Sunday, February 21, 2010

தமிழ் மொழி அறிவை கதைகள் வாயிலாக கற்றுத் தருவது எப்படி?

தமிழில் கதைகளை கற்றுத்தருவது எப்படி?
தமிழ் மொழி அறிவை கதைகள் வாயிலாக கற்றுத் தருவது எப்படி?
 
    மாணவர்களுக்கு பிடித்த கதை புத்தகத்தை முதலில் தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும். இன்று தமிழக அரசு தொடக்க கல்வியில் "பூத்தக பூங்கொத்து" வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கி மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் வர செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல் பட்டு வருகிறது.
    
       நல்ல தரமான புத்தகங்கள் , அருமையான அட்டை படத்துடன் , தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழின் வளமும் மாறாமல் பல மொழிபெயர்ப்பு கதைகளும் உள்ளன. சில பட புத்தகங்கள் மிகவும் அருமையாக கொடுக்கப்பட்டுள்ளன. பல புத்தகங்கள் தமிழக ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் கற்று தருவது மிகவும் கஷ்டமானதாக ஆசிரியர்கள் உணருகிறார்கள்.பாடம் சாராத சுமையாக இருப்பதாலோ என்னவோ?

       குழந்தைகளின் வயதுக்கு , அறிவுக்கு தகுந்த வகையில் முதலில்தந்துள்ள புத்தகங்களை  பிரித்து கொள்ளவும். தனியாக கடையில் வாங்கி கற்று தர நினைக்கும் பெற்றோர்கள் , தம் குழந்தையின் அறிவிக்கு தகுந்த மாதிரி புத்தகங்களை தேர்ந்து எடுத்து , தமிழ் அறிவை வளர்க்கலாம். புத்தகங்களை மாணவர் எளிதில் எடுக்கும் வகையில் , துணி காயபோடும் கயிற்றில் , அழகாக  தொங்கப்போடவும். மாணவன் புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம் அதை பாடிக்க வேண்டும் என தோன்றும். அல்லது அதை பார்க்கும் போதெல்லாம் அவனாகவே கதை சொல்ல ஆரம்பித்து விடுவான்.

        ஒரு புத்தகத்தின் கதை சொல்லும் முன் ,அந்த புத்தகத்தின் அட்டையை காண்பித்து , அது சம்பந்தமாக அவன் என்ன நினைக்கிறான்  என்று மாணவனிடமே கேட்டு , அவனின் கற்பனை திறத்தை வளருங்கள்,குழந்தைகளின் கதைகள் பிரமிப்பை உண்டாக்கும்.(எனக்கு கிடைத்த கதைகளை உங்களுக்கு "குழந்தைகள் கதை "என்ற தலைப்பில் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்)  .   சிலர் திரைப்படத்தின் கதையை சுவரொட்டிகளை வைத்தே சொல்லி விடுவார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் அப்படி கதை சொல்லி அசத்தி இருக்கார். பல குழந்தைகள் இவ்வாறு உண்டு, அவர்கள் பேசுவதை உன்னித்து பாருங்கள்,உணர்வீர்கள் .

        தற்போது , கதை மீது ஆர்வம் உண்டாகி இருக்கும். தாங்கள் எந்த புத்தகத்தை எடுத்து சொல்லி தர போகிறீர்களோ, அப்புத்தகத்தை தாங்கள் முன்னரே படித்து பார்த்து , அவரில் உள்ள கடின வார்த்தைகளை எடுத்து குறித்து வைத்து இருக்க வேண்டும். தற்போது , கடின வார்த்தைகளை நேரடியாக கூறாமல் , அவற்றிற்கு தகுந்த வாக்கியங்களை மாணவர் மத்தியில் கூறி , அறிமுக படுத்தவும் . தெரிந்த விசயத்துடன் தொடர்வு படுத்தி விளக்கவும்.

    கடின வார்த்தைகளை கற்று கொடுத்த பின் , அந்த கதையை கூறவும் ,மாணவன் தற்போது கதை அறிந்தவுடன் , புத்தகத்தை அவனுக்கு வாசிக்க கற்று கொடுக்கவும்.   
 வாசித்த பின் , கதை தொடர்பான கேள்விகளை கேட்கவும் . கதையில் வரும் கருத்தை வலியுறுத்தி , புதிய கதை சொல்ல செய்யவும். கதையின் தத்துவத்தை கூற சொல்லவும்.

     கடின சொல், கொண்டு புதிய கதை வுருவாக்க செய்யலாம். அல்லது கதைகளை வரும் சொற்களை சில கொடுத்து , அவற்றின் வாயிலாக கதை வுருவாக செய்யலாம். மாணவர்களை குழுவாக அமர செய்து கதை வடிக்க செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.

முயன்று பாருங்கள். மாணவனின் கற்பனையுடன் தமிழ் வளர்வது புரியும். கற்றல் கற்பித்தல் தொடரும். 

7 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
Starjan (ஸ்டார்ஜன்) said...

சரியான கருத்துக்கள் , ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோரும் கவனிக்கவேண்டியது .

நல்ல பதிவு சரவணன் .

Thekkikattan|தெகா said...

Sara, நல்ல ஆலோசனைகள். சிறு வயதிலேயே புத்தகங்களின் மீது காதலை வளர்த்து விட்டால் வேறு எது அவர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த பரிசாக இருக்க முடியும். முயற்சிகள் மென்மேலும் வளரட்டும்.

//"பூத்தக பூங்கொத்து"// - புத்தக பூங்கொத்து?

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல யோசனைதான்.

Muruganandan M.K. said...

குழந்தைகள் கல்வி சம்பந்தமான உங்கள் பதிவுகள் பலருக்கும் உதவும்.

மதுரை சரவணன் said...

சைவகொத்துபுரொட்டா,டாக்டர்.எம்.கே.முருகானந்தம்,சடர்ஜன்.தொகா...மற்றும் தொடர்ந்துபடித்து வரும் அனைவருக்கும் நன்றி.

Anonymous said...

குழந்தைகளுக்கான அறிவுகதைகள், நீதிகதைகள், நகைசுவை கதைகள், தமிழ் அறிவு கதைகள் கீழ்கண்ட வலிப்பூவில் மிக எளிமையாக காணலாம்
http://tamilarivukadhaikal.blogspot.in/

Post a Comment