Wednesday, January 6, 2010

என் கவிதை

நான் நினைப்ப தெல்லாம்
கவிதை ஆவதில்லை !
நான் வடித்த கவிதை
நம்பும்படி இல்லை!
நான் நினைத்த மாதிரி
அமைவ   தில்லை!

சமுகத்தின் சல்லிவேர்களை
சாடாமல் போனாலும்
ஆணிவேர்களை ஆட்டாமல்
விட்ட   தில்லை!

என் கவிதை ஆசிட் 
பட்டு பட்டு 
பட்டுப் போன மரங்கள் 
பல பல !

சமுக அவலங்களை சாடி
கத்தி இன்றி
இரத்தமின்றி சுத்தமாய்
அறுவை சிகிச்சை செய்வன
என் கவிதைகள்!

சாகியம் போசும் சமுகத்தில் 
கால் நீக்கி
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென  
சாதனை படைக்கும் 
சாகா வரம் பெற்றவை  
என் கவிதைகள்!

சிந்தினை தூண்டி விட்டு 
சின்ன இதயத்தில் 
மனிதநேயம் வளர்க்கும் 
மகா கவிதைகள் 
இறைமை தன்மை பெற்று 
இன்றும் இயங்கிகொண்டிருப்பவை!

3 comments:

Ramesh said...

///சாதியம் போசும் சமுகத்தில்
கால் நீக்கி
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென
சாதனை படைக்கும்
சாகா வரம் பெற்றவை
என் கவிதைகள்!///

பிடிச்சிருக்கு கவிதை
இங்கு 'சாகியம் பேசும் சமூகத்தில்' என்று வந்திருக்க வேண்டும் திருத்திங்க நண்பரே.

கலையரசன் said...

அருமைய்யா.. அரும!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

Post a Comment