Thursday, September 16, 2010

காகிதப்பூ மாலை

        மாணவர்களுடன் பேசும் போது புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும் . ஆனால் , நாம் மாணவர்களை பேச விடுவதேயில்லை. கல்வி முறையில் மாற்றம் கொண்டுவந்தாலும் , இன்னும் நாம் பழைய லெக்சர் முறையிலேயே நம் கை ஓங்கும் மாறு , கருத்துக்களை திணித்துக் கொண்டு இருப்பது வருத்தத்திற்கு உரியது.  மாணவனை பேசவிடும் போது தான் அவனின் மனம் திறந்த பேச்சு வெளிப்படும் , அவனின் உளவியல் பண்புகள் அறிய முடியும்.

              நேற்று நான் ஐந்தாம் வகுப்பு மாணவனின் ஆசைகளை கேட்டேன். நீங்கள் எதுவாக மாற விரும்புகிறீர்கள்? ஏன் அப்படி ஆசைப்படுகிறீர்கள் என்பதையும் சொல்ல வேண்டும் என கேட்டேன். ஒவ்வொருவரும் நான் டாக்டராக வேண்டும், வக்கீல் ஆக வேண்டும் , இஞ்ஞினியர் ஆக வேண்டும் , கலெக்டராக வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கான காரணமாக தன் அம்மா அப்படி விரும்புவதாகவும் கூறினார்கள்.


       ஆசிரியர்கள் ஒருபுறம் மாணவனின் விருப்பம் இல்லாமல் அவனின் மனநிலை உணராமல் , கருத்துக்களை திணிப்பதுப் போல் , பெற்றோர்களும் அவர்கள் பங்கிற்கு தங்களின் நிறைவேறாத ஆசைகளை திணிக்கின்றனர். அது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதுவே அவனை கல்வியை விட்டு ஒதுங்கச் செய்யலாம். தயவு செய்து மாணவனின் விருப்பம் அறிந்து செயல் பட்டால், நல்ல எதிர்காலத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம்.


    அவர்களில் வித்தியாசமான மூன்று மாணவர்களை அறிய நேர்ந்தது. ஒருவன் பெயர் சக்தி வேல். அவனின் ஆசை நூற்றியெட்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேண்டும் என்றான். ஏன் என்றதற்கு . நான்குவழிச் சாலையில் தினமும் ஒரு ஆக்ஸிடெண்டு நடக்கிறது , பார்க்க பரிதாபமாக இரத்தம் ஒழுகி , ஆபத்தான சூழலில் உயிருக்கு போராடுகின்றனர். அவர்களை உரிய நேரத்தில் ஆஸ்பத்திரியில் சேர்த்து , உயிரைக் காப்பற்றவே நான் ஆம்புலன்ஸ் டிரைவராக விரும்புகின்றேன் என்றான்.

                  ஆம்புலன்ஸ் டிரைவராக விரும்பும் மனிதநேயம் மிக்க சக்திவேல்



       அடுத்ததாக துர்க்கா தேவி ,லட்சியங்கள் என்பது வெறும் வாய் வார்த்தைகள் அல்ல , அவை நிஜம் என்று உணர்த்தியவள். அவளின் டாக்டராகும் கனவு என்பது அவளின் கிராமத்து மக்களுக்கு சேவை செய்வது என்று கூறுவதுடன் நிற்காமல் அதற்கான காரியத்தை செயல்படுத்த இப்போதே ஆய்த்தமானவள்.
          
        எங்கள் பள்ளியில் நான் தலைமையாசிரியராக பதவி உயர்ந்த பின் , ஒவ்வொரு வருடமும் அறிவியல் கண்காட்சி , புத்தகத் திருவிழா அதுவும் கிழக்கு சார்பாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருதினங்கள் நடைப்பெறும். அது மட்டுமல்லாது வாசகர் வட்டம் சார்பாக மாணவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் .அப்புத்தகத்திலுள்ளக் கருத்துக்களை படித்து பிறருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.தற்போது மதிய இடைவேளையில் புத்தக் பூங்கொத்து மூலமாக புத்தகங்களை படித்து குழுவில் பகிர்ந்துக் கொள்வதுடன் , குழுவில் ஒருவர் சிறந்ததை அன்று மாலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் .
     இந்த சுயபுராணம் எதற்கு என்றால், நான் அவள் டாக்டராக வேண்டும் என்று சொல்லி காரணத்தை சொன்னவுடன் , வெரிகுட் என்று அடுத்த மாணவருக்கு வாய்ப்புக் கொடுத்தேன், அப்போது அவள் சார், டாக்டராவது எப்படி என்ற புத்தகம் வைத்துள்ளேன்  எனவும் புத்தகத்தை காட்டினாள். வெரிகுட் அப்புறம். பிளஸ் ஒண்ணில் அறிவியல் குரூப் எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால் தான் டாக்டராக முடியும் என்று சொன்னாள்.
(கிழக்குப் பதிப்பகத்திற்கு நன்றி...குறைந்தவிலையில் அழகுற அச்சடித்து புதுமைகள் புரிகிறது.பிச்சுப்பருவத்தில் படிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது.குறைந்த விலை)


                                              லெட்சியச்சிறுமி டாக்டர் தூர்கா தேவி


மூன்றாவதாக மாணவன் தினேஸ் . அவன் நீதிபதியாக வேண்டும் என்றான். ஏன் என்றேன் , குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க , தக்க தண்டனைக் கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றான் விஜயகாந்த் பாணியில் வசனம் பேசினான்.சார், வக்கீல் படிச்சா மட்டும் போதுமா எனவும் என்னிடம் கேள்விகளை எழுப்பி அனைவருக்கும் எது படித்தால் என்னவாகலாம் என்ற ஆவலைத் தூண்டி விட்டான்.  
      
அனைவரும் தங்கள் லட்சியங்களைக் கூறி முடித்தவுடன் ,அவர்கள் பெயருக்கு பின் தாங்கள் உருவாக நினைக்கும் படிப்பை போடச் சொன்னேன். ஆர்த்தி இ.ஆ. ப. , கீர்த்திகா, ஐ.ஏ,எஸ் .,சக்திவேல் 108 ஆம்புலன்ஸ் டிரைவர். பெனாசீர் டீச்சர், வாசுகி ஐ.பி.எஸ்., என போடுவதுடன் , தங்களை அவ்வாறே அழைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி.  மதிய உணவு இடைவேளையில் மாணவி பரிமளம் வந்து சார் , ஐ.ஏ.எஸ் ஆக எது படிக்க வேண்டும் என விரிவாகக் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள். இப்படி மாணவர்கள் தங்கள் முகங்களில் ஒருவித இனம்புரியாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

  இன்று மாணவர்கள் புதுவித பொழிவுடன் வந்திருந்தனர். அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததைவிட அமைதியாக இருந்தனர். இன்னும் படிப்பில் தெளிவாக இருந்தனர். படைப்பாற்றல் கல்விமுறையில் மாணவர்கள் கலந்துரையாடலில் அனைவரும் பங்கு கொண்டனர். சக மாணவனைப்போல என்னிடம் அன்பாக பழகினர். அவர்கள் முன்பைவிட பயம் நீங்கி , என் கை தொட்டுப் பேசுகின்றனர். ஆனாலும் மரியாதைக் குறைவில்லாமல் நடந்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு அவர்களின் முக்கியத்துவமும், என் வழிநடத்துதலும் தேவை என்பதை முன்பை விட அதிகமாக உணர்ந்திருப்பதாகவே எண்ணத் தோண்றுகிறது.
                 பிள்ளையாருக்கு காகித மாலை தயாரிக்கும் மாணவ மாணவிகள்


இன்று காலை பிரார்த்தனை வேளையில் உலக ஓசோன் படலம் பாதுகாப்புத் தினம் பற்றி உரையாடினேன். நம் பூமிக்கு இதனால் உண்டாகும் கேடு பற்றி எடுத்துரைத்தேன். நாம் தான் இயற்கை மாற்றத்திற்கு காரணமாக விளங்குகிறோம். நான் இயற்கையை நேசிக்கவேண்டும். அதற்கு தீமைவிளையும் எதையும் செய்யக்கூடாது என்றேன்.

    மதிய இடைவேலையில் உணவு என்னுடன் அருந்திவிட்டு மாணவர்கள் விளையாடச் சென்றனர். சிலர் வகுப்பறையிலேயே முடங்கி குருப் குருப்பாக அமர்ந்திருந்தனர். நான் என் அறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். மாணவர்களும் மாணவிகளும் காகித மாலை தாயாரித்துக் கொண்டு இருந்தனர். காலாண்டு தேர்வு வருகிறது எனவேஇவ்வாறு தயாரிக்கின்றனர் என நினைத்து படிச்சா தான் மார்க் வரும், சும்மா பேப்பரில்ல இப்படி மாலை செய்து போட்டா , ஒண்ணும் ஆகாது. படிக்கிற வேலையை பாருங்க என்றேன்.
கீர்த்தி மாலைப் பிண்ணிக் கொண்டே சார் இதுல ஸ்ரீ விநாயகர் நமஸ்தே என எழுதி நூற்றி ஒன்று காகித பூக்கள் செய்து நாம மனசுல நினைச்சுகிட்டு, விநாயகருக்கு சாத்தினா நாம நினைச்சது எல்லாம் நடக்கும் என்றாள். இரண்டு சாத்தபோறேன்... போய் படிக்கிற வேலையப் பாருங்கள் என்றேன். ஆர்த்திஐ.ஏ.எஸ். ஓடி வந்து சார்,காலையில் உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தினம் குறித்து ஊர்வலம் கூட்டிகிட்டு போறேன்னு சொன்னீங்கல...ஆனா கூட்டிகிட்டு போகலா... (தேர்வு நேரமாதலால் அனுமதி கிடைக்கவில்லை. நாளை முயன்று பெறுவேன்) அதனால நாங்கள் விநயாகருகிட்ட ஓசோன் படலத்தை காப்பத்து, இயற்கையை காப்பத்த புத்திக் கொடு என்று வேண்டி இந்த காகிதப் பூமாலையை போடப் போறோம் என்றாள்.

     மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டால், அவர்கள் நம்க்கு பாடம் கற்றுத்தருவார்கள். தயவு செய்து ஆசிரியர்கள் செயல் வழிக் கற்றலில் தன்மை உணர்ந்து , அது நல்ல முறையில் நடைப்பெற உதவினால், நாம் சிறந்த மாற்றத்தை மாணவர்களிடமும் , நம் சமுத்திடமும் ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவனை மையப்படுத்தி செயல் படுத்துங்கள் . புதுமைகள் படைக்கலாம்.
மாணவ்ர்களிடம் இருந்து நாம் பெறுவது காகிதப் பூவாக இருந்தாலும் அது நம்க்கு விழும் நிஜப்பூக்கள் ,நிஜத்தை வெளிப்படுத்தும்.

17 comments:

குட்டிப்பையா|Kutipaiya said...

கேட்கவே ரொம்ப சந்தோஷமாயிருக்கு!!

keep up the gud work!!

தெய்வசுகந்தி said...

இப்படி கூட நம்ம ஊரு பள்ளிகள் இருக்குதா என்ன?
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குதுங்க!

Chitra said...

எங்கள் பள்ளியில் நான் தலைமையாசிரியராக பதவி உயர்ந்த பின் , ஒவ்வொரு வருடமும் அறிவியல் கண்காட்சி , புத்தகத் திருவிழா அதுவும் கிழக்கு சார்பாக பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் இருதினங்கள் நடைப்பெறும். அது மட்டுமல்லாது வாசகர் வட்டம் சார்பாக மாணவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் .அப்புத்தகத்திலுள்ளக் கருத்துக்களை படித்து பிறருடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.தற்போது மதிய இடைவேளையில் புத்தக் பூங்கொத்து மூலமாக புத்தகங்களை படித்து குழுவில் பகிர்ந்துக் கொள்வதுடன் , குழுவில் ஒருவர் சிறந்ததை அன்று மாலை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் .

.......முதலில் உங்களுக்கு ஒரு பூங்கொத்து! பாராட்டப்பட வேண்டிய விஷயம் பற்றி அருமையாக எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!
அந்த குழந்தைகளும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

அருமை அருமை - பள்ளி இவ்வளவு அருமையாக நடக்கிறதா - பலே பலே ! நல்ல நிர்வாகத்தின் கீழும் நல்ல தலைமை ஆசிரியரின் கீழும் நடக்கும் பள்ளிகள் நன்கு தான் நடைபெறும். மழலைச் செல்வங்களின் ஆசைகள் நிறைவேற நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

Unknown said...

GREAT SIR,


UNGALAI PONDRu ELLA teachersum eruthu vittal..

Varungala India..olirum.

Anonymous said...

உங்களுக்கு வாழ்த்துக்கள் சரவணன்..
தொடரட்டும் உங்கள் பணி!

தருமி said...

மிக மிக மகிழ்ச்சி, சரவணன். தொடருங்கள் நல்ல ஆசிரியராக ....

மனமுவந்த வாழ்த்துகள்.

vasan said...

என‌க்கு கிடைத்த‌ திரு ஏசுதாஸ் 4,5 ஆம் வகுப்பு ஆசானை நினைவூட்டிய‌து உங்க‌ள் ப‌திவு.
உங்க‌ள் மாண‌வ‌ர்க‌ள் கொடுத்து வைத்த‌வ‌ர்க‌ள்.

Anisha Yunus said...

சார்,

படித்து முடித்தவுடன் மீண்டும் பள்ளிக்கு செல்லும் ஆசை வந்துவிட்டது. உங்களின் பணி உயர்வானதொரு பனி. எங்கள் பள்ளியின் தலைமையாசிரியரை கண்டால்...இன்னமும் தள்ளி நின்று கையெடுத்து வணக்கம் சொல்ல தோன்றும். அவர் ஏதாவது வேலை சொல்லி நம்மை ஏவ மாட்டாரா என்ற ஒரு எதிர்பார்ப்பு (ந‌ப்பாசையோ?) தோன்றும். சில சில பிள்ளைகளுக்கு மட்டுமே அப்படி ஒரு சூழ்நிலையும் தகுந்த ஆசிரியர்களும் கிடைக்கின்றனர். உங்களின் பள்ளி மாணவர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றே நினைக்கின்றேன். அந்த மூன்று செல்வங்களுக்கும் ஆசைகள் நிறைவேறவும்...அதுவரை கொண்டு செல்லக்கூடிய பக்குவமான மனதினை தரவும் இறைவனிடம் து'ஆ செய்கின்றேன்.

சுவாமிநாதன் said...

அருமையான முயற்சி சரவணன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...........

RK Anburaja said...

# மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டால், அவர்கள் நமக்கு பாடம் கற்றுத்தருவார்கள்.

-

அத்துனை நிஜம். நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதென நம்புகிறேன்.

Anonymous said...

ஓர் நல்ல ஆசானை உங்கள் மாணாக்கர்கள் பெற்றிருக்கிறார்கள்..நல்லதோர் சமுதாயம் நாளை வளர..உங்கள் அர்ப்பணிப்பு அளப்பரியது..உங்கள் பனை தொடர வாழ்த்துக்கள்ஆசிரியரே..

Anonymous said...

ஓர் நல்ல ஆசானை உங்கள் மாணாக்கர்கள் பெற்றிருக்கிறார்கள்..நல்லதோர் சமுதாயம் நாளை வளர..உங்கள் அர்ப்பணிப்பு அளப்பரியது..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஆசிரியரே..

சாந்தி மாரியப்பன் said...

அருமையான முயற்சி.. ஆசிரியர்களிடம் மாணவர்கள் தயக்கங்களை உடைத்துப்பேசினால் நிச்சயம் ஒரு புரிந்துணர்வு ஏற்படும், அது நிச்சயமாக அவர்களுக்கு நல்லதே..

வருங்கால சாதனையாளர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மாணவர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி.

ம.தி.சுதா said...

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்...

குமரன் (Kumaran) said...

உங்களையும் உங்கள் மாணவர்களையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது ஆசிரியரே!

Post a Comment