Monday, July 19, 2010

அறிவை புகட்டுவதா கல்வி ...?

         அறிவை புகட்டுவது மட்டும் கல்வி அல்ல. கல்வி மாணவனிடம் கற்க வேண்டும் என்ற பொறுப்பை விட்டு விட வேண்டும். அவர்கள் கற்பதற்கு ஒரு வழிகாட்டுதலை அமைப்பதாக கல்வி இருக்க வேண்டும். மாணவனை மையப்படுத்துவதாக கல்வி அமைய  வேண்டும்.

        ஆசிரியர்கள் மாணவனின் தேவைகளை பூர்த்தி செய்பவர்களாக இருக்க வேண்டும் . மாணவர்களை கட்டுப்படுத்துபவர்களாக ஆசிரியர்கள் இருக்க கூடாது. ஆசிரியர்கள் செய்வதை அப்படியே பின்பற்றுபவர்களாக மாணவர்கள் இருக்க கூடாது. அதாவது பயனில்லா கற்றல் முறையை பின்பற்றுவதை தவிற்க வேண்டும்.

      தகவல்களை அளிப்பவர்களாக ஆசிரியர்கள் இருப்பவதை தவிர்த்து, தகவல்களை திரட்டி ,மாணவர்களின் இயல்பான ஆர்வத்தை தூண்டுபவர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கண்முடித்தனமாக ஆசிரியர்களை கூறுவதை நம்பி மாணவன் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டிய  அவசியமில்லை.மாணவனின் மாறுபட்டக் கருத்துக்களை அனுமதித்து தொடர்முடிவுகளை எட்டச் செய்யாலாம்.


       செயல் அடிப்படையில் கல்விமுறை அமைந்து , கற்றலின் உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.அனுபவத்தின் வாயிலாக முடிவுகளை கண்டறிய வாய்புகள் தர வேண்டும். தத்துவ ரீதியான ஆன்குமுரைகளை தவிர்த்து , நவீன காலத்திற்கு ஏற்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். கல்விமுறைகளில் சீரிதிருத்தங்க்களை அனுமதிக்க வேண்டும்.

  மாணவர்களின் கற்றல் அவன் சார்த்த சமூகத்துடன் தொடர்புடையாதாக இருக்க வேண்டும். பள்ளியை மையப்படுத்தி கற்றல் நிகழ்வுகள் அமைவதை தவிர்க்க வேண்டும். கற்றல் பள்ளி , வீடு , தெரு, நண்பன் ,உறவு என விரிந்து சமூகத்துடன் தொடர்பு உள்ளதாக அமைந்து , அது அவனுக்கு வாழ்வியல் பண்புகளை போதிப்பதாக அமைய வேண்டும்.

    மாணவர்களிடம் தனிமனித  அறநெறியின்    முக்கியத்துவம் ,சமுகத்திற்கு உகந்தது என்பதை இளமையில் உணர்த்துவதாக இருக்க வேண்டும் . தனிமனித தன்முனைப்பு தவிர்த்து , கூட்டுறவான வாழ்க்கை முறையை பின்பற்ற கல்வி கற்றுத் தருவதாக அமைய வேண்டும்.

   மாணவன் மொழிப்போதனை அவனின் அன்றாட  வாழ்வில் அவன் பயன் படுத்தும் சொற்களை கொண்டு அமைய வேண்டும். எளிதில் தொடர்பு கொள்ள உதவுவதாக மொழி போதனை அமைய வேண்டும்.  மொழி கற்றுக் கொள்ளுதல் என்பது எழுத்தக்களை சொல்லிதருவதன்று , அது பேசுதல் , எழுதுதல் , தகவல்களை   பிறர் உணரும் வண்ணம் பரிமாறுதலாகவும் , எடுத்தியம்புவதாகவும் அமைய வேண்டும்.
      
      அறிவியல் பாடம் மாணவன் இயற்கையோடு தொடர்பு படுத்துவதாக அமைய வேண்டும் . இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி , இயற்க்கை மாற்றத்தை சரி செய்பவனாக  மாணவனை உருவாக்க வேண்டும். இயற்க்கை மீது நம்பிக்கை கொண்டவனாகவும்  ,அதனை காப்பவனாகவும் நம் அறிவியல் மாணவன் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

    மேற்கண்ட அனைத்தும் நம் தமிழகத்தில் செயல் வழிக்கற்றல் முறையில் இருக்கிறது. இருப்பினும் ஆசிரியர்கள் அதை உணர்ந்து கல்வியின் மாற்றத்தை உணர்ந்து , பழைய முறையான மனப்பாடம் செய்தலை விட்டு ஒழித்து, புரிந்து கற்றலை முழுமையாக செயல் படுத்த முன் வரவேண்டும். நமக்கு செயல் வழிக் கற்றலில் ஏற்படும் அசொளகரியங்களை மறந்து , புதுமைகளை கடைபிடித்து வருங்கால  இந்தியாவின் வளமைக்கு உதவ வேண்டும்.

     


.

4 comments:

பனித்துளி சங்கர் said...

,,,,,,,,,அறிவியல் பாடம் மாணவன் இயற்கையோடு தொடர்பு படுத்துவதாக அமைய வேண்டும் . இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி , இயற்க்கை மாற்றத்தை சரி செய்பவனாக மாணவனை உருவாக்க வேண்டும். இயற்க்கை மீது நம்பிக்கை கொண்டவனாகவும் ,அதனை காப்பவனாகவும் நம் அறிவியல் மாணவன் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்......,,,,,,,,,,,,,,,,


மிகவும் சரியாக சொல்லி இருக்கிறிர்கள் . இதையெல்லாம் இப்பொழுது யார் உணர்ந்து சொல்லித் தருகிறார்கள் . நான்கு சுவற்றிற்குள் மொட்ட மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வி என்ற நிலையில் இப்பொழுது போய்க்கொண்டிருக்கிறது அறிவியல் பாடங்கள் .

Ramesh said...

அற்புதம் அருமை.
இயற்கை பற்றிய அறிவு மிக அவசியம் என்பது எனக்கும் பிடித்திருக்கு நண்பா

புலவன் புலிகேசி said...

//அறிவியல் பாடம் மாணவன் இயற்கையோடு தொடர்பு படுத்துவதாக அமைய வேண்டும் . இயற்கையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி , இயற்க்கை மாற்றத்தை சரி செய்பவனாக மாணவனை உருவாக்க வேண்டும்//

அதே அதே......

Joe said...

நல்ல பயனுள்ள இடுகை.

எழுத்துப் பிழைகள் உறுத்துகின்றன. (செயல் வழிக் கற்றல், அசௌகரியங்கள்)

Post a Comment