Saturday, July 10, 2010

வாசிப்பு திறனுக்காக ...

  இன்று காலை புதிய சமச்சீர் கல்வி திட்டத்தின் வாசிப்பு திறனுக்காக என் ஆசிரிய தோழன்களுடன் உருவாக்கிய குறுந்தகட்டின் மேம்பாடு குறித்தும் அதனை மாணவர்களுக்கு எடுத்து செல்வது குறித்தும் கருத்துரையை கேட்க அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியின் மூத்த பேராசிரியர் சாந்தி அவர்களை பார்க்க சென்றேன். இனிமையான வரவேற்பு.

     தமிழர்களின் சிறப்பு பண்பு வரவேற்று உபசரிப்பது. இன்றைய சூழலில் வீட்டிற்கு அழைத்து உபசரிப்பது  என்பது கேள்விக் குறியாக இருக்கிறது . பார்ட்டி என்பது அனைவரையும் அழைத்து ஏதேனும் ஒரு ஓட்டலில் கொடுப்பதாகவே இருக்கிறது.

       ஊரை கூட்டி தெருவில் பந்தலிட்டு, நாலு பேரு பார்க்க , நாற்காலி போட்டு உட்கார்ந்து , உற்றார் உறவினருடன் பேசி, "ஏய், ராமு , இது என் மக புள்ள பேரன் ,சீமையில இருக்காகன்னு சொன்னேல...பெரிய படிப்பு படிச்சுருக்காக..." என நம் பாட்டி சொல்லும் போது  , வெட்கி தலை குனியும் இனிமை எவ்வளவு பணம் கொடுத்தாலும் கொண்டு வரமுடியாது.

     இன்று கையடக்க உலகம் போல் ,சொந்தங்களும் கைக்குள் சுருங்கிவிட்டன.ஆகவே , வீட்டில் வரவேற்று உபசரிப்பது என்பது மறைந்து கொண்டிருக்கும் ஒரு பண்பாகவே உள்ளது.  பெற்றோர்களும் வீட்டிற்கு வேற்று மனிதர்கள் வருவதை தவிர்க்க வலியுறுத்துவதால், நாம் உறவுகளற்று உறங்கி கொண்டிருக்கும் சுவர்களுக்கு மத்தியில் வாழ்கிறோம்.இதுவும் நம்மை தனிமைபடுத்தி , நம் சிந்தனைகளை கரப்பான் பூச்சி போல் அழுகியவைகளை திண்ணும், அருவருக்க தாக்கதாக மாற்றிவிடும்.

       கை அலை பேசி வந்த பின் உறவுகள்  பலப்பட்டதாக நாம் உணர்ந்தாலும், அவை கட்டணங்கள் மூலம் , இலவச அழைப்புகள் மூலம் நம்மின் துரங்களை தான் குறைத்தன. ஆனால் ,உறவுகளின் பந்தங்களை வலுப்படுத்த நேரடி தொடர்பை தவிர்க்க உதவியாக இருந்தன என்பது தான் உண்மை. நேரடியாக சந்திப்பது என்பது உண்மையான அன்பின் வெளிப்பாடாக இருக்கும். நேரடியாக ஒருவரை வீட்டில் அழைத்து பேசுவது என்பது அவருடன் சாதாரணமாக பேசுவதாக இருக்காது .அங்கு வாய் மட்டும் பேசாது, கண், உடம்பு என அத்துனையும் பேசும். ஏன்?,உதிரமும் பேசும்.

   கலைஞ்ர் டி.வி பேச்சாளர் விநாயக மூர்த்தி சந்திப்பு கிடைத்தது. நல்ல ஒரு தமிழ் பேச்ச்சாளர் . அவரின் உரையாடலின் போது தெரிந்தது. அனைவரும்  கஷ்டப்பட்டு முன்னேறி வந்தவர்கள் தான் , கஷ்டம் என்பது வெற்றியின் ஆரம்ப புள்ளி என்பது அவரின் பேச்சு வெளிபடுத்தியது.வைர வரிகள் அவரின் பேச்சின் ஒவ்வரு வார்த்தைகளிலும் தெரிகிறது.

 இந்த சமுகம் ஒரு பொறாமை படைத்தது , நல்ல சட்டை போட்டாலே , இது அந்த வருமானத்தில் தானே கிடைத்தது என காது படவே பேசுகின்றனர்.நண்டு கதை அதற்கு தான் சொல்லி வைத்தான் போல என அவருக்குரிய நகைசுவை உணர்வுடன் பேசினார். அவரின் ஆதங்கத்தையும் வெளிபடுத்தினார். "நானும் தான் ஒரு தமிழாசிரியன் , எனக்கும் சங்க இலக்கியம் தெரியும், புறநானுறு, அகநானுறு கரைத்து குடித்திருக்கிறேன் , பெரிதா அவன கூப்பிடுராங்க ,அதுவும் சம்பந்தமில்லாமல் ஏதோ நாலு ஜோக் சொல்லுறான் , அவனுக்கு பத்தாயிரம் கொடுத்து மரியாதை .." என நீண்ட அவரின் மனவருத்தம் ,அவரை பற்றி பிறர்  கூறும் கருத்துக்கு அவரின் பதிலடி ,"பேச்சு அவை அறிந்த ஒன்றாக இருக்க வேண்டும், அது படித்ததை கொட்டியாதாக இருக்க கூடாது, இது தான் வித்தியாசம் ..."


   பேச்சு வாக்கில் அறிஞ்ர் அண்ணா , இந்திரா காந்தி ஆகியோரின் வாசிப்பு திறன் பற்றி செய்தி புதியாக இருந்தது. இந்திரா காந்தி உலகத்திலேயே வேகமாக வாசிக்க கூடியவர் மேலும் அவரின் பெயர் இதற்காக கின்னசில் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்தேன்.

      " பன்முக திறன் கொண்டவரே ஆட்சி பீடத்தில் அமர முடியும் . சாதாரணமாக முதல்வர் கனவுகாணும் எவரும் அமார முடியாது. பதவியில் உள்ள அனைவரும் நிட்ச்சியாமாக அரசியல் பின்னனி மட்டும் இருக்காது , பன்முக திறமையே அவர்களை வெற்றி அடைய செய்திருக்கும் . ஆகவே உங்கள் முயற்ச்சியில் சோர்ந்து விடாதீர்கள் , , மாணவர்களுக்கு நல்ல ஒரு வாசிப்பு பயிற்சி ஏற்படுத்தி கொடுக்கும் உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன் . மேலும் என்னாலான உதவியை உங்களின் முயற்சிக்கு செய்கிறேன் "என்ற ஆறுதல் வார்த்தை சாந்தி ஆசிரியையின் வெற்றிக்கு டானிக். என்போன்ற வளரும் ஆசிரியர்களுக்கு ஒரு உற்சாக பானம்.     

6 comments:

goma said...

நான் ரசிப்பது திரு சிவகுமார் பேச்சாற்றலை.
எல்லோரும் என்று சொல்ல முடியாது, ஆனாலும் ஒரு சிலர்,
தங்கள் அறிவை வெளிப்படுத்தும் நோக்கமே ,குறியாக சொற்பொழிவாற்றுவர்,
சிலர் எனக்கு எவ்வளவு தெரிகிறது பார்த்தாயா, என்ற தோரணையுடன் கண்கள் மினு மினுக்க கதை சொல்வார்கள்,
சிவகுமார் மட்டுமே,நான் அறிந்ததை அடுத்தவருக்குச் சொல்லும் அடக்கத்தோடு பேசுபவர் என்று நினைக்கிறேன்.

goma said...

தொழில்நுட்பம் ஆற்றியிருக்கும் பெரிய ஒரு சாதனை எது?..
உலக உருண்டையின் ஒரு கோடியில் இருந்து கொண்டு ,ஒரே நொடியில் பலரை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும், வலைப்பூ சாதனதைக் கையாண்டு கொண்டிருக்கிறோமே அதுதான்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கை அலை பேசி வந்த பின் உறவுகள் பலப்பட்டதாக நாம் உணர்ந்தாலும், அவை கட்டணங்கள் மூலம் , இலவச அழைப்புகள் மூலம் நம்மின் துரங்களை தான் குறைத்தன. ஆனால் ,உறவுகளின் பந்தங்களை வலுப்படுத்த நேரடி தொடர்பை தவிர்க்க உதவியாக இருந்தன என்பது தான் உண்மை///

உண்மையான விஷயம்.. தொட்டதற்கெல்லாம்... தொலைபேசி தான் ...
பகிர்வுக்கு நன்றி..

ராம்ஜி_யாஹூ said...

நல்ல பதிவு, ஆனால் ஒரு விசயத்தில் நான் முரண்படுகிறேன்
இந்திரா காந்தி நேருவின் மகளாக இருந்து இருக்கா விட்டால், ஒரு வட்ட செயலாளராக கூட வந்து இருக்க முயாது என்பதே உண்மை.

vasu balaji said...

நல்ல பகிர்வுங்க. நன்றி சரவணன்.

Swengnr said...

okay, super!

Post a Comment