Tuesday, July 20, 2010

நைஜீரியா ராகவன் மதுரையில் ..

    மதுரை காலையிலிருந்து மந்தமாகவே காணப்பட்டது. வெயிலின் கொடுமை தணிந்து காணப்பட்டது. கார்த்திகை பாண்டியன் "இன்று மதுரை ராயல் ஹோட்டலில் மாலை ஐந்து மணிக்கு பிளாக்கர் சந்திப்பு ,ராகவனுடன் கலந்துரையாடல் "என்று சொன்னவுடன் மனம் மகிழ்ச்சியில் துடித்தது .
      
       மதுரை மந்தமாக இருக்க காரணம் ,இருவர். ஒருவர் அமெரிக்கவில் கணினி துறையில் பணிபுரியும் மதுரையில் பிறந்த  திரு எம். என். குமரன் . அவர் கூடல் நகர் என்ற வலைப் பக்கத்தின் சொந்தக்காரர். "செய்யாமல் செய்த உதவிக்கு சொந்தக்காரர் ".

    "வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதை பிறருக்குக்  கொடுப்பது. அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று." பிரஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹுயுகோ.
    
       உண்மை .மதுரையை மறக்காமல் , மதுரைக்கு வரும்போதெல்லாம் தன் துணைவியாருடன் திருமதி ஸ்ரீலேகா குமரன் ஏழை எளிய குழந்தைகளுக்கு உதவி செய்பவர். வாழ்க்கையில் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் அன்னை தெரசாவை நினைவு படுத்துகின்றனர். இம்முறை என் பள்ளியை சார்ந்த நூற்றி இருபது குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்கி உள்ளார்கள்.இதுபோன்று மதுரையில் இருக்கும் வரை தன் பெற்றோர்களை சந்தித்தது போக மீதி நேரங்களில் சீனா அய்யா அவர்களின் வழிகாட்டுதலில் பல உதவிகளை செய்ய காத்துள்ளனர். அவர்களின் குடும்பத்தை வாழ்த்தவே சூரிய கடவுள் தன் வெப்பத்தை தணித்தது போல இருந்தது.


      மற்றொருவர் நைஜீரியா ராகவன் . பார்பதற்கு எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர்.  

         "அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள். அவர்கள் பேசும் பேச்சு , ஜீவனில்லாத கிண்கிணி ஓசை" -பேகன்.

       அன்பு வேற்றுமை பார்ப்பதில்லை, பகைமை நினைப்பதில்லை, ஆணவம் கொள்வதில்லை, சுயநலம் புரிவதில்லை  ... இவை எல்லாம் உண்மையாய் அன்பாய்  ராகவன் வடிவில் .

        புதியவனான என்னை ஒரு பழகிய நண்பனை போல் குடும்பத்துடன் வரவேற்பதில் மேற்கண்ட அனைத்தையும் பார்த்தேன். "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் " இது ராகவன், சீனா, குமரன் ,தருமி ,ஜெர்ரி ஆகியோரின் வாழ்க்கையில் வரமாகவே அமைந்துள்ளது. ஆகவே ,தான் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள். நானும் இந்த வரிசையில் அமர என் மனைவியும் காரணம் ....(திருமணமானவர்களை பேச்சு இல்லர் என்ற ஸ்ரீ  க்காக )


      மனிதன் பிற உயிர்களிடம் இருந்து மாறுபட்டு இருப்பது .... பேச்சை வைத்துதான்.
மொழி வடிவம் கொடுத்து ,தான் நினைப்பதை , மனதில் பட்டதை வடிக்க பேச்சு உதவி புரிகிறது. பேச்சு வாழவும் வைக்கும். வீழவும் வைக்கும்.

   "ரத்தம், உழைப்பு, கண்ணீர் , வியர்வையைத் தவிர , என்னிடம் தருவதற்கு வேறொன்றும் இல்லை. ....நம் லட்சியம் எது என்று நீங்கள் கேட்டால், ஒரே வரியில் என்னால் பதில் சொல்ல முடியும் . வெற்றி, எவ்வையாயினும் எடுத்த காரியத்தில் வெற்றி, அதற்கான பாதை எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் வெற்றி ஒன்றே நம் இறுதி லச்சியம் .வெற்றி இலையேல் நமக்கு வாழ்க்கை இல்லை " என்ற சர்ச்சிலின் பேச்சு இரண்டாம் உலக போரில் பிரிட்டனை ஹிட்லருக்கு எதிராக வீறு கொண்டு எழச் செய்து 
போரில் வெற்றி பெறச் செய்தது.

       மதுரை பிளாக்கர்களின்  சிந்தனையை வெற்றி கொண்டதாக அமைந்தது ராகவனின் கனிவான பேச்சு . யாரையும் புண்படுத்தாத அவரின் பண்பு. நகைச்சுவை கலந்த பேச்சு .
"மதுரை கார பசங்க பாசக்காரங்க ..."என்ற எதார்த்தம். மனைவியை தோழியாக நடத்தும் பாண்பு ,பொறுப்பான கணவனாக காட்டுகிறது. எதையும் சுவைபட சொல்லும் விதம் ...ராகவனை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது.

      "வாய்க்குள் போனது எதுவும் மனுஷனை தீட்டுப்படுத்தாது . வாயிலிருந்து வருவது தான் தீட்டுப் படுத்தும் " -ஏசுநாதர். எதை பேசுவது என்பதை விட எதை பேசக்கூடாது என்பதே  அறிவின் அடையாளம்  . அதை நன்கு புரிந்தவராக ராகவன் உள்ளார்.
   
             இப்படிப்பட்ட  ஒருவர் மதுரையில் இருந்தால் சூரியன் எப்படி தன் வெப்பத்தை வெளிபடுத்தும் . ராகவனின் மதுரை சந்திப்பு சுவாரசியங்கள் தொடரும்....

20 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சந்திப்பும் அழகான பகிர்வும். வாழ்த்துகள் சரவணன். ராகவன் அண்ணனை கேட்டதாக சொல்லவும்.

a said...

பதிவர் சந்திப்பு படமெல்லாம் போடுங்க...

நேசமித்ரன் said...

அர்மதான் அங்கிட்டுதான் திரியுதா
ரைட்டு பங்காளி

நேசமித்ரன் said...

மந்தமாவா ம்ஹும் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல

நேசமித்ரன் said...

"மதுரை கார பசங்க பாசக்காரங்க ..."

ஏண்ணே இம்புட்டுதான் சொன்னாகளா

இருக்கட்டு இருக்கட்டு திரிம்பி இங்கிட்டுதான வந்தாகனும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை சரவணன்
ராகவனை கேட்டதாக சொல்லவும்.

cheena (சீனா) said...

அன்பின் சரவணன்

இடுகை நாம் மனமகிழ்ந்து இருந்த நேரங்களை அழகாகச் சித்தரிக்கிறது. குமரன் : http://koodal1.blogspot.com/2010/07/blog-post_20.html - இடுகை இட்டிருக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறாது நண்பா

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Jerry Eshananda said...

சுடச்சுட செய்தி போட்டு அசத்திபிட்டியேப்பா....

இராகவன் நைஜிரியா said...

மதுரை நண்பர்கள் அனைவரும் வந்திருந்து என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றிகள் பல....

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
"மதுரை கார பசங்க பாசக்காரங்க ..."

ஏண்ணே இம்புட்டுதான் சொன்னாகளா

இருக்கட்டு இருக்கட்டு திரிம்பி இங்கிட்டுதான வந்தாகனும் //

எலே நான் அங்க திரும்பி வருவதற்கு முன்... நீ இங்க வந்தாகணும்... அது ஞாபகம் இருக்கட்டும்..

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
அர்மதான் அங்கிட்டுதான் திரியுதா
ரைட்டு பங்காளி //

எங்கிட்டு திரிஞ்சாலும் உன்ன பத்தி நெனப்பு இல்லாம போகுமா?

புலவன் புலிகேசி said...

நல்ல சந்திப்பு நண்பரே...

இராகவன் நைஜிரியா said...

குமரன் அவர்கள் உள்ளம் மிகவும் பரந்த உள்ளம்... படிக்க மிக்க மகிழ்ச்சியாக உணர்கின்றேன்

தருமி said...

இனிய மாலை. அருமையான நட்புக் கூட்டம். கலக்கலான நேரம். கொட்டோ .. கொட்டோன்னு ஜோக்குகள் ... எல்லாம் முடிந்து கிளம்பும்போதுதான் அம்மாடி .. இம்புட்டு நேரம் ஆய்ரிச்சான்னு தோன்றியது.

தம்பி ராகவனுக்கும், குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.

அரவிந்தன் என் பெயரையும் நினைவில் வைத்துச் சொன்னது ..'அம்புட்டு மகிழ்ச்சி'!

Unknown said...

நிச்சியமாக இந்த பதிவர் சந்திப்பை பற்றி நல்ல கருத்துகளை இணைத்து எழுதியது மிக அருமை.இதுதான் மதுரைகாரங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்

Karthick Chidambaram said...

பதிவர் சந்திப்பு படமெல்லாம் போடுங்க.

Unknown said...

அண்ணாச்சி எல்லோரையும் கேட்டதா சொல்லணும்.. சரவணன் அண்ணே படம் ஏதும் புடிக்கலியா?
அத பாத்து நாங்களும் கலந்துகிட்ட மாதிரி சந்தோசபடுவோம்ல...

கமலேஷ் said...

அருமையான சந்திப்பு...
பகிர்வுக்கு மிக நன்றி நண்பரே..

Riyas said...

//அன்பு வேற்றுமை பார்ப்பதில்லை, பகைமை நினைப்பதில்லை, ஆணவம் கொள்வதில்லை, சுயநலம் புரிவதில்லை ... இவை எல்லாம் உண்மையாய் அன்பாய் ராகவன் வடிவில்//

சரியாய் சொன்னீர்கள் எனக்கும் பிடித்த மனிதர் இவர்..

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா சிங்கம் மதுரையில தான் இருக்கா???

Post a Comment