Monday, August 23, 2010

காசு தீரும் வரை ...!

செல் அற்ற வாழ்க்கை
சொல் அற்றது ...

செல் காதல் சொல்லும்
பின் மெல்ல கொல்லும் ...

செல் மொழி
பாற்கடல் அமுது
காதலாய் வரும்போது ....

செல் மொழி
பாகற்காய்
பலருக்கும் மனைவி பேசும் போது ...

செல் மொழி
பொய்மையும் உண்மையாக்கும்
அலுவலக அழைப்பில்
தொலைவிலுருந்தாலும் அருகில் காட்டும்...
பலருக்கும் தொல்லையாய் காட்டும் ...!

செல் மொழி
உயிரோட்டமாய் 
சிரிக்கும் மழலை பேச்சில்...!

செல் மொழி
நகைச்சுவையாய்
வடிவேல் கிளிப்பில்  ...

செல் மொழி
அருவருப்பாய்
வேண்டாத எஸ். எம். எஸ். ல் ...!

செல் மொழி
ஆபத்து
தீவிரவாதத்துக்கு துணையாகும் போது  ..!

செல் மொழி
விபத்து
சார்ஜில் பேசும்போது ..!

செல் மொழி
நேர்காணல்
3ஜி போனில் பேசும் போது...!

செல் மொழி
அனலாய்
அனானிமஸ் காலில் ...!


செல் மொழி
அன்பாய்
அன்னையின் பேச்சில் ...!

செல் மொழி
பண்பாய்
கஸ்டமர் காலில் ...!

செல் மொழி
முகம் சுளிக்க செய்யும்
கத்தி பேசும் நபரை பார்க்கையில் ...!


செல் மொழி
ரசிக்கும்
குழந்தையின் பேச்சில் ..!


இப்படியாய்
செல் பொருள் பொதிந்து
பொருளற்று ...
காதல்  கனிந்து
தன்னை மறந்து
கண்ணை மறைத்து
கத்தியும்
கை பொத்தியும்
பேசும்
பேசிக்கொண்டே இருக்கும்
காசு தீரும் வரை .....!

2 comments:

Jeyamaran said...

மிகவும் அவசியமான கருத்துள்ள கவிதை சார்...........

மோகன்ஜி said...

அடேயப்பா! செல் விஷயத்துல எதுவும் நீங்க பாக்கி வைக்கவில்லை.பதிவை ரசித்தேன்.நானும் என் நண்பரும் புபநேஸ்வரத்தில் அலுவல் வேலையாய்ப் போயிருந்தோம்.ஹோட்டல் அறையில் சிக்னல் கிடைக்காததால்,நண்பர் செல்லை கோபமாய் படுக்கையில் எறிந்தார். நான் அப்போது சொன்னது,"செல்"லிடத்துக் காப்பான் சினம் காப்பான்....

Post a Comment