Thursday, July 8, 2010

இன்றைய காதல்

ஜன்னல் ஓரம்
ஆரம்பித்த காதல்
இரயில் பாதைபோல்
விலகி இருத்தாலும்     
இணையவே துடித்தது...!

காக்கை இட்ட
எச்சம் ஒட்டிய சட்டை போல்
அவள் வாழ்வும் கரையாய் ....

கோப்பை மதுவும் சிந்தியது
குமட்டி வருகிறது வாந்தியும் ..!

இனி மறைக்க ஒன்றும்  இல்லை
என்பதால்
புணர்ந்து முடிந்த நாய் காதலாய்
ஜன்னலோரமே முடிந்தது ...
இருப்பினும்
நாய்கள் துரத்துதல் தொடர்கிறது
அதிக தூரத்துதலுடனும்
முனகங்களுடனும்......!

11 comments:

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வரிகளில் ஒருசில வேண்டாக்காதலை வெளிக்கொணரும் முயற்சி நன்றி பாராட்டுகள்

பனித்துளி சங்கர் said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடி . உண்மையை அருமையாக சொல்லி இருகிறிர்கள் . பகிர்வுக்கு நன்றி

Jeyamaran said...

மிகவும் அருமை

அன்புடன் மலிக்கா said...

காதலென்னும் புனைப்பெயரில் நடந்தேறும்
கலிகாலக்கூத்து..

அருமையான கவிதை

சாந்தி மாரியப்பன் said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பொய்யான காதல் எல்லாக்காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறது..

அன்புடன் நான் said...

இது மனிதர் உணந்துக் கொள்ள மனித காதல் அல்ல!

http://rkguru.blogspot.com/ said...

கவிதை நல்ல இருக்கு..........வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

காதல் இல்லை...வேட்கை...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை

soundr said...

இன்றல்ல,
எல்லா காலத்திலேயும்
இருக்கும்,
இது போன்ற
காதல் வகை.


http://vaarththai.wordpress.com

Katz said...

அருமையாய் எழுதி இருக்கீங்க.
காதல் என்ற வார்த்தையை அவர்கள் உபயோகபடுத்தி கொள்கிறார்கள். சில சமயம் இந்த வார்த்தையை உபயோக படுத்தாமல் அவர்கள் அந்த செயல்களில் ஈடுபட முடியாது. எப்போதோ ஒரு கவிதை படித்த ஞாபகம்.
"அவளை புணர விரும்பினேன். அதை நூதனமாய் சொன்னேன். உன்னை காதலிக்கிறேன் என்று." இந்த மாதிரி தான் ஏதோ வரும்.

Post a Comment