Saturday, January 30, 2010

படிப்பது ....கடினமாக தெரிவது ஏன்?

படிப்பது என்பது மிகவும் கடினமாக தெரிவது ஏன்?

   ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியை ஒரு மதிப்பெண் நோக்கில் வழங்குவதால் , மாணவர்கள் கல்வியின் மீது கொண்டுள்ள ஆர்வம் குறைவதற்கு காரணமாக அமைகிறது.

     முன்பெல்லாம் ஆசிரியர்கள் ஒரு பாடம் கற்றுத்தரும் போது நீதிக் கதைகள் , சுதந்திர போராட்ட வீரர்கள் கதைகள், தமிழ் நாடு அரசியல் தலைவர்கள் பற்றிய செய்திகளை கலந்து , சுவைபட கற்றுத்தருவார்கள்.
    
      ஆனால் இன்று மதிப்பெண் மட்டுமே குறியாக இருக்கும்போது , பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் புரிந்ததோ இல்லையோ , மார்க்கார்டில் மதிப்பெண் மட்டுமே பார்ப்பதால் போதுமென்று , சுவையான உணவாக தரவேண்டிய கல்வியை , கசப்பான செரிக்காத உணவாக திணிக்கிறார்கள்.

      மாணவர்களும்  போட்டியான உலகில் புரிந்தும் , புரியாமலும் அவசர அவசரமாக பயின்று , தேர்வில் வாந்தி எடுத்து விடுகிறார்கள். தேர்வு முடிந்து ஏதாவது சந்தேகம் , அவனை விட இளையவர்கள் கேட்டால் , சொல்ல தெரிவது இல்லை.

       மாணவர்களுக்கு கல்வி ஆயுள் முழுவதும் பயன் தருவதாக அமைய வேண்டும் . மாணவர்களின் அனைத்து திறன்களும் வெளிபடுத்துவதாக கல்வி கற்றுத்தர வேண்டும்.
         மாணவர்கள் புத்தக அறிவு மட்டும் பெற்று இவ்வுலகிற்கு நன்மை செய்து விட முடியாது. மேலும் மாணவன் தன் முழு திறன்களை பெறுவதனால் மட்டுமே, தன் பெற்ற கல்வி அறிவை பயன் படுத்த முடியும். உடல் திறன் வளர்க்க விளையாட வேண்டும். தன் தனித்திறமை வெளிப்பட கலை, பண்பாடு , இலக்கியம் ஆகியவற்றின் மீது ஆர்வம் ஏற்படுத்தி , மாணவனை பங்கு கொள்ள செய்ய வேண்டும்.

          மாணவன் பிற துறைகள் மீது ஆர்வம் ஏற்படுத்துவதன் மூலம் சமுகாத்தின் மீது அக்கறை கொள்ளச்செய்ய முடியும். சமுக அக்கறை கொண்ட கல்விமுறையே , மாணவ நலனுக்கு நல்லதாகும்.  சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியே சிறந்ததாகும்.
   
          ஆகவே, தயவு செய்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் சமுகத்தின் மீத அக்கறை கொண்டு, மாணவனுக்கு சமுக அக்கறை ஏற்படுத்தும் கல்வியை கொடுக்க உதவ வேண்டும். கல்வி முறையில் மாற்றங்கள் உண்டாக அனைவரும் பாடுபட வேண்டும். வாந்திஎடுக்கும் கல்வி போக்கி, சமுக அவலங்களுக்கு மருந்திடும் கல்வி ஏற்பட்டுத்த வேண்டும்.

1 comment:

Ramesh said...

நல்ல பதிவு
மாணவர்களின் கல்வி மதிப்பெண்களிலேயே இருக்கிறது. கற்றுக்கொள்வதில் இல்லை.. கவலைக்குரிய விடயமே

Post a Comment