Friday, May 28, 2010

காற்றும் ,நீரும்



இதற்கு அடுத்த சந்ததிக்கு
இந்த கண்மாயும்
காட்ட இருக்காது ...!

அக்கா ...
நாம் வளரும் வரையிலாவது
இந்நீர் குறையாமல் இருக்குமா...!
தங்கையே ...
இன்னும் மனிதன்
மனம் மாறாமல்
அழுக்கு குறையாமல்
இருப்பானானால்  ....
நாம் வளரும் முன்னே
இந்த கால் வைக்கும் அளவு
தண்ணீர் வற்றிவிடும் ...!

ஆறு , ஏரி , குளம்
அத்தனையும்
ஏட்டில் மட்டும் படிக்கும்
கற்பனை கருத்தாகி விடும் ..!

அக்கா...
கம்மாயில் குளிக்கத்தான்
முடியவில்லை ...
காலாவது நனைத்து விடு ...
நாளை சரித்திரத்தில்
நாமும் கற்பனை கதை
சொல்லலாம்...!

தங்கையே ...
வயல்கள் வீடுகளாகி
பூமி தாயின்
உச்சி முதல் பாதம் வரை
முடிந்தளவு துளையிட்டு
இரத்தத்தை தண்ணீராய்
உறிஞ்சினால் ...
பூமி வறண்டு தானே போகும் ...!

அக்கா ...
அது மட்டுமா ...
பிளாஸ்டிக்
வீதி தோறும் பரப்பி ...
மண்ணின்
உயிர் துளையை ...
அடைத்து
உயிர் துடிப்பை நிறுத்தும்
நம் மனித மனம் மாறவில்லை
நீர் எப்படி உள் சென்று
நிலத்தடி நீராய் கிடைக்கும் ...!

தங்கையே ...
காற்றும் ,நீரும்
கடவுளாகி ....
நான்காம் உலகப்போருக்கு
எமனாகும் மனித செயல்
நிறுத்த....
 நாம் இருவரும் கை கோர்ப்போம்
சுற்றுபுறம் காப்போம் ....
நெகிழி தவிர்ப்போம் ....
நாளை சந்ததிக்கு நாமே
முன் உதாரணமாய் இருப்போம் ...!

  


8 comments:

தோழி said...

நல்ல கருத்து!, நல்ல முயற்சி!....வாழ்த்துக்கள்...

Uma Madhavan said...

படமும் கவிதையும் அருமை. தொடரட்டும் தங்கள் பணி

நேசமித்ரன் said...

சமூகப் பொறுப்புள்ள இடுகைகள் சரவணன் சார்

Riyas said...

நீரின் பெருமை சொன்ன உங்கள் கவிதை மிக மிக அருமை...

அமைதி அப்பா said...

ஆறு , ஏரி , குளம்
அத்தனையும்
ஏட்டில் மட்டும் படிக்கும்
கற்பனை கருத்தாகி விடும் ..!//

சிந்தனையைத் தூண்டும் பதிவு.
நன்றி.

insight said...

வாங்க சார் கண்டிப்பா கைகோர்ப்போம் கிரீன் பீஸ் அமைப்பில் சேருங்கள் ...

கவிதை சொல்லவந்ததை அழகாக சொல்லி யுள்ளது.

சாமக்கோடங்கி said...

சரவணன்... உங்கள் கோபம் எல்லாருக்கும் இருக்க வேண்டிய ஒன்று.. இந்தத் தீ எல்லோர் மனத்திலும் கொழுந்து விட்டு ஏறிய வேண்டும்.. உங்களிடம் படிக்கும் குழந்தைகளுக்கும் இதையே விதைக்கிறீர்கள் என நம்புகிறேன்..

நன்றி..

முனியாண்டி பெ. said...

It's good. Written in right time

Post a Comment