Wednesday, May 26, 2010

விடியல்

விடியல்
 இருளின் கடைசி மூச்சில்
பிறக்கிறது ...!

புரச்சியாளனின்  ஒவ்வொரு மூச்சும்
விடியலை நோக்கி பயணிக்கிறது !

   பயணிக்கும் பாதசாரிகளின்
வருகையில் தான்
நடை மேடை ஓர பிச்சை காரனின்
சுவாசமே நடை போடுகிறது
என்றுமே விடியாமல்...!

விடியும்
விடியல் எல்லாம்
விடியலாய் அமைந்தால்
வீதி தோறும்
விண்மீன் குவியலாய்
ஒளி வீசி ...
பொதுவுடைமை
ஜொலிக்குமே...
ஜனநாயகம்
நிலவாய் வந்து
விடியும் விடியளுக்கெல்லாம்
வழி காட்டுமே...
நடை பாதை ஓரம்
நானும் நீயும்
ஒன்றாய் படுத்து
ஒன்றாய் நடந்து
சமமாய் வாழ்வோம் ...!

இந்தியாவில் மட்டும்
இந்தியன் வாழ்வில்
நட்ச்சத்திரம் மின்னும்
நிலவு நகைக்கும்
ஒளி மங்கி ...
இரவு மட்டும்
நீடிக்கும் ...
விடியல் மட்டும்
மாறாமல் ....
என்றுமே விடியாமல் ...
என்னென்றால்
கனவு காண்கிறோம் ...
கனவாகி போன விடியலை
எண்ணி எண்ணி ...!
விடியும் ..
நேற்று போல்
அல்லாமல் ...
இந்தியாவின் தென்கோடி முனையில் ...
ஒவ்வொரு இந்தியனும்
விடியலை தேடி ...
இருளில் பதுங்கி
முகங்கள் தெரியாமல்...
விடியல்
இவன் கண்ணை மறைத்தது போல்
மேகம் மறைத்து விட்டது
என்று சொல்லியே ....
நித்தம் ஏமாந்தவனாய்  ...
உன்னையும் என்னையும் போல் ...!

2 comments:

பனித்துளி சங்கர் said...

/////////பயணிக்கும் பாதசாரிகளின்
வருகையில் தான்
நடை மேடை ஓர பிச்சை காரனின்
சுவாசமே நடை போடுகிறது
என்றுமே விடியாமல்...!
//////////

நான்கு வரிகளில் சிம்மாசனம் . அழுத்தமாகவும் , ஆழமாகவும் சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

ஹேமா said...

நாட்டுப் பற்றும் காதலும் கலந்து
அருமையாயிருக்கு சரவணன்.

Post a Comment