Saturday, January 9, 2010

என் நேசிப்பு

உந்தன் நடை
சுண்டி இழுக்கிறது !
உன்னை பின்பற்ற
துடிக்கிறது !
எத்தனிபேர் தொடர்தாலும்
என்னை போல் உன்னை
ரசித்தவனும் மில்லை
நேசிப்பவனும் எவனுமில்லை !

கட்டிலில் உன்னை
புரட்டி புரட்டி
ரசிக்கச் செய்தாய் !
உந்தன் கவர்ச்சியில்
விடிந்தது கூட
தெரியவில்லை !

அந்த எலவ
எத்தனை தடவதான்
படிப்பீங்க !
விடிந்து போச்சு
தூக்கி போட்டு தூங்குங்க
என் மனைவி
குரல் கேட்டு
உன்னை என் நெஞ்சோடு
வைத்து உறங்கினேன்!


நீங்களும் வாசித்து
பாருங்கள் !
என் நேசிப்பு
புரியும் !
காதலியின் முத்தத்தை
காட்டிலும் இனிக்கும் !   
மனைவியின் மந்திரத்தை
மட்டுபடுத்தி
மதி மயக்கும் மாது
இந்த வாசிப்பு!
 

1 comment:

திருவாரூர் சரவணா said...

வாசிப்பை சுவாசம் போல நேசிக்க வேண்டும். வாசிப்பு என்றால் புத்தகங்களை மட்டும் படிப்பது இல்லை...நமக்கு ஏற்படும் அனுபவங்களையும் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களையும் வாசிக்க கற்றுக் கொண்டால் யாரும் எதிர்பாராத கோணம் கிடைக்கலாம். நம் பிரச்சனைகளுக்கு எளிமையான முறையில் தீர்வுகள் கூட கிடைக்கலாம்.

Post a Comment