Sunday, August 22, 2010

நான் மகான் அல்ல

   மதுரை ரோடுகளில் பள்ளம் மேடு கடந்து , வேகமாய் பறக்கும் பைக்கின் பின்னால் , ஹெல்மட் அணிந்து செல்லும் பெண்கள் , "சீக்கிரம் டா" என்ற சிணுங்கலுடன் , புதூரை தாண்டியவுடன் தலை கவசம் கழட்டி, கைகள் இருக்க அவனை அனைத்து , காதல் மொழி பேசி செல்லும் அழகு ரசிக்கும் போது மனது அடித்துக் கொள்ளும் "நமக்கு இது போன்று வாய்க்க வில்லையே". அழகர் கோவில் ரோடு ஆள் நடமாட்டம் இன்றி , காதல் தென்றல் வீசும் அழகு , சில வேளைகளில் நம்மையும் அவர்களை தொடரச் செய்து , ஒரு கேவலமான மனநிலைக்கு உந்தும்.

       இப்படி தான் நானும் என் நண்பனும் கள்அழகரை தரிசிக்க அன்று பயணம் மேற்கொண்டோம். சாலைகள் மலர்கள் தூவி , உடலுக்கு குளுமை தந்து , தென்றல் வீசி வரவேற்றன. சாலை நீண்டது, சாலையில் காதல் மென்று  ஜோடிகள் கடந்தன...அழகர் மலை அவர்களை அன்புடன் வரவேற்றது. மலையின் தனிமை , அவர்களின் இளமை , காதலின் புதுமை ,அவர்களை தனியிடம் தேடி புகழடைய செய்தது.

       மலை அடிவார சிற்பத்தை ரசித்தவாறு ,"மாப்பிள்ளை, என்னடா ரெம்ப பீல் பண்ற ...நிஜத்தில காட்டுறேன்....வா ...மேல போவோம் ...நிறைய நமக்காகவே போயிருக்கு ...உனக்கு நல்ல வேட்டை தரேன்..." என்ற நால்வரை நான் பார்த்த போது எனக்கு ஒரு திகில் இருத்தது. இருத்தாலும் அதை காட்டி கொள்ளவில்லை .
        "பார்த்தியா சரோ , கல்லூரி நண்பர்கள் எவ்வளவு ஜாலியா எதார்த்தமா  இருக்காங்க "
"இப்ப உள்ள பசங்களுக்கு இங்கிதம் தெரியல ...பொது இடங்களில் கேவலமாக பேசுவதும், பொது இடங்களில் காதல் என்ற பெயரில் காமம் தழுவி நிற்பதும் பேசன் ஆகி போனது "என்ற என் அருகில் இருந்த பெரியவர் பேச்சு என்னை மேலும் சிந்திக்க வைத்தது.
    
          நானும் அவனும் தீர்த்தம் ஆடி , சாமி தரிசனம் செய்து , அதற்கும் மேலும் மலையின் இளமை ரசிக்க பயணிக்க ...சிறிது தொலைவில் ஜோடிகள் வரம்பு மீறி , படர்ந்து கிடக்க ... "டேய், வாடா...போதும் கீழ போவோம் ...தேவை இல்லாம எதுக்கு ..."என்றேன். "டேய், பொறாமை படாத , இதுக்கும் மேலே ...உட்சியில்ல போய் பார்த்தா திண்டுக்கல் பார்க்கலாம் ...நாமக்கு முன்னால அந்த கல்லூரி பசங்க போறாங்க பயப்படாம வா " என கூறிக்கொண்டே கடந்தான்.

             ஒரு நிலையில் நான் ...என்னால நடக்க முடியாமல் ...டேய் நீ நட ...நான் அப்படியே ...சிறுநீர் கழித்து வருகிறேன் ..." என கூறி நடப்பதை தவிர்த்தேன்.  அவனும் என்னை தாண்டி கடந்து சென்றான். நான் , ஒரு மர நிழலில் ஒதுங்கி திரும்பிய போது....அவர்கள் வார்த்தைகளின் உண்மையை உண்மையாய்  உணர்ந்தேன். வேட்டையாடி கொண்டிருந்தார்கள்.
அதில் ஒருவன் என்னை பார்த்துவிட்டான். வியர்த்து விறு விறுக்க , தலை தெறிக்க ஓடிவந்தேன். .. இனி எனக்கு என்ன நடக்குமோ...?

             இங்கு நிறுத்தினால் நான் மாகன் அல்ல ... படம் தொடரும் . சாதாரண மனிதனாக இத்தவறுகளை செய்பவர்களை என்மனம் ரோட்டில் நிற்க வைத்து சுடச் சொல்லும் . அக் கதையில் வரும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த கதாநாயகன் என்ன செய்திருப்பான் என்பது தான் கதையின் முடிவு.

         சுசீந்திரன் கதை வடித்த விதம் அருமை. திரை கதை தொய்வில்லாமல் செல்கிறது. காதல் சொல்லி நகைச்சுவையாய் நகர்ந்தாலும், இடைவேளையில் அதிரடி சரமாக வெடிக்கிறது.
        வசனகர்த்தாவை பாராட்டியே ஆக வேண்டும் . திரை கதையை தொய்வில்லாமல் நகர்த்த வசனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
        கமிரா தன் பணியை சுத்தமாக செய்துள்ளது. யுவன் இசை பாராட்ட கூடியது .

    பருத்தி வீரன் கார்த்தி,இதற்க்கு முந்தய படங்களில் சூரியாவின் சாயல் தெரிந்தாலும் , இப்படத்தில் இயல்பான நடிப்பால் காமடி பண்ணி உள்ளார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. கஜால் அகர்வால் நன்றாக வலிந்துள்ளார் .(டைரக்டர் சொன்னத தானே செய்ய முடியும் )
  
கல்லூரி மாணவர்களாக நடித்துள்ள நால்வரும் அருமையாக நடித்துள்ளனர்.

       படம் வேகமாக நகரும் திரை கதையால் வெகுஜனங்களை கவரும். 


சுசீந்திரன் மிக வலுவாக  நம் கல்லூரி மாணவர்கள் செய்யும் தவறுகளை தோலுரித்து காட்டியுள்ளார். காதல் என்ற போர்வையில் தனிமையில் உல்லாசம் காணும் காதலர்களுக்கு நேரும் கதியினை கண்முன்னே கொண்டு வருகிறார். காதல் என்ற பேரில் சல்லி காசுக்கு பிரோஜனம் இல்லாத ஒருவனை நம்மி சென்றால் என்ன நேரிடும் என்பதை தெள்ள தெளிவாக விளக்கி உள்ளார்.

         காதல் செய்யும் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். கல்லூரி செல்லும் பெண்களை வைத்துள்ள பெற்றோகள் அவசியம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். 


பின் குறிப்பு...தயவு செய்து அதில் வரும் வன்முறையை படத்துடன் விட்டு விடவும்.

9 comments:

மதுரை சரவணன் said...

http://veeluthukal.blogspot.com/2010/08/blog-post_22.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice film

Ganesan said...

இப்பொழுது தான் படம் பார்த்துவிட்டு பின்னுட்டம் போடுகிறேன்.

நல்ல படம், காதலர்கள் ஒதுங்க கூடாது என சொல்லும் படம்.

சி.பி.செந்தில்குமார் said...

உங்க விமர்சன்மும்,எழுத்து நடையும் அனுபவமுள்ள பத்திரிக்கையாளன் நடை போல் உள்ளது,வாழ்த்துக்கள்

விஜய் said...

உங்களது எழுத்து நடை மிக தேர்ந்த எழுத்தாளனை போல் உள்ளது.

சிறுகதை எழுத முயற்ச்சியுங்கள் நண்பா

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

விஜய்

Riyas said...

நல்லாயிருக்கு விமர்சனம்

நேசமித்ரன் said...

அதேதான் ...

அடிச்சு ஆடுங்க

ஜெட்லி... said...

நேத்து ரெண்டாவது தடவை பார்த்தேன்ங்க....
உங்க அனுபவ விமர்சனம் சூப்பர்.....

RVS said...

நல்லா எழுதியிருக்கீங்க.. மதுரை சரவணன்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Post a Comment