Tuesday, March 30, 2010

தூரத்து நிலவு ..!

உச்சி வெயில்
மண்டையை பிளந்தது...
நாடி நரம்பு எல்லாம் தளர்ந்தது ....
நா வறண்டது...
சாலையோரம் மரம் தேடி ..
சாய இடம் தேடி
அலைந்தது....
சர் ..சர்..என பறக்கும் கார்கள் ...
விர்.. விர் என பறக்கும் பைக்குகள்....
அனல் மட்டும் கக்கின....
எட்டும் தொலைவில் எதுவும் தெரியவில்லை ..
நெடும் சாலை என்பதாலோ...
தண்ணீர் லாரியும் பறந்தது...
தண்ணீர் இன்றி....
வெட்க்கைக்கு  கண்ணீரும் வர மறுக்கிறது...
தள்ளாடி நடந்த கால்கள் ...
கண்தொலைவில் கடை கண்டு
விரைந்தது.....
தண்ணீர் குடம் காலி..
அய்யா தண்ணீர் தாங்க
தாகம் உயிரை எடுக்கிறது ...
காசு தாப்பா ...
ஒரு லிட்டரா...இரண்டா....
என்றபோது
பாட்டிலில் தண்ணீர்....
என்னை பார்த்து பல் இளித்தது ...
காசு இல்லாத எனக்கு
பாட்டில் தண்ணீரும் ...
தூரத்து நிலவாய் தெரிந்தது...!

4 comments:

நேசமித்ரன் said...

பொறுப்புள்ள இடுகை

:)

Ramesh said...

///காசு இல்லாத எனக்கு
பாட்டில் தண்ணீரும் ...
தூரத்து நிலவாய் தெரிந்தது...!///
நெகிழ்சி
நல்ல பதிவு
கவிதை

Balamurugan said...

அருமை.
எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வரிகள்.

அன்புடன் மலிக்கா said...

எதார்த்தவரிகளுக்கு கவிதை குளிர்கிறது

Post a Comment