Tuesday, June 1, 2010

தகப்பன் அந்தஸ்தில் ....

      பள்ளிக் கூடம் திறந்தாயிற்று ...கல்வி கட்டணமும் வாங்கி ஆயிற்று . சாரி கட்டியாயிற்று.
    
   பள்ளியில் சேர்ந்து தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கும் அனைத்து மாணவர்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள் . இந்த கல்வி ஆண்டு ஆசிரியர்களுக்கு புதிய கல்வி உத்தியையும் ,  புதிய கல்வி சிந்தனையையும் உருவாக்கட்டும் .இக்கல்வி ஆண்டு முழுவதும் சரஸ்வதி தேவி எம் ஆசிரிய பெருமக்களுக்கு நன்மையையும்  , சொல் வன்மையையும் தரட்டும்.

  "எவன் ஒருவன் மிக அதிகமாக ஏங்குகிறானோ ... அவன் நீண்ட காலம் வாழ்கிறான்...!"
என்ற கலீல் ஜிப்ரான் வரிகளின் படி "நானும் ஏங்குகிறேன் ...நம்  கல்வி புத்துயிர் பெற வேண்டும் என்ற  கல்வி சிந்தனையுடன் நீண்ட நாள் வாழவே ..."


என்  முதல் நாள் பணியில் மிகவும் சிந்திக்க செய்த முதல் வகுப்பு சேர்க்கை ....ஒரு தகப்பனாக வருந்துகிறேன் ." பதினோரு வயது உடைய மனநலம் குன்றிய பெண் , வாய் பேச வராது , சாதாரண உச்சா விஷயத்தை கூட சைகையில் தான் சொல்ல முடியும் , இருப்பினும் இதுவரை எந்த வகுப்பிலும் பள்ளியிலும் சேர்க்க மனமில்லை ,தற்போது உங்கள் பள்ளியின் நோட்டீஸ் பார்த்து வந்தேன் என்ற தகப்பனின் மன வருத்தத்தை கண்டு மனம் வருந்திகிறேன்.

   பள்ளிக்கு அதுவும் முதல் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற மன உந்துதலை விட மகள் பெரியவளாக வளர வளர  தந்தையின் வேதனையை தகப்பன் அந்தஸ்தில் புரிந்து கொள்ள முடிகிறது.  தன்னை உணர வைக்க இந்த கல்வி உதவாதா என்ற ஏக்கம் என்னை பதறச்   செய்தது . அவருக்கு மனநலம் மன்னிக்கவும் மாற்று திறன் பெற்றவர்கள் பள்ளியில் சேர்க்க வழிகாட்டி நம் சமூக அவலத்தை ,ஏற்ற தாழ்வுகளை நினைத்து வருந்துகிறேன்.

         உண்மையில்
         எந்த மனிதனுக்கும்
         நீ கடன்பட்டவனில்லை!
         நீ எல்லா மனிதர்க்கும்
         எல்லாவற்றையும்
         கடன்பட்டிருக்கிறாய் !
என்ற கலீல் ஜிப்ரான் வரிகளுடன் உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன்....!

 

5 comments:

Riyas said...

நல்லது..

"சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி)

ஹேமா said...

நல்ல சிந்தனை வரிகள் சரவணன்.

vanthiyathevan said...

"எவன் ஒருவன் மிக அதிகமாக ஏங்குகிறானோ ... அவன் நீண்ட காலம் வாழ்கிறான்...!"
என்ற கலீல் ஜிப்ரான் வரிகளின் படி "நானும் ஏங்குகிறேன் ...நம் கல்வி புத்துயிர் பெற வேண்டும் என்ற கல்வி சிந்தனையுடன் நீண்ட நாள் வாழவே ..."

"வாழ்த்துக்கள்"
மிகப்பெரும் சிந்தனை இது.

கவி அழகன் said...

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

உண்மையில்
எந்த மனிதனுக்கும்
நீ கடன்பட்டவனில்லை!
நீ எல்லா மனிதர்க்கும்
எல்லாவற்றையும்
கடன்பட்டிருக்கிறாய் !

சூப்பர் பாஸ்.....

Post a Comment