Thursday, June 24, 2010

பெற்றோர்களே உஷார்...

     காதல் வார்த்தைகளில் இல்லை. வாழ்க்கை முறைகளில் தான் காதல் அன்பை உணர்த்தி, அவைகளை நம்பிக்கை அச்சில் வார்த்து , வாழ்தலில் இனிமை கூட்டி   ,வாழ்க்கை உண்மை உணர்த்தி வாழ்க்கையை இனிக்கச் செய்யும் .

ஒருவரை    பிடித்த   மாத்திரத்தில் , காதல் உருவாகிறது என்றால் இது நிரந்தரமானது அல்ல .இனக்கவர்ச்சி காதலாகி , அதுவே வாழ்க்கை என்று வாழும்போது , நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு , தற்கொலையில் முடிகிறது.

   இன்று மதுரையில் பல இடங்களில் மாணவர்கள் இந்த  இனக் கவர்ச்சியில் வாழ்வதை, பேருந்து நிறுத்தம் ,பார்க் , சாலையோர மர நிழல் , மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் என பல இடங்களில் நாம் பர்ர்க்க முடிகிறது வருத்தமளிக்கிறது.

       பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது பாசம் கட்டுவதை உணர்த்த வேண்டும் , தம் கஷ்டத்தை எடுத்து சொல்லவேண்டும். தம் குடும்ப சுழலை காரணம் காட்டி நாம் நம் குழந்தைகளை தண்டிக்க கூடாது .அதை உணர்த்துவதன்  மூலம் குழந்தைகளை நம் கட்டுபாட்டில் வளர்க்கலாம்.

    அதுவம் பெண் குழந்தைகள் இன்று , பாசம் மற்றும் ஒருவிதமான கவர்ச்சி வார்த்தைகளில் ஏமாந்து, பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களாக அவன்(காதலன்) சொல்லுகிற இடங்களுக்கெல்லாம் போவதை  பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டப்பட வைக்கிறது .

  பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு இனக் கவர்ச்சியை பற்றி பேசவேண்டும் . பாலியல் விசயங்களை இருபாலரிடமும் பேசி அவர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்தை உணரவைக்க வேண்டும்.


  குடும்ப வறுமை போக்க நல்ல படிப்பு மட்டுமே உதவும் என்பதை அன்பால் எடுத்து  சொல்லுங்கள் , அதுதான் உண்மையான காதல் வார்த்தை . காதல் அன்பால் மட்டுமே உணரப்படும்.    அன்பு தவறுதலாக உணரப்படுவதை சுட்டிக்காட்டுங்கள். பிறரிடம் இருந்து கிடக்கும் காதல் என்ற பொய்யான அன்பு உடல் இச்சையை நோக்கி உள்ளதை உணர்த்துங்கள் .


        நல்ல படிப்பு ,நல்ல பண்பு, நல்ல நட்பு இவை அமைய பெற்றோர்கள் உதவ வேண்டும். கட்டுப்பாடு என்று , மாணவர்களை ஒரு வட்டத்துக்குள் கட்டுபடுத்தி அடிமை படுத்துவது,  எந்த உறவையும் உதறி தள்ளி புது உறவை தேடச் செய்து , அவனது வாழ்வை திசை திருப்ப ஒரு திருப்பு முனையாகும். அவனது குடும்ப சூழல் மட்டுமே மாணவனை நல்வழி படுத்த உதவும்.. பெற்றோர்களே அலச்சியம் , உங்கள் குழந்தைகளின் லட்சியம் தேய காரணமாகி விடும்.

        மாணவன் திசைமாறி மாய வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு, காதல் என்று வார்த்தை ஜலத்தை நம்பி , வாழ்வை துறக்க செய்வது ,குடும்பத்தின் மீது நம்பிக்கை இழப்பே ஆகும் . ஆகவே  , பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது தம் கோபத்தையோ , இயலாமையையோ காட்டாமல் ,உண்மை உணர்த்தி , வளர்த்தால் , குழந்தை பாதை தவறி , காதல் மாயையில் விழுவதை தடுக்க முடியும்.   

10 comments:

Anonymous said...

"ஒருவரை பிடித்த மாத்திரத்தில் , காதல் உருவாகிறது என்றால் இது நிரந்தரமானது அல்ல .இனக்கவர்ச்சி காதலாகி , அதுவே வாழ்க்கை என்று வாழும்போது , நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு , தற்கொலையில் முடிகிறது."

சரியா சொன்னிங்க சரவணன் சார் ..இப்போதெல்லாம் காதலிக்கறது கூட ஒரு fashion ஆ போச்சு ..

Chitra said...

மாணவன் திசைமாறி மாய வார்த்தைகளில் ஈர்க்கப்பட்டு, காதல் என்று வார்த்தை ஜலத்தை நம்பி , வாழ்வை துறக்க செய்வது ,குடும்பத்தின் மீது நம்பிக்கை இழப்பே ஆகும் . ஆகவே , பெற்றோர்கள் தம் குழந்தைகள் மீது தம் கோபத்தையோ , இயலாமையையோ காட்டாமல் ,உண்மை உணர்த்தி , வளர்த்தால் , குழந்தை பாதை தவறி , காதல் மாயையில் விழுவதை தடுக்க முடியும்.

...well-said! நல்ல பதிவு!

Ahamed irshad said...

Good Post...

AkashSankar said...

யதார்த்தம்....மாணவ பருவம்...அதிக கவனம் தேவை, பெற்றோருக்கு...

M. Azard (ADrockz) said...

//பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு இனக் கவர்ச்சியை பற்றி பேசவேண்டும் . பாலியல் விசயங்களை இருபாலரிடமும் பேசி அவர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்தை உணரவைக்க வேண்டும்.//
சரியா சொன்னீங்க தோழரே .. பகிர்விற்கு நன்றிகள்

vasu balaji said...

அருமையான கருத்துங்க சரவணன். அழகாச் சொல்லியிருக்கீங்க.

அன்புடன் நான் said...

அவசியாமான கருத்து ... நல்லவிதமான தீர்வும் சொல்லியிருக்கிங்க....

கமலேஷ் said...

மிகவும் தேவையான பகிர்வு நண்பரே...நன்றி

அண்ணாமலை..!! said...

சமுதாயத்துக்கு பயன் தருகின்ற
அருமையான..அவசியமான
கட்டுரை நண்பரே!

தெருப்பாடகன் said...

படிக்கும் வயதிலான காதல் எதிர்கால வாழ்கையைப் பாதிக்கத்தான் செய்யும்.
நல்ல கட்டுரை நண்பரே!

Post a Comment