரம் வா...வாயில கேட்ட வரத்தை வரப்போகுது...."
" ஹலோ ... உங்களுக்கு என்ன வேணும் ... நான் .... பள்ளி தலைமை ஆசிரியர் பேசுகிறேன்..."
"சாரி சார்.... நான் வேறு சரவணன்... ன்னு நினச்சு ...." போன் கட்டாகி விடும்.

" ஹலோ ...வணக்கம் .சொல்லுங்க "
"என்னத்த சொல்ல ... "
"ஹலோ ...யாருங்க வேணும்... "
"நீங்க தான் ..."(பெண்ணின் குரல்)
"ஹலோ ... இது நயன் த்ரீ போர் ...."
"ஆமாம் ...ஆமாம் ...அதே தான்..."
"உங்களுக்கு யாரு வேணும் ...."
"என் வீட்டுக் காரர் தான் .... "
"ஹலோ யாருங்க நீங்க... இது ராங் நம்பர் ...உங்க வீட்டுக்காரர் யாருங்க ?"
"நீங்க தான் வீட்டுக்காரர்..."
"ஹலோ நான் தலைமை ஆசிரியர்...."
"சாரி ...சார்..."(போன் உடனே கட் ஆகிறது)


"ஹலோ ...வணக்கம் ..."
"சனியம் புடுச்சவனே ... உன்னை எங்க போக சொன்னேன் எங்கட நிக்கிற..."(ஆண் குரல்)
"ஹலோ ... யாருங்க உங்களுக்கு என்ன வேணும் ..."
" திரும்புட யாருன்னு தெரியும் ... உன்னை நம்பி ஒரு வேலையும் செய்ய முடியாது...(தகாத வரத்தை) "
"ஹலோ ... நான் ஸ்கூல்ல  இருக்கேன்... "
"மயிறு .... இனி என்னடா உனக்கு படிப்பு கிழிக்குது.... (தகாத வார்த்தை )"
"ஹலோ ... நான் ....பள்ளி தலைமை ஆசிரியர்...பேசுறேன்..."
போன் துண்டிக்கப்படுகிறது ...


"டேய் சரவணா... வரும் போது இட்டிலி வங்கி வாடா..."
(என் மாமனார் குரல் போல் கேட்கிறது....)
"என்ன மாமா வேறு போன்னில இருந்து கூப்பிடுறீங்க .."
"எந்த நம்பரா இருந்தா என்ன ... கேள்வி கேட்காம வாங்கிட்டு வாடா "
( மரியாதை குறைவு சந்தேகப்பட்டு )
"ஹலோ ...உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ...நான் .... தலைமை ஆசிரியர் பேசுகிறேன்..."
"சாரி ...சார் ... என் தம்பி சரவணனுக்கு பதில .... "


இது போன்ற போன் கால்கள் ...என்ன  நிம்மதி இழப்பு என்று நான் சொன்னது சரி தானே... !என் மாணவ செல்வங்களுக்காக இது போன்ற வசவுகள் வாங்குவதில் எந்த நிம்மதி இழப்பும் எனக்கு இல்லை. இதை அசைபோடும் போது மகிழ்ச்சியும் , செல்போன் பண்பாட்டின் அறியாமையும் கண்டு கவலைப்படச்செய்கிறது.
அவசர உலகத்தில் sara என்ற எழுத்தை பார்த்தவுடன் அப்படியே டயல் செய்து விடுவதை நினைக்கையில் வருத்தம் ஏற்படுகிறது . இத் தவறினால் வடிவேலு போன்று செல் போனையே உடைத்தவர்கள் அறிந்து இருக்கிறேன். ஆளைத் தேடி பிடித்து அடித்து சண்டை இழுத்தவர்களும் உண்டு . இதனால் கொலை நடந்த சம்பவங்களும் உண்டு.

          என்ன கொடுமை சரவணன் சார்... என்ற வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது.

18 comments:

சிவராம்குமார் said...

ரிப்பீட்டு!!! "என்ன கொடும சரவணன் இது"!!!

வார்த்தை said...

:)

Chitra said...

என்ன கொடுமை சரவணன் சார்!

:-)

ஹரிஸ் Harish said...

:)..என்ன கொடும சரவணன் சார்......

Balakumar Vijayaraman said...

அண்ணே, நீங்க அந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டீங்கண்ணே !

மோகன்ஜி said...

ரசித்து எழுதியிருக்கிறீர்கள்..

நேசமித்ரன் said...

:))))

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நானும் அவதிப்பட்டுள்ளேன். படுத்தியும் உள்ளேன் :)

எஸ்.கே said...

:-) அனுபவங்கள் பலவிதம்!

ADMIN said...

அடடா.. உங்களுக்குமா...?

//என் மாணவ செல்வங்களுக்காக இது போன்ற வசவுகள் வாங்குவதில் எந்த நிம்மதி இழப்பும் எனக்கு இல்லை//

இது தங்களின் ஆசிரியத் தன்மையை(தாய்மையை) காட்டுகிறது.

நன்றி! வாழ்த்துக்கள்..!

pichaikaaran said...

அனுபவம் பேசுகிறது

கார்த்தி said...

அண்ணே இப்பிடி வருற பொம்பிள பிள்ளைகளைின்ர callஐ எனக்கு divert பண்ணிவிடுங்க!

சுவாமிநாதன் said...

சார் இது போன் கண்டுபுடிச நாள்ல இருந்து இருக்கத்தான் செய்கிறது. என்ன பண்ண எனலாம் காலக்கொடும சரவணன் சார்... (நல்ல செய்தி என்பதால் காமடியா போகுது, இதே நமக்கே சம்மந்தம் இல்லாத கெட்ட செய்தினா என்ன செய்யமுடியும் )

பவள சங்கரி said...

அடக் கடவுளே....

ம.தி.சுதா said...

அனுபவம் புதுமை.... நான் பாட்டுப் பாடினேனுங்கோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

ஆமினா said...

பல பேர்கிட்ட வாங்கின திட்டுகளைகூட சந்தோஷமா ரசிச்சு எழுதியிருக்கீங்க!!

Unknown said...

//"சாரி சார்.... நான் வேறு சரவணன்... ன்னு நினச்சு ...." போன் கட்டாகி விடும்.//
//(போன் உடனே கட் ஆகிறது)//
//போன் துண்டிக்கப்படுகிறது ...//
//"சாரி ...சார் ... என் தம்பி சரவணனுக்கு பதில .... "//
+
//அவசர உலகத்தில் sara என்ற எழுத்தை பார்த்தவுடன் அப்படியே டயல் செய்து விடுவதை நினைக்கையில் வருத்தம் ஏற்படுகிறது.//
=
No logic

என்ன கொடுமை சரவணன் சார்... :)

cheena (சீனா) said...

அன்பின் சரவணன் - படித்தவர்களும் சரி படிக்காதவர்களும் சரி - தவறுதலாக அழைப்பது தவறல்ல - ஆனால் யார் எனத் தெரியாமல் பேசுவது தான் தவறு. என்ன செய்வது - திருந்துவார்கள். நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

Post a Comment